திங்கள், 30 டிசம்பர், 2013

புத்தாண்டு சிந்தனைகள்

புத்தாண்டு சிந்தனைகள் 





















திருவேங்கடவனின் அருளோடு 
2014 ஆம் ஆண்டே வருக 

மனிதர்களை ஆட்டிப் படைக்கும்
காமமும் கோபமும்
இந்த உலகை விட்டு ஓடட்டும்

மனிதர்களின் சுயனலதிர்க்காக
மரங்களை அழிக்கும்
மட்ட புத்தி ஒழியட்டும்

கண்ட கண்ட இடங்களில்
விலங்குகள் போல்
மல ஜலம் கழித்து
 சுற்றுப்புறத்தை
நோய்கிடங்குகளாக
மாற்றும் அவலம் நிற்கட்டும்.

குப்பைகளையும் கழிவுகளையும்
ஜீவாதார நதிகளில் கொட்டி
தன்னை தானே அழித்துகொள்ளும்
தவற்றை இந்த மனிதகுலம்
நிறுத்தட்டும்

ஆதிக்க வெறி பிடித்து மக்களை
போருக்குத் தூண்டி
கணக்கின்றி உயிர்களைப்
பலி வாங்கி இப்புவியை
புதை குழிகளாக்கும்
வெறியர்கள் திருந்தட்டும்.

எம்மதமும் சம்மதம்  என்று வாயளவில்
கூறிவிட்டு மதவெறி பிடித்து மக்களை
அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும்
சமயவாதிகள் திருந்தட்டும்.

நீரையும், நிலத்தையும், காற்றையும்
நஞ்சாக்கும் பிளாஸ்டிக்கும்
நஞ்சை நிலத்தில்  விடும்
தொழில்களும்  நசித்து போகட்டும்

எளியோரை சுரண்டி கொழுக்கும்
முதலாளிகளும் அரசியல் அட்டைகளும்
மனம் திருந்தி எல்லோரும் 
எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ
உதவும் எண்ணம்
அவர்கள் மனதில்
துளிர்க்கட்டும். 

சனி, 28 டிசம்பர், 2013

நம் நாட்டில் மாற்று திறனாளிகளின் நிலை

நம் நாட்டில்
மாற்று திறனாளிகளின் நிலை  

நம் நாட்டில்
அவர்கள் காட்சிப் பொருள்கள்

அரசு அவர்களுக்கு 
சலுகைகள் அளித்தாலும் 
அதை கொடுக்க அவர்களிடம் கூட
 லஞ்சம் கேட்கும் ஈனப் பிறவிகள் 
நிறைந்த நாடு நம் நாடு 

கைப் புண்ணைக் காண
கண்ணாடி  தேவையில்லை.



இருந்தும் அவர்கள் இருக்கும்  
இடம் தேடி சென்று உதவிகளை அளிக்காமல் 
அவர்களை பல அலுவலர்களிடம் 
அலைய வைத்து சான்று பெற்றுவரக் கோரும் 
அரக்கத்தனமான் அரசு விதிகள்.



அதைக் கண்டும் காணாமல் இருக்கும்
அதிகார வர்க்கம். நிறைந்த நாடு நம் நாடு.

உரிமைகளுக்கு போராடும் அவர்கள்
மீது இரக்கமின்றி அவர்களை



கொடுமைப்படுத்தும் காவல் துறை



சில இழி பிறவிகளுக்கு 
காசு சம்பாதித்துக் கொடுக்கும் 
கற்பகத் தரு



சர்க்கஸ்சில் காட்சிகளுக்கு
இடை இடையே வந்து போகும் கோமாளிகள்.

அது அவர்கள் விதி என்றும்,
கடந்த பிறவியில் இந்தவிதமான 
பாவத்தைத் செய்ததால்தான் இப்படி 
அங்கம் குறையுள்ளவராக பிறந்தார் 
என்று வறட்டு வேதாந்தம் பேசித் திரியும் 
கூட்டம் நிறைந்த நாடு நம் நாடு. 

மேலை நாட்டவரிடம் நாம் 
கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம்.

ஆனால் நம் கற்றுக்கொண்டது எல்லாம் 
அவர்களில் சிலரிடம் உள்ள பிறரை அழித்து
தான்மட்டும் வாழும் சுயநல குணம் ,மற்றும் 
பிறரை அடிமைப்படுத்தி சுரண்டி வாழும் 
ஈன குணத்தையும்தான் கற்றுக்கொண்டோம்.

பிறரை நம்ப வைத்து நம்பிக்கை
துரோகம் செய்து அவர்களை  அழிக்கும்
வித்தையை கற்றுக்கொண்டோம்

நன்றாக இருக்கும் மக்கள் விளையாட்டில்
வெற்றிபெற்றால் மட்டும் தூக்கி வைத்து கொண்டாடும்
 நம்முடைய அரசு இயந்திரங்கள், ஊடக விளம்பரப் பொறுக்கிகள்



பல துன்பங்களையும், இழி சொற்களையும்,
பழிச் சொற்களையும் தாங்கிக் கொண்டு
பல இடர்களையும், புறந்தள்ளி 
தங்க பதக்கம் பெற்றுவந்தாலும் 
அவர்களை பாராட்டும்மனமில்லாத 
ஒர வஞ்சனை நிறைந்த சமூகம் நம்முடையது. 

என்றுதான் திருந்துமோ இந்த சமுதாயம். ?

படங்கள்-நன்றி-கூகிள்


அழுமூஞ்சிகளே ! உங்களுக்காக

அழுமூஞ்சிகளே ! உங்களுக்காக 

இரண்டு கைகளும் இல்லை
இரண்டு கால்களும் இல்லை.
ஒரு மனிதருக்கு.
ஆனால் அவருக்கு இருக்கும் உற்சாகம்
காட்டாற்று வெள்ளம்போல்
கரை புரண்டு ஓடுகிறது.

ஆனால் நமக்கு எல்லாம் இருக்கிறது
இருந்தும் அது இல்லை இது இல்லை
என்று வாழ்நாள் முழுவதும்
புலம்பி சோம்பி திரிபவர்கள் ஏராளம்
இந்த உலகில்

இதுபோன்றவர்கள் நான்கே நிமிடம் ஓடும்
இந்தக் காணொளியை கண்டால் நிச்சயம் தங்கள்
போக்கை மாற்றிக்கொள்வார்கள் என்பது உண்மை.




https://www.facebook.com/photo.php?v=460226787410903



புதன், 25 டிசம்பர், 2013

2014 ஆம் ஆண்டில் ஒரு அதிசய நிகழ்வு

2014 ஆம் ஆண்டில் ஒரு அதிசய நிகழ்வு 

இந்த வருடத்தில் மட்டும் வரும்
 ஒரு அதிசயத்தை மீண்டும் 
823 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 
காண இயலும். 
(மறு பிறவியில் நம்பிக்கையுடையவர்கள் 
மீண்டும் பிறந்தால் ) 

                           CALENDER-2014 

SunMonTuesWedThurFriSat





12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31







2014 ஆகஸ்ட் மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகள், 5 சனிக்கிழமைகள் 
,5 ஞாயிற்றுகிழமைகள் வருகிறது 

இந்த அதிசயம் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும் 

சீனர்கள் இந்த நிகழ்வை "பை நிறைய வெள்ளி காசுகள்" என்று கொண்டாடுகிறார்கள். 

இதை கண்ணுறும் வலை நண்பர்கள அனைவரின் வாழ்விலும் செல்வம் கொழிக்கட்டும். இன்பம் பெருகட்டும். இறை உணர்வு ஓங்கட்டும் 

வலைநண்பர்களின்  தகவலுக்காக.

திங்கள், 16 டிசம்பர், 2013

தாயும் சேயும்

தாயும் சேயும் 





ஒரு குழந்தை தன் தாயுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரம்  கழித்து தன்னை சுற்றி
வைக்கப்பட்ட விளையாட்டு
பொம்மைகளுடன் விளையாடுகிறது.

தாய் குழந்தையை பொம்மைகளுடன்
குழந்தையை விளையாடவிட்டு விட்டு
தன் வேலைகளை கவனிக்க தொடங்குகிறாள்.

இருந்தாலும் அவளின் புலன்கள் அனைத்தும்
அந்த குழந்தையை நோக்கியே இயங்கி கொண்டிருக்கும்.

 குழந்தை சிறிது நேரம் விளையாடிவிட்டு
 தன் தாயை நினைத்து அங்குமிங்கும் பார்க்கும் .
காணவில்லை எனில் அம்மா !
 என்று வருந்தி அழைக்கும்.

அதைக் கேட்ட மாத்திரத்தில்
அனைத்து வேலைகளையும் அப்படியே
போட்டுவிட்டு தாய் வந்து குழந்தையை எடுத்து
அணைத்துக் கொள்வாள்.

அழத் தொடங்கிய அந்த குழந்தை முகத்தில்
புன்னகை மலரும்.
அந்த புன்னகையிலே
தாய் சொக்கிப் போவாள்.

ஆனால் வளர்ந்தததும் அந்த குழந்தை
தாயிடம் குழந்தையாய் இருந்த போது
காட்டிய அன்பை பொழிவதில்லை.

அம்மா ! என்று அவன் அழைப்பதிலேயே
ஒரு அதிகாரக் குரல் தொனிக்கிறது.

என்னுடைய கடிகாரம் மேஜை மீது
வைத்தேனே எங்கே? என்று மிரட்டுகிறான்.

அவன் குரலை கேட்டு உடனே
ஓடி வந்த தாயோ இப்போது ,
அங்கேதான் இருக்கும் சரியாக பாருடா. என்கிறாள்.

இருவருக்கும் இடையே எவ்வளவு
பெரிய இடைவெளி வந்துவிட்டது பார்த்தீர்களா?

அப்போதும் அவள் வருவாள் ,
அவனுடன் சேர்ந்துகொண்டு தேடுவாள்.
ஆனால் அது கிடைக்காது.

அன்னையை வசை பாடிவிட்டு,
உணவு கூட உண்ணாமல்
அவன் அலுவலகம் சென்றிடுவான்.

அலுவலகம் சென்றவுடன்
அவன் மேஜை மீது அந்த கைக்கடிகாரம் கிடக்கும்
.
தாய் தன் மகன் நன்றாக உணவு சமைத்தும்
உண்ணாமல் சென்றுவிட்டானே என்று
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள்

அவன் வசை பாடிவிட்டுப் போனதை
அப்போதே மறந்து போயிருப்பாள்.

அவன் இரவு வரும்போது அவனுக்கு
பிடித்த ஏதாவதொன்றை செய்த தரலாம்
என்று எண்ணிக்கொண்டிருப்பாள்

ஆனால் என்ன நடக்கும்?

அவன் தான் செய்த அடாத செயலுக்கு
ஒரு சிறிய வருத்தம் கூட தெரிவிக்க மாட்டான்.

மாறாக வீட்டிற்கு
மிக தாமதமாக வருவான்.

அவன் அன்னை பாவம்.
உனக்குப் பிடித்த தெல்லாம் செய்து வைத்திருக்கிறேன்
கை கால் கழுவிக் கொண்டு வா என்பாள்
சாப்பிடலாம் என்பாள். .

அவன் பதிலேதும் சொல்லமாட்டான்.
கைபேசியில் ஏதொ ஒரு உதவாக்கரையுடன்
கலாய்த்து கொண்டிருப்பான்.

எவ்வளவு நேரம்?
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக

பிறகு சாவகாசமாக அவர் சொல்லவார்
நான் வெளியில் சாப்பிட்டுவிட்டேன்,
நீ போய் சாப்பிடு. என்று  தொல்லை காட்சியில்
தன் முகத்தை புதைத்துக் கொள்ளுவான் .
அப்படியே தூங்கிப் போய்விடுவான்

தொல்லைகாட்சியின் மென்னை பிடிக்கப்போனால்
ஏன் எனைக்  கேட்காமல் நிறுத்துகிறாய்
என்று அதட்டல் போடுவான்.

இதுபோல் ஒரு தாய் பிள்ளைகளை
பெற்றுவிட்டு பாசத்தினால் மோசம் போகிறார்கள்

அவர்கள் தங்கள் உடல் நலனை கவனிப்பதில்லை.
அவர்களின் உடல்நலனில் யாரும்
அக்கறை கொள்வதில்லை.

உடல்நலம் கெட்டு  மருத்துவமனையில்
உயிருக்கு போராடும்போதும்
அவர்களின் பாசம் மாறுவதில்லை.
அவர்களுக்கு வேஷம் போடத் தெரிவதில்லை.
அப்படியே அந்த நினைவுகளுடனே
அவர்களின் நினைவு.  தப்பி போகிறது.

 இந்த சம்பவம் எல்லோருடைய
வீட்டிலும் தினம் தினம் அரங்கேறும்
.இன்னும் பலவிதமாக.

இறுதி வரையில் குழந்தைகள்
தன் தாயின் அன்பை புரிந்துகொள்ளுவதில்லை

அவர்களை மகிழ்ச்சியுடன்
வாழ வைப்பதில்லை.

அவர்கள் வளர்ந்து வாழ்க்கையில்
அவர்களுக்கு அந்த அனுபவங்கள் ஏற்படும்போதுதான்
தான் செய்த தவறை உணர்கிறார்கள்.
அப்போது காலம் கடந்துவிடுகிறது

இழந்தது இழந்ததுதான்
அது மீண்டும் வாராது.

அதுகூட மனசாட்சி உள்ளவர்களுக்குத்தான்.

மற்றவர்கள் அந்த பாசப்பிணைப்பை
அன்பு பிணைப்பை உணரமுடியாத
அளவிற்கு அவர்களின் உள்ளம்
இறுகிபோய் கிடக்கிறது. 

சனி, 14 டிசம்பர், 2013

இதற்காப் பிறந்தோம்?

இதற்காப் பிறந்தோம்?

பிறக்கும்போது நாம்
அழுதுகொண்டே பிறக்கின்றோம்

நம்மை சுற்றி நிற்பவர்கள்
நாம் அழுவதைக்  கண்டு
மகிழ்கின்றனர்.

நாம் அழாவிடில்
அவர்கள் அழத் தொடங்கிவிடுவார்கள்.

துன்பம் வரும்போது
அழுகின்றோம்.

பொருளையோ, நம்மோடு இருந்து உறவு
கொண்டாடிய. அன்பு காட்டியவர்களை
நமை விட்டு பிரியும்போது அழுகின்றோம்.

இடுக்கண் வரும் போது உடனே
கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது.

இடுக்கண் வரும்போது
நடுக்கம் கொள்ளலாகாது.

அழுது
ஆகாத்தியம் செய்யலாகாது

தொடர்ந்து அழுவதால்
மனமும் உடலும்  சோர்ந்து விடும்.

நீரில் நீண்ட நாள் கிடந்தால்
எந்த பொருளும் அழுகிப்போய்விடும்
நாற்றமெடுத்துவிடும்

நம்முடைய மனதில் தங்கிவிடும் சோகமான
எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களும்
அப்படியே.

அதனால்தான் தாயின் வயிற்றில்
 பல மாதங்களாக  கும்மிருட்டில்
மிதந்து கிடக்கும் நாம் வெளியுலகில்
வெளிச்சத்திற்கு வந்ததும் அந்த
இன்பத்தைத் வெளிப்படுத்த தெரியும்
வழி அறியாமல்  புரியாமல்
அழத் தொடங்குகிறோம்.

அழுகையை நிறுத்த நம்மை
சுற்றியுள்ளவர்கள் நம்மை
பார்த்து மகிழ்கிறார்கள்.

அதாவது துன்பம் வரும் போது
அழக்கூடாது என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதுதான் நாம் இந்த உலகில் வரும்போது
கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.

ஆனால் நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்கின்றவர்கள்
அதை கடைபிடிப்பதில்லை

அதற்கு மாறாகத்தான் நடக்கிறார்கள்.

ஆனால் திருவள்ளுவரின் 
குரல் எங்கே ஒலிக்கிறது?

இழந்தால் அதற்கென்றே எப்படி
அழுது ஆகாத்தியம் செய்வது
என்று வரைமுறைகள், சடங்குகள்,
இசை, ஆர்பாட்டம்  என பெரும்
கலாசாரத்தையே
உருவாக்கி வைத்து விட்டார்கள்.

எல்லோரும் அதையே
அப்படியே நடைமுறையில் அவரவர்
வசதிக்கேற்ப அதை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.


அந்த  நிலையை மாற்றும் முகத்தான் 
திருவள்ளுவர்  தன்னுடைய குரலில்  (குறளில் )
இடுக்கண் வருகால் நகுக என்று 
ஒலிக்கின்றார்போலும்!





ஆனால் இந்த உலகம் போடும்
இரைச்சல்களில் திருவள்ளுவரின்
குரல் எங்கே ஒலிக்கிறது?

அது குறளின்  எழுத்துக்களில்
போய் பதுங்கி கொண்டுவிட்டது
என்பதே உண்மை.


வியாழன், 5 டிசம்பர், 2013

கல்யாணத்துக்கு போலாம் வாரீயளா !(பகுதி-1)

கல்யாணத்துக்கு 
போலாம்  வாரீயளா !(பகுதி-2)

கல்யாணம்  பண்ணிப்  பார்  –பழமொழி
கல்யாணங்களுக்கு  போய்ப்  பார்  –புதுமொழி

கல்யாணத்தை
பண்ணிப்  பார்  என்பது   பழமொழி

அது   அந்தக்  காலம் .
இப்போதெல்லாம்  எல்லாவற்றிற்கும்
ஒப்பந்தக்கார  மேதைகள்  வந்துவிட்டார்கள்



சில்லறை செலவுகளுக்கு
கொஞ்சம் கையில் காசு.
மற்ற  அனைத்திற்கும்
ஒரே ஒரு செக் அவ்வளவுதான் .

பெண்ணையும் பிள்ளையையும்
கல்யாண மேடையில் உட்கார வைத்து
தாலியை கட்டிக்கொண்டு வந்து மணமக்கள்
இருவரையும். இரவில்
ஒரு  அறைக்குள்    தள்ளிவிட்டால்
மற்ற  வேலைகளை  அவர்கள்
பார்த்துக்கொள்வார்கள்.
அவ்வளவு எளிதாகிவிட்டது. .

அதைவிட  கல்யாணங்களுக்கு  
சென்ற பொது ஏற்பட்ட   
அனுபவங்கள்  இன்னும்  
சுவையாக  இருக்கும் . 
அதைப்  பார்ப்போம் . 

பலர்  அழைப்பை  கொடுத்துவிடுவார்கள் .
அப்போது அவர்கள் முகத்தில்
ஆயிரம்  வாட்  பல்ப்பு  மின்னும் .

ஆனால் அவர்களின் நடிப்பை
நம்பி  அங்கு  சென்றால் ?
என்ன  நடக்கும் . ?

பல  கல்யாணங்களில்
வந்தவர்களுக்கு உபசரிப்பு கிடையாது
அவர் வரவில்லையா, இவர் வரவில்லையா
என்ற ஆத்திரமூட்டும் கேள்விகள்
கேட்பதில் பல ஜன்மங்கள்
வாடிக்கையாக கொண்டுள்ளன.

எல்லாம்  போலித்தனம் .
வந்தவர்களை  வரவேற்ப்பதற்கு
 ஒரு முட்டைக்கண்ணி  பெண்  பொம்மையை
 நிற்க  வைத்துவிடுவார்கள் .

அது செயற்கைதனமாக
எல்லோரையும்  பார்த்து  தலையை
ஆட்டி  ஆட்டி தலையாட்டி பொம்மைபோல்
வரவேற்றுக்கொண்டிருக்கும் .

