புதன், 12 ஆகஸ்ட், 2015

பக்திக்கு கட்டுப்படும் பரமனே

பக்திக்கு கட்டுப்படும் பரமனே


பக்திக்கு கட்டுப்படும் பரமனே 

பக்திக்கு
கட்டுப்படும் பரமனே

பாற்கடலில்
பள்ளி கொண்ட அரங்கனே




தஞ்சம் என்று
வந்தவரைத்  தவறாது
காக்கும் தயாளனே



அண்டத்தில்
அகண்ட ஜோதியானாய்

பிண்டத்தின் உள்ளேயும்
உறையும் ஆன்ம ஒளியானாய்

கண்டத்திலே நஞ்சை நிறுத்தி
நீல கண்டனானாய் (பக்திக்கு)



கல்லுக்குள்
இருக்கும் தேரைக்கும்,

கருப்பையில்
மிதக்கும் கருவிற்கும்
கண்ணுக்கு புலப்படாத
உயிர்களுக்கும்

உணவு தந்து காக்கும்
தாயானாய்   (பக்திக்கு)

எங்கும்
நிறைந்த பரப்ரம்மமே
அனைத்திலும் ஊடுருவி
நிற்கும் ஆன்ம ஸ்வரூபமே



ஓங்கி உலகளந்த பெருமாளே
என் உள்ளத்திலும் ஒடுங்கி
நிற்கும் உத்தமனே (பக்திக்கு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக