(சு)(தந்திர ) தினம்
15.8.2015
வந்தே மாதரம்
வாழ்க சுதந்திரம்
வந்தே மாதரம் என்போம்
வாய் கிழிய கூச்சல் போடுவோம்
பல்லாயிரம் உயிர்களை பலி
கொடுத்து அன்னியரிடமிருந்து
பெற்ற விடுதலை நாளில்.
நம்மை காக்கும் பூமி தாயை
போற்றி துதிப்போம் ஆனால்
மணலையும் தாதுக்களையும்
வெட்டி காசு பார்ப்போம்
நமக்கு நீர் தந்து, உயிர் வாழ
பயிர்களுக்கு உரம் தரும்
நதிகளை நச்சுக் கழிவுகளைக்
நாசமாக்குவோம்.
ஊழலுக்கு துணை நின்றுகொண்டு
ஊழல் ஊழல் என்று கோஷம் போடுவோம்
மற்றவர்களிடையே நல்லவர் போல்
வேஷம் போடுவோம்.
உழைத்து பிழைப்பவர் வாழ்வை
சுரண்டி கொழுப்போம் .கொழுப்பைக்
கரைக்க கோடிக்கணக்கில் காசைக்
கரைப்போம்.
நெஞ்சிலே எப்போதும் வஞ்சம்
எதற்கெடுத்தாலும் லஞ்சம்
முகத்திலே எப்போதும் புன்னகை
அகத்திலே எப்போதும்பொறாமை
சுயநலம் என்னும் நச்சு புகை.
அதனால் அண்டை வீட்டாருடன்
உலகில் எப்போதும் பகை
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவது மற்றும் நடிப்பது
நம் அனைவருக்கும் கை வந்த கலை.
உழைப்பவன் வாழ்வில் உயர்வில்லை
அவர்களை ஏமாற்றி திரிபவன்
அடிக்கிறான் கொள்ளை.
ஏழை ஏழையாகவே நடுத்
தெருவில் எதற்கும் வழியின்றி.
கிடக்கிறான் வாழ்கிறான்
மாண்டு போகிறான்.
பணக்காரனோ சேர்த்த காசை
என்ன செய்வதறியாது பொய் கணக்கை
காட்டி அரசை ஏமாற்றி திரியறான்.
கோடிக் கணக்கில் பாதுகாப்பு செலவு
இருப்பினும் எவன் வேண்டுமானாலும்
எங்கு வேண்டுமானாலும் நம் நாட்டிற்குள்
நுழையறான் சகட்டுமேனிக்கு
நம்ம மக்களை கொன்று குவிக்கிறான்.
எதற்கு என்று யாருக்கும் தெரியாது
அதற்கு இங்கே சில துரோகிகள் உடந்தை
நாட்டு நலனில் அக்கறையில்லாத
அரசியல் கட்சிகள். சொந்த வீட்டு
நலனில் மட்டுமே நாட்டம்
கொண்ட அரசியல் தலைவர்கள்.
சிந்திக்க திறனை இழந்துவிட்ட
பொது மக்கள்.
என்னடா சுதந்திரம் ?
எதற்கடா சுதந்திரம்?
யாருக்கு சுதந்திரம்?
ஒன்றுமே புரியவில்லை.
pic-courtesy-google images
15.8.2015
வந்தே மாதரம்
வாழ்க சுதந்திரம்
வந்தே மாதரம் என்போம்
வாய் கிழிய கூச்சல் போடுவோம்
பல்லாயிரம் உயிர்களை பலி
கொடுத்து அன்னியரிடமிருந்து
பெற்ற விடுதலை நாளில்.
நம்மை காக்கும் பூமி தாயை
போற்றி துதிப்போம் ஆனால்
மணலையும் தாதுக்களையும்
வெட்டி காசு பார்ப்போம்
நமக்கு நீர் தந்து, உயிர் வாழ
பயிர்களுக்கு உரம் தரும்
நதிகளை நச்சுக் கழிவுகளைக்
நாசமாக்குவோம்.
ஊழலுக்கு துணை நின்றுகொண்டு
ஊழல் ஊழல் என்று கோஷம் போடுவோம்
மற்றவர்களிடையே நல்லவர் போல்
வேஷம் போடுவோம்.
சுரண்டி கொழுப்போம் .கொழுப்பைக்
கரைக்க கோடிக்கணக்கில் காசைக்
கரைப்போம்.
நெஞ்சிலே எப்போதும் வஞ்சம்
எதற்கெடுத்தாலும் லஞ்சம்
முகத்திலே எப்போதும் புன்னகை
அகத்திலே எப்போதும்பொறாமை
சுயநலம் என்னும் நச்சு புகை.
அதனால் அண்டை வீட்டாருடன்
உலகில் எப்போதும் பகை
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவது மற்றும் நடிப்பது
நம் அனைவருக்கும் கை வந்த கலை.
உழைப்பவன் வாழ்வில் உயர்வில்லை
அவர்களை ஏமாற்றி திரிபவன்
அடிக்கிறான் கொள்ளை.
ஏழை ஏழையாகவே நடுத்
தெருவில் எதற்கும் வழியின்றி.
கிடக்கிறான் வாழ்கிறான்
பணக்காரனோ சேர்த்த காசை
என்ன செய்வதறியாது பொய் கணக்கை
காட்டி அரசை ஏமாற்றி திரியறான்.
கோடிக் கணக்கில் பாதுகாப்பு செலவு
இருப்பினும் எவன் வேண்டுமானாலும்
எங்கு வேண்டுமானாலும் நம் நாட்டிற்குள்
நுழையறான் சகட்டுமேனிக்கு
நம்ம மக்களை கொன்று குவிக்கிறான்.
எதற்கு என்று யாருக்கும் தெரியாது
அதற்கு இங்கே சில துரோகிகள் உடந்தை
நாட்டு நலனில் அக்கறையில்லாத
அரசியல் கட்சிகள். சொந்த வீட்டு
நலனில் மட்டுமே நாட்டம்
கொண்ட அரசியல் தலைவர்கள்.
சிந்திக்க திறனை இழந்துவிட்ட
பொது மக்கள்.
என்னடா சுதந்திரம் ?
எதற்கடா சுதந்திரம்?
யாருக்கு சுதந்திரம்?
ஒன்றுமே புரியவில்லை.
pic-courtesy-google images
கசப்பான உண்மைகள்.
பதிலளிநீக்குபொய்(கள்) உண்மை(கள்)போல்
பதிலளிநீக்குநடமாடுகிறது .நாட்டியமாடுகிறது
அதைப் பார்த்து மக்(கள் ) தங்களை மறந்து
போதையில் ஆடும் நாள்தான் சுதந்திரதினம்
உண்மை
பதிலளிநீக்குஉண்மை
விடை தெரியா கேள்விகளோடு
வேதனையோடு
சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம்
நன்றி ஐயா
வேதனையை மறந்து சாதனைகளை நினைந்து சுதந்திர தினம் கொண்டாடுவோம்
பதிலளிநீக்கு