தியானம் என்றால் என்ன ?
அதற்கு என் இவ்வளவு முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது?
அது அஷ்டாங்க யோகத்தில்
எட்டாவது படி என்று சொல்லுகிறார்களே?
அந்த நிலையை அவ்வளவு எளிதாக
முடியாது என்று சொல்லுகிறார்களே
அது ஏன் ?
ஏழு நிலைகளை முறையாக கடைப்பிடித்து
பிறகுதான் அந்த முறையை பயிற்சி
செய்ய வேண்டும் என்கிறார்களே அது ஏன் ?
உலகில் பல தியான முறைகள் இருக்கின்றன
என்றும் அதை பயிற்சி தர பல ஆயிரம் போலிகள்
புற்றீசல் போல் கிளம்பி உலகெங்கும்
மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் காசு
பார்க்கின்றார்களே அது ஏன்?
தியானம் செய்வதால் தான் இறைவனை
காணமுடியும் என்கிறார்களே அது உண்மையா?
முறையான தியானம் செய்தால்
நமக்கு சக்தி கிடைக்கும் என்றும்
இல்லாவிடில் தூக்கம் மற்றும் சோர்வுதான்
கிடைக்கும் என்கிறார்களே அது உண்மையா?
எதற்காக தியானம் செய்ய வேண்டும்
வெறுமனே கும்பிடு போட்டுவிட்டு
துதி செய்துவிட்டு போனால் போதாதா ?
தியானம், பூஜை எதுவும் செய்ய வேண்டாம்
பஜனை பண்ணிக்கொண்டே போனால் போதும் பரமன்
அகப்பட்டுவிடுவான் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்களே
அது உண்மையா?
நல்லவனாக ,பொய் சொல்லாமல் ஏமாற்றாமல்
இருந்து வந்தால் போதும் கடவுள் என்று ஒன்று
தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறதே அது சரியா?
ஒவ்வொரு துன்பத்திற்கும்
ஒவ்வொரு வேண்டுதலுக்கும்
வெவ்வேறு கோயில்களுக்கு
சென்று பரிகாரம். செய்யத்தான் வேண்டுமா?
கடமையை செய்து வந்தால் போதும்
கடவுள் நம் வீட்டு வாசலில் நிற்பான்
என்கிறார்கள் அது உண்மையா?
உண்மையில் கடவுளுக்கும்
நமக்கும் என்ன தொடர்பு ?
நாம் சொல்பவைகளை எல்லாம்
அவர் கேட்கும் ஒரு மனிதரா?
ஏன் இத்தனை தெய்வங்கள்?
பிறக்கும் முன்னே எங்கிருந்தோம்,
என்னவாயிருந்தோம்,இறந்த பின் என்ன ஆவோம்,
எங்கே செல்கிறோம் அந்த விவரம்
நமக்கு ஏன் நினைவிருப்பதில்லை?
இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் ஆன்மீக பாதையில்
செல்பவர்களுக்கு எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஒவ்வொருவரும் அவரவர் மனதிற்கு விளங்கிய
பொருளை மற்றவர்களுக்கு விளக்கி கொண்டுதான்
இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் எந்த விளக்கத்திலும் விளக்கம் பெறாமல்
ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கிகொண்டிருக்கிறார்கள்
விடை தெரியாமல்.
எல்லாவற்றையும் கூட்டி கழித்துபார்த்தால்
சரியான விடை வரும்
என்று ஒரு பழமொழி ஒன்று உண்டு.
கூட்டி கழித்து பாருங்களேன்.
விடை கிடைக்கிறதா என்று?
நானும் எனக்கு கிடைத்த சில பதில்களை.
உங்கள் முன் வைக்கிறேன்.
ஏற்கெனவே சில ஆண்டுகளாக என்னுடைய
பதிவுகளில் பலவற்றை அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளேன்.
படித்தவர்கள். புரிந்து கொண்டிருப்பார்கள். படிக்காதவர்கள்.........
படிக்காதவர்கள் வாசித்தால் நன்று...
பதிலளிநீக்கு