சில ஜன்மங்கள் நாம்  வருவதை
பார்த்துவிட்டு  எங்கேயாவது  போய்
ஓடி  ஒளிந்து  கொள்ளும்
நாம்தான்  அதை  அங்கும்
இங்கும்  தேடி  அலைய  வேண்டும் .

சில எதிரே  நின்றாலும்  கண்டுகொள்ளாமல்
சம்பந்தா சம்பந்தமில்லாமல்
மற்றவரோடு  பேசிக்கொண்டிருக்கும் .

சத்திரத்தில்  உள்ள  கழிவறைநாற்றம்  ,
அங்கு  வேலை  செய்பவர்களின்,
குடி பீடி, சிகரெட் நாற்றம் தெரியாமல் இருக்க சென்ட்
நுழைவாயிலிலேயே நம் மீது அடிக்கப்படும்.

தப்பித்தவறி கழிவறை பக்கம் சென்றால்
இருட்டாக இருக்கும்.

குழாயில் தண்ணீர் வராது. அல்லது
தண்ணீர் போய்கொண்டே இருக்கும்.

சிலநேரங்களில் குழாயை
திறந்தால் மூட முடியாது.

சில இடங்களில் குழாயை
திறக்கவே முடியாது  .

இதையெல்லாம்  முதலில்
தெரிந்துகொண்ட  பிறகே
பாண்ட்  பட்டனை  அவிழ்க்கவேண்டும்

சில இடங்களில் இடத்தை
கண்டுபிடிக்கவே அலையவேண்டும்.
எங்கோ கோடியில் ஒரு இருண்டபகுதியில்
சமையலறை பக்கத்திலே இருக்கும்.
கழிவறையில் நுழையும் போது
அதி கவனமாக இருக்கவேண்டும்.
சில இடங்களில் பாசி பிடித்திருக்கும்.
ஏமாந்தால்வரவேற்ப்புக்கு வந்தவர்கள்
மருத்துவ மனை வரவேற்பறையில்
 நிற்க வேண்டி நேரிடும்.

பல  இடங்களில் விளக்கே இருக்காது.
ஆண்  பெண் விவர பலகை இருக்காது.

கதவுகளுக்கு தாழ்பாள் இருக்காது.
 எனவே கூட ஒரு நபரை பாதுகாப்புக்கு
அழைத்து செல்வது நலம்.
மூச்சு திணறி வெளியே வருவதற்குள்
ஒரு வழி ஆகிவிடுவோம்.

நம்முடைய காலாசாரம் அப்படி.

சில ஜன்மங்கள் வருபவர்களை
கண்டு  கொள்ளாமல் நிற்கும்

நாம்தாம் அவர்களிடம் சென்று
பல்லை இளிக்க வேண்டும்.
அப்போதுகூட  அவர்கள்  நம்மை
அமர  வைப்பதற்கோ  உபசரிப்பதற்க்கோ
அக்கறை  காட்ட  மாட்டார்கள்

நாம்தான்   பேக்கு  மாதிரி  கையில்
கிப்ட் பாக்குடன்
நின்றுகொண்டிருக்கவேண்டும்    

(இன்னும் வரும்) .

இதனால்  பல பேர்  திருமணத்திற்கு வந்தால்
இதையெல்லாம்  எதிர்பார்ப்பதே கிடையாது

எப்போது  இலை  போடுவார்கள்
என்பதை  கண்காணித்துக்  கொண்டிருப்பார்கள்
சிக்னல்  வந்தவுடன் எழுந்துவிடுவார்கள் .



முதல்  பந்தியில் எல்லா ஐடெம்களையும்
ஒன்று  விடாமல்   ஒரு கட்டு கட்டிவிட்டு
 பீடா  ஐஸ்கிரீம்   பழம் , உலர்  பழ வகைகள்   என
ஒன்று விடாமல்  .உள்ளே  தள்ளிவிட்டு
மொய் எழுதிவிட்டு அழைத்தவரிடம்
போட்டோவிர்க்கு போஸ் கொடுத்துவிட்டு
தான்  வந்ததை  தெரியப்படுத்தும் விதமாக
கையை  கொடுத்துவிட்டு ,
அவர்  உடனே  சாப்பிட்டுப்  போங்க
என்று  சொல்வார் .
 நான்  சாப்பிட்டுவிட்டேன்  என்று
சொல்லிவிட்டு   தாம்பூல  பையை
வாங்கி கொண்டு டக்கென்று
நடையைக்  கட்டுவார்கள் .



