திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (2)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (2)

மாடி முற்றத்திலே
தோட்டம் போட்டேன்.
செம்பருத்தி மலர் செடியை
வாங்கி வைத்தேன்.



அவள் மலர்ந்து மணம்
வீசத் தொடங்கி விட்டாள்
என் மனதையும் கவர்ந்து
விட்டாள் .

காலையில் எனைக் காண
மொட்டாக குவிந்து நிற்பாள்
ஆதவன் வந்ததும் மலரும்
தாமரை போல.

சில நாள் கழித்து உன்னிடம்
ஒரு கோரிக்கை என்றாள்.

தயக்கம் எதற்கு ?
சொல் என்றேன்.

எனக்கொரு தங்கை
வேண்டும்என்றாள்
அவ்வப்போது
உரையாடி மகிழ

அதற்கென்ன ஒருத்தியை
அழைத்து வருகிறேன்
உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி
என்றேன் நெகிழ்ச்சியாக

இந்த வயதான காலத்தில் யார்
என்னோடு பேசுகிறார்கள். ஏதோ
உன் போன்ற அன்பும் பாசமும்
கொண்டவர்களைத் தவிர
என்றேன் அவளிடம்

தெருவில் அடுத்த நாள்
பூ செடிகள் வாங்கலையோ
என்ற குரல் தேனாய்
காதில் பாய்ந்தது.




வாங்கி வைத்தேன் ஒரு ரோஜா
செடியை பூத்திருக்கும் ஒரு மலருடன்.
தன் ஆசை நிறைவேறிய செம்பருத்தி
மகிழ்ந்தாள்.

ஆனால் என்னவோ ரோஜா செடி
தன் பிறந்த வீட்டு நினைவாகவே
இருந்தது போலும் சரியான
வளர்ச்சியில்லை.என்னதான்
நான் நன்றாக கவனித்துக்
கொண்டபோதும் 

ஏனம்மா என் வீட்டில் ஏதாவது
குறையோ என்று கேட்டேன்.
நான் உன்னை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லையோ
என்றேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை.
என்குடும்பத்தை விட்டு பிரிந்து
வந்தது என்னமோ போல்
இருக்குது. என்றாள்.  அவள்.

கவலைப்படாதே. ரோஜாவே
உன்னை நான் என் கண் போல்
பார்த்துக்கொள்வேன்.

நாம் எல்லோரும் இவ்வுலகில் 
வாழும் உயிர்கள்தானே 

நான் மனித
உடலில் குடிகொண்டிருக்கிறேன் 
நீ தாவர செடியில் குடியிருக்கிறாய் 
அவ்வளவுதானே 

நம் வடிவங்கள்தானே 
வேறு வேறு .

நாம் எல்லோரும் இந்த
பூமித்தாயின் குழந்தைகள்தானே 


இந்த உண்மையை 
புரிந்துகொண்டால் 
போதும் நீ எங்கிருந்தாலும் 
மகிழ்ச்சியாக 
இருக்கலாம் என்றேன்.  

உன் விளக்கம் மிக மிக அருமை 
இதுவரை யாரும் பொறுமையாக 
என்னிடம் பேசியதும் கிடையாது 

என் உணர்வுகளையும் 
புரிந்து கொண்டது கிடையாது 
என்றது ரோஜா  செடி 

இப்பொழுதுதான் என் 
மனம் அமைதி அடைந்துவிட்டது.
என்று புன்னகை பூத்தது ரோஜா செடி.  
 (தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக