இதுதான் இந்தியா?
ஆதி வாசிகளை
அவர்கள் இருக்கும்
இடத்தில்கூட நிம்மதியாக
வாழ விட மாட்டார்கள்.
ஒரு பக்கம் வனத்
துறையினரின் அராஜகம்
மறுபக்கம் இயற்கை வளங்களை
சுரண்டும் பன்னாடை நிறுவனங்கள்
அவர்களுக்கு துணை போகும்
அரசியல் வாதிகள்.
காசிற்காக நாட்டை
விற்கும் சுயநல பேய்கள்.
புரட்சி என்ற பெயரில் யாரையும்
நிம்மதியாக வாழவிட மறுக்கும்
தீவிரவாத குழுக்கள்.
இறைவா நீதான் நம் நாட்டை
இவர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.
உண்மைதான். கவலை கொள்ள வைக்கும் நிகழ்வுகள்.
பதிலளிநீக்குஎன்று மாறும் என்று கவலை கொள்ள வைக்கிறது....
பதிலளிநீக்குகாலம் ஒரு நாள் மாறும்
பதிலளிநீக்குநம் கவலைகள்யாவும் தீரும்.
ஆதிவாசிகளின் படும் துன்பங்களை அவர்களைப் படைத்த இறைவன் நிச்சயம் தீர்த்து வைப்பான் .
பதிலளிநீக்குஇந்த நிலை எப்ப மாறுமோ - எங்கள்
சொந்த நிலை எப்ப உயருமோ - இறைவா
உந்தன் உள்ளம் உருகாதோ - நாளைக்கு
எந்தன் பிள்ளை குட்டிகள் வாழுமோ?!
நிச்சயம் மாறும்
பதிலளிநீக்குபடைத்தவனை பக்தியோடு நினைத்தால். பிராணன்
ப்ரா (மூச்சு காற்று) நன் (none) இல்லையென்றால் எதுவும் இல்லை எவனும் இல்லை.
இயற்கை அனைத்தையும் தருகிறது .ஆனால் அதை சில சுயநலப் பிண்டங்கள் தனக்கென எடுத்துக்கொள்வதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் துன்பத்திற்கு ஆளாகின்றன.
இந்த செயல் உலகம் தொடங்கிய நாள்முதல் நடந்துகொண்டுவருகிறது. எல்லாம் இயற்கையில் தொன்று தொட்டு நடந்துவரும் ஒரு செயல்.
நல்ல உள்ளம் படைத்தோர் பிறர் படும் துன்பங்களை துடைக்கின்றனர்.
எல்லாம் தனக்கென கொள்பவன்
தனக்கென்று இந்த உலகில் சொந்தம் எதுவுமில்லை என்று எண்ணும் காலம் ஒவ்வொருவனுக்கும் இறைவன் புரிய வைக்கின்றான். அவன் இறுதிக்காலத்தில்.
அன்பின் பட்டாபி இராமன் - வலைச்சரம் பற்றி அறிந்திருப்பீர்கள் - வாரம் ஒரு ஆசிரியரை நியமிக்கிறோம் - அவ்வாசிரியர் அவ்வாரம் முழுவதும் பதிவுகள் எழுதலாம் - ஆக்ஸ்ட் 12 2014 முதல் ஒரு வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் அழைக்கிறேன். இணக்கம் தெரிவிக்கும் மடல் தங்களிடம் இருந்து வந்த உடன் மேல் விபரஙகள் - விதி முறைகள் அனுப்புகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி
நீக்குஉங்களின் புன்னகை பூத்த முகம்
எப்போதும் இவனுக்கு பிடிக்கும்
தாங்கள் இவனுக்கு இரண்டாவது
முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்.
இவன் மனம் தற்போது எதிலும் நாட்டம் கொள்வதில்லை .
அதனால் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை.
பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதை சிறப்பாக செய்யவேண்டும்
என்ற கோட்பாட்டினை கடைப்பிடிப்பவன்
மனதை இறைசிந்தனையிலேயே வைத்துகொள்ள
இரவும் பகலும் முயன்று கொண்டிருப்பதால்
வேறு எதற்கும் நேரம் இல்லை.
சில மாதங்களுக்கு முன் ஒரு நாளைக்கு
மூன்று நான்கு பதிவுகளும் ஓவியங்களும்
வரைந்து வெளியிட்டுக் கொண்டிருந்தேன்
( ராமரசம் வலைபதிவில் 900 பதிவுகள் வெளியிட்டுள்ளேன்
சிந்தனை சிதறல் வலைப்பதிவில் 400 பதிவிற்கு மேல் வெளியிட்டுள்ளேன். )
ஆனால் இரண்டு மாதங்களாக ஒன்றும் வெளியிடவில்லை.
தங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் நன்றி.
தங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள
இயலாமைக்கு மன்னிக்கவும்.