புதன், 28 மே, 2014

இன்றைய கல்வியும் அரசியலும்.

இன்றைய கல்வியும் அரசியலும். 

இன்றைய கல்வி  முறையும்,
அரசியலும்  எதை நோக்கி செல்கிறது?

பள்ளிக்கு போவதே  காசு பண்ணத் தான்
என்ற நிலையை நோக்கித்தான் செல்கிறது இன்றைய கல்வி

பொது சேவை செய்வதாக கூறிக்கொண்டு
அரசியலுக்கு வருவதே காசை அள்ளத்தான்.

ஒழுக்கம் கற்றுத் தரப்படுவதில்லை
ஒழுங்கும் கற்றுத் தரப்படுவதில்லை.

மனதை ஒருமைப்படுத்தும்
பயிற்சிகள் இல்லை

தோல்வியை ,துன்பங்களைத்
தாங்கும் மன உறுதி பயிற்சியும்
கற்றுத் தரப்படுவதில்லை.

அதனால் பள்ளியில் பாடத்தில்
குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ தேர்வில்
தோற்றுப்போனாலோ தற்கொலை செய்து கொள்கிறான்.

பெற்றோர்களும் சரியில்லை ஆசிரியர்களும்  சரியில்லை  பள்ளி நிர்வாகங்களும் சரியில்லை.

மாணவனுக்கு எந்த துறையில் நாட்டம் என்பதை யாரும் கருத்தில் கொள்வதேயில்லை. அதனால்தான் இத்தனை அலங்கோலங்களும்

எதெற்கெடுத்தாலும் போட்டி. போட்டி பொறாமையில்தான் முடிகிறது. பொறாமை அழிவுக்கு வழி கோலுகிறது .

பெற்றோர்கள் நாங்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறோம். பையன் படித்து முதல் மதிப்பெண் பெறவில்லை என்றால் பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் மாணவனையும் கரித்துக் கொட்டுகிறார்கள்.

ஒரு குறிப்பிட துறையையே மொத்த பெற்றோர்களும் நாடுகின்றனர்.

அதனால்தான் கல்வி கொள்ளையர்கள் பெருகி விட்டார்கள்
பல லட்சங்களை செலவுசெய்து வெளி நாட்டில்
சில லட்சங்களை  சம்பாதிக்க ஆலாய்ப்  பறக்கிறது மக்கள் கூட்டம்.

மருத்துவப் படிப்பிற்கும், பொறியியல் படிப்பிற்கும் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து படிப்பில் சேருகிறார்கள்.

அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும்
கடமையை செய்ய லஞ்சம் வாங்கி கொழுக்கிறார்கள்.

படிப்பில் தோற்றவர்களும், படித்து பட்டம் பெற்றவர்களும் இறுதியில் அடையும் புகலிடம் அரசியலே.

இவர்கள் இருவரும் பெரும்பாலான
மக்களை ஏமாற்றிதான் கொழுக்கிறார்கள்.

நாட்டின் முன்னேற்றம் அல்லது மக்களின் முன்னேற்றம் பின் தள்ளப்படுகிறது

மக்களின் நலம் முக்கியமல்ல

அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் முன்னேற்றிக்கொள்வதே அவர்கள் நோக்கம்.

இந்த நிலை மாறவேண்டும். 

5 கருத்துகள்:

  1. இந்த நிலை மாற ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்து மாறினால் தான் உண்டு...

    பதிலளிநீக்கு
  2. மாறவேண்டும்தான். ஆனால் எப்போதோ..! ம்ஹூம்...

    பதிலளிநீக்கு

  3. இந்த நிலை மாறவேண்டும்.
    எந்த நிலை வந்தாலும்
    நாடு, மக்கள் மேம்பாடு
    ஓங்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  4. எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி
    வேறொன்றறியேன் பராபரமே என்ற தாயுமானவர் நெறியும், எல்லா உயிரும் இன்புற்று வாழ்க ,கொல்லா viratham குவலயமெங்கும் ஓங்குக, கண்மூடி பழக்கம் மண் மூடி போக என்ற வள்ளலார் நெறியும், ஆருயிர்க் கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும் என்ற வள்ளலார் நெறியும் இவ்வுலகில் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் தோன்றாத வரை எல்லாம் பகற்கனவே

    பதிலளிநீக்கு