சனி, 3 மே, 2014

நானும் ஒரு ஓவியன்தான் (நீர் வண்ண ஓவியம்)

நானும் ஒரு ஓவியன்தான்  (நீர் வண்ண ஓவியம்) 

சில மாதங்களாக என் கவனம்
நீர் வண்ண ஓவியங்களின் மீது திரும்பியிருக்கிறது.

வண்ணங்களைக் குழைத்து ப்ரஷினால் வரைவது
ஒரு சுகமான அனுபவம்.

சில படங்கள் உடனே குதிர்ந்து விடும்.

சிலவற்றை நாம் நினைக்கும்படி
வரைய பல மணி நேரம் பிடிக்கும்

ஆனால் களைப்பே தெரியாது
மனம் அதிலேயே மூழ்கிவிடும்.

சுற்றுப்புறத்தைப் பற்றி
சிந்திக்கவே செய்யாது,

மனத்தைக் கட்டிப் போட  இது எளிதான வழியாக
தோன்றுகிறது எனக்கு.

படம் நம்மோடு பேசத் தொடங்கிவிடும் .
அதில் ஒரு முக பாவம் வெளிப்படும்
அப்போது அந்த படத்தை முடிவுக்குக்
கொண்டு வந்துவிடலாம்.

ஆனால் அதில் சரி செய்ய வேண்டியவை
நிறைய இருக்கும் அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படவேண்டியதில்லை.

நம் மனதிற்கு ஒரு திருப்தி ஏற்பட்டால் போதும்.
நம் மனதில் படம் நன்றாக வந்திருக்கிறது
என்ற எண்ணம் வந்தால் போதும்.

நம் உழைப்புக்கு பலன்
அந்த மன மகிழ்ச்சிதான்.

குறை சொல்பவர்களைப் பற்றி
கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
அது அவர்கள் சுபாவம்.

அப்படி ரசித்து வரைந்த முருகனின் படம் இதோ.


அவன் முகத்தில் தோன்றும் சிரிப்பு, அவன் எழிலாக கையில் பிடித்துள்ள வேல், அவன் காட்டும் அபயக்கரம், அவனை சுற்றியுள்ள, மயில் , அருவி, பாம்பு, சேவல். மலையின் மீதுள்ள  கோயில்.அதன் மீது  உள்ள மயில் சிற்பம். எல்லாம் எனக்கு பிடிக்கும். வானத்தில் தோன்றும் நிலவு , செடிகள். மலர்கள் இலைகள் எல்லாம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.

ஆஹா அந்த மயிலும் சேவலும் குசலம் அல்லவா விசாரித்துக்கொண்டிருக்கின்றன.

என்ன அழகான மயில் ! முருகனோடுசேர்ந்துகொண்டு. அதுவும் மிக அழகாக தோன்றுகிறது எனக்கு

நம் மனதிலும் அந்த முருகனின் வடிவம் நிலையாய்  நின்றுவிட்டால்
மனக் கவலைகள் எது. .மரணம்தான் எது?
அனைத்தும் முடிவுக்கு
வந்துவிடும் அல்லவா  !

மற்றவர்கள் வரைந்த படங்களை ரசிப்பதற்கும், தானே  வரைந்து ரசிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை. அந்த படத்தை வரைபவ்ர்களால் மட்டும்தான் உணரமுடியும்.4 கருத்துகள்:

 1. // அந்த படத்தை வரைபவ்ர்களால் மட்டும்தான் உணரமுடியும்//

  உண்மை. முருகன், மயில், பின்னணியில் கோவில் எல்லாமே அருமை. மனதுக்குப் பிடித்த ஒரு செயலில் ஈடுபாட்டுடன் செய்வதைவிட பெரிய தியானம் எது இருக்கப் போகிறது? இது மாதிரி படங்கள் பார்த்திருக்கிறேன் என்பதால் ஒரு கேள்வி. எதிரில் ஒரு படத்தின் மாதிரி வைத்துக் கொண்டு வரைவீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாராளமாக பார்த்திருக்கலாம். மாதிரிக்கு சில படங்களை வைத்துக்கொண்டு என்னுடைய கற்பனைகளை அதில் சேர்த்துக்கொள்வேன்.
   பார்த்து வரைவதற்க்கே வாழ்வில் பெரும்பகுதி கழிந்துவிட்டது இப்போதுதான் கை பழக ஆரம்பித்துள்ளது. . அதுவே இன்னும் முழுமை பெறவில்லை. கற்பனையில் வரைய photograpic memory தேவை.

   நீக்கு
 2. பதில்கள்
  1. நன்றி DD
   படங்களை பொறுமையாக ரசிக்க வேண்டும். கதராடையை மக்கள் அணிய மகாத்மா காந்தி வலியுறுத்தியதன் காரணம் அதில் பல உயிர்களின் உழைப்பு இருக்கிறது

   அதுபோல் ஒவ்வொரு படத்திலும் ஒரு kalaignanin உழைப்பு இருக்கிறது

   உழைப்பினால் கிடைக்கும் எல்லாமே அழகாக காட்சியளிக்கும்

   ஒரு படம் வரைவதற்கு சில நிமிடங்களிருந்து பல மாதங்கள் கூட ஆகும்.இறைவனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது படங்களே

   . ஒவ்வொரு அணுவாக ரசிக்கும்போது முழு வடிவமும் நம் மனதில் பதிந்துவிடும்.

   அதனால்தான் இறைவனின் அழகை வர்ணித்து பாடல்கள் இயற்றப்பட்டன .

   அந்த வர்ணனனைகளை தினமும் பாடப் பாட இறைவனின் வடிவம் நம் கண் மும் தோற்றமளிக்கத் தொடங்கிவிடும்.

   துரித உணவுகளை சுவைப்பவர்களுக்கு என்றும் திருப்தி ஏற்படாது. அவர்கள் எத்தனை முறை திருப்பதி சென்று வந்தாலும். நன்றி DD

   நீக்கு