திங்கள், 24 ஆகஸ்ட், 2015

மாடியிலே தோட்டம் போட்டேன் (5)

மாடியிலே தோட்டம் போட்டேன் (5)

புதிய வரவு -பட்டு ரோஜா 



மாடியிலே இருக்கும் முற்றத்திலே
தாவரங்களின் சுற்றம் பெருகி கொண்டே
போகிறது.

தரையிலே ஈரம்
அதனால் துவங்கிவிட்டது
எறும்புகளின் சஞ்சாரம்

அதை பிடித்து தின்ன
தத்தி தத்தி வந்துவிட்டது
தவளைக் கூட்டம்.

புதிய வரவு -பட்டு ரோஜா செடி. 
காலையிலே கடைக்கு போய்விட்டு
வந்தேன்.

வீட்டை ஒட்டி நறுமணம் வீசும்
கழிவு நீர் ஓடையின் ஓரத்திலே
ஓராயிரம் செடிகள்

எதுவும் நான் நட்டு பராமரிக்கவில்லை
அதுவாகவே முளைத்து தழைத்து
ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருந்தன.

அப்போது ஒரு மெல்லிய குரல் என்
காதில் கேட்டது. அண்ணா கொஞ்சம்
கீழே உன் பார்வையை திருப்பு .


















திரும்பியதிசையில் பட்டு ரோஜா செடி
ஒன்று இரண்டு பூக்களுடன் என்னைப்
பார்த்து சிரித்தது . ஐயோ ! அப்படி அழகு

ஆஹா நம்முடைய மாடி முற்றத்தில்
எடுத்து சென்று வளர்க்கலாமே என்று
தோன்றியது .

குனிந்தேன்,,செடியை கையில் எடுத்தேன்.
வீட்டில் ஒரு உடைந்த மக் இருந்தது

அதை "மக்கு "என்று நாம் சிலரை ஒதுக்கி
வைப்பதைப் போல் அதை தூக்கிப் போடாமல்
வைத்திருந்தேன்.

அதில் கொஞ்சம் மண்ணை நிரப்பி அந்த செடியை
நட்டு தண்ணீர் ஊற்றிவிட்டு உள்ளே சென்று திரும்பி வருவதற்குள்
இரண்டு மொட்டுக்கள் மலர்ந்து என்னை பார்த்து புன்முறுவல் பூத்தன



கையால் பறிக்கப் போனேன் . என்ன மென்மை !
பறிக்க மனமில்லை .அப்படியே விடவும் மனமில்லை.
சிறிது  நேரத்தில் வாடி வதங்கி உதிர்ந்துவிடும்.

பட்டு ரோஜாவே !பட்டு ரோஜாவே
என் உள்ளத்தை தொட்ட ரோஜாவே 
மென்மையாய் இருக்கின்றாய் 
ஆனால் பார்த்தவுடன் அனைவரையும் 
வசீகரிக்கும் மேன்மை குணமும் 
கொண்டவளாய் திகழ்கின்றாய். 

இவ்வுலகில் வாழும் காலம் மிகவும் 
குறைவாக இருந்திடினும் அதை 
குறை என்றென்று எண்ணாது 
காண்போருக்கும் இன்பத்தை தந்து 
துன்பத்தை மறக்க செய்கின்றாய்.

இவ்வுலகில் மனிதர்களாகிய நாங்கள் 
நீண்ட காலம் வாழ்ந்து என்ன பயன்?

அனைவருக்கும் துன்பம் தருகின்றோம் 
அகந்தை கொண்டு பிறர் மீது ஆதிக்கம் 
செலுத்தி அல்லல்படுகின்றோம். 

இறைவன் எங்களுக்கு அளித்த வரங்களை 
நினைந்து இன்பம் அடையாது என்றென்றும் 
கவலைக் கடலில் மூழ்கி துன்பப்படுகின்றோம்.

இனி உன்னைக் கண்டேன் 
உன் உயர்வான குணத்தைக் கண்டேன்.
உன்னைப் போல்  நானும் பிறர் முகத்தில் 
மலர்ச்சி ஏற்படும் வகையில் வாழ முயலுவேன். 

கீதையில் கண்ணன் தனக்கு 'ஒரே ஒரு மலரை 
சமர்ப்பணம் செய்தாலே போதும் நான் மகிழ்வேன் 
என்றது நினைவிற்கு வந்தது.



அதற்கு தகுதியானவள் நீதான் .
எனவே உன்னை அவன் 
பாதங்களில் சமப்பிக்கின்றேன். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக