மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (6)
மாடி முற்றத்திலே
தோட்டம் போட்டேன் (6)
புதிய வரவு -துளசி
மாலவனின் மனம் கவர்ந்த துளசி
மண்டியிட்டு வணங்குபவர்களின்
வாழ்வில் மங்களம் தரும் துளசி.
மாடி முற்றத்திலே வந்து
அமர்ந்து விட்டாள் .
வந்தவுடன் சுற்றுமுற்றும்
ஒரு நோட்டம் விட்டாள்
யார் யார் இருக்கிறார்கள் என்று
அவன் கண்ணில் முதலில்
பட்டென்று பட்டது பட்டு ரோஜா செடி.
உடனே அவளைப் பார்த்து
மலர்ந்து சிரித்தது பட்டு ரோஜா செடி.
வருக வருக துளசி அன்னையே
உங்கள் வரவு நல்வரவாகுக
தன்னை அர்ப்பணிக்க அது
நினைத்தாலும் அது தன்னை
அடக்கிகொண்டது.
இதைக் கண்டு கொண்ட துளசி
என்ன தயக்கம். ?
நான் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன் என்றது.
பட்டு ரோஜாவோ " அன்னையே"
நான் பார்ப்பதற்கு அழகாக இருந்து
என்ன பயன். ? என்னிடம் மணமில்லை
அதனால் யாரும் என்னை சூடிக்கொள்ள
மனமும் இல்லை என்று கண்ணீர் வடித்தது.
யார் என்ன வேண்டுமானாலும்
நினைத்துக்கொள்ளட்டும்
இறைவன் படைப்பில்
எல்லாம் ஒன்றுதான்.
இந்த அகந்தை பிடித்த மனிதர்கள் இப்படிதான்
எல்லாவற்றிற்கும் பேதம் பார்ப்பார்கள்.
எனக்கு எல்லாம் ஒன்றுதான்.
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்
என்றதும் பட்டு ரோஜா மகிழ்ச்சியோடு
துளசியில் மடியில் போய் அமர்ந்துவிட்டது
அடுத்து அங்கிருந்த செம்பருத்தியும்
தன் வணக்கங்களை
செலுத்திவிட்டு. துளசியுடன்
தன்னை இணைத்துக்கொண்டது.
தோட்டம் போட்டேன் (6)
புதிய வரவு -துளசி
மாலவனின் மனம் கவர்ந்த துளசி
மண்டியிட்டு வணங்குபவர்களின்
வாழ்வில் மங்களம் தரும் துளசி.
மாடி முற்றத்திலே வந்து
அமர்ந்து விட்டாள் .
வந்தவுடன் சுற்றுமுற்றும்
ஒரு நோட்டம் விட்டாள்
யார் யார் இருக்கிறார்கள் என்று
அவன் கண்ணில் முதலில்
பட்டென்று பட்டது பட்டு ரோஜா செடி.
உடனே அவளைப் பார்த்து
மலர்ந்து சிரித்தது பட்டு ரோஜா செடி.
வருக வருக துளசி அன்னையே
உங்கள் வரவு நல்வரவாகுக
தன்னை அர்ப்பணிக்க அது
நினைத்தாலும் அது தன்னை
அடக்கிகொண்டது.
இதைக் கண்டு கொண்ட துளசி
என்ன தயக்கம். ?
நான் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன் என்றது.
பட்டு ரோஜாவோ " அன்னையே"
நான் பார்ப்பதற்கு அழகாக இருந்து
என்ன பயன். ? என்னிடம் மணமில்லை
அதனால் யாரும் என்னை சூடிக்கொள்ள
மனமும் இல்லை என்று கண்ணீர் வடித்தது.
யார் என்ன வேண்டுமானாலும்
நினைத்துக்கொள்ளட்டும்
இறைவன் படைப்பில்
எல்லாம் ஒன்றுதான்.
இந்த அகந்தை பிடித்த மனிதர்கள் இப்படிதான்
எல்லாவற்றிற்கும் பேதம் பார்ப்பார்கள்.
எனக்கு எல்லாம் ஒன்றுதான்.
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்
என்றதும் பட்டு ரோஜா மகிழ்ச்சியோடு
துளசியில் மடியில் போய் அமர்ந்துவிட்டது
அடுத்து அங்கிருந்த செம்பருத்தியும்
தன் வணக்கங்களை
செலுத்திவிட்டு. துளசியுடன்
தன்னை இணைத்துக்கொண்டது.