சில ஜன்மங்கள் நாம்  வருவதை
பார்த்துவிட்டு  எங்கேயாவது  போய்
ஓடி  ஒளிந்து  கொள்ளும் .நாம்தான்
அதை  அங்கும்  இங்கும்  தேடி  அலைய  வேண்டும் .

சில எதிரே  நின்றாலும்  கண்டுகொள்ளாமல்
சம்பந்தா சம்பந்தமில்லாமல்  மற்றவரோடு  பேசிக்கொண்டிருக்கும் .

தாம்பூலம்  வழங்குவதில் ,பாகுபாடு  காட்டுவது
எல்லாவற்றையும்  ஒப்பந்தக்காரர்களிடமே விட்டுவிடுவது  போன்ற
அநாகரீக  செயல்கள் வழக்கமாகிவிட்டது



ஒரே  குடும்பத்தில்  பலபேர்  வந்தால்
ஒருவருக்குதான்  கிப்ட் கொடுப்பது .
 காலையில் முகூர்த்தத்திற்கு வந்தவர்கள் மாலையில் வரவேற்ப்பிற்கு வந்தால் கிப்ட் கொடுக்கவேண்டாம்  ஜாடை காட்டுவது. போன்ற திரை மறைவு  வேலைகள் கூட சில  இடங்களில் நடக்கும்

  சிலர் தாம்பூல பை கொடுக்க நேரம் கடத்துவார்கள் . அதனால் பலர் வேண்டாம்  போய்விடுவதும் உண்டு. சிலர் கல்யாணத்திற்கு வந்தால் தாம்பூலப் பை   கேட்டு  செல்வதும் உண்டு.

திருமணத்திற்குவருபவர்கள் வழங்கும் பரிசுப்பொருட்கள் பல தரிசுபொருட்கள்  போலத்தான் இருக்கும் எதற்கும்  யார்க்கும் எந்த காலத்திலும் பயன்படாமல் கிடக்கும். அதுபோல்தான் அங்கு வருபவர்களுக்கு கொடுக்கப்படும் கிப்ட் பொருள்களும்.

வீண்  ஆடம்பரமும் கண்மூடித்தனமான
விரயங்களும் ,பகட்டும், பலவிதமான
உணவு  வகைகளை  அடுத்தடுத்து
திணித்து  வீணடிப்பதும் ,
 எல்லோர்  முன்பும்  நடிப்பதும்
காமிரா முன்பு அலங்கரித்துக்கொண்டு நின்றுகொண்டு



போஸ் கொடுப்பதும் கட்டாயக் கடமைகளாகிவிட்டது இந்த கலாசாரம் இன்னும் மேம்படுத்தப்பட்டு தற்ப்போது ஒப்பனைக்கலைஞர்கள் இந்த பணிக்கு  அமர்த்தப்படுவது இன்றைய  கலாச்சாரமாகிவிட்டது
இதற்காக பல ஆயிரங்கள் வீணடிக்கப்படுகின்றன

எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையோ அல்லது புகைப்படங்களையோ யாரும் பார்ப்பதே கிடையாது. அவை மக்கி மண்ணாகி போவதுதான் மிச்சம். அதற்க்கு செலவழிக்கப்படும் பணம் வீண். 

அழைப்பிதழை அளித்தால் மட்டும் போதாது.
வருபவரை அன்பாக வரவேற்று உபசரிக்க
முடிந்தால்  மட்டுமே  அழைக்கவேண்டும் .

சில திருமணங்களில் அழைத்தவர்
மட்டும்தான் நமக்கு தெரியும்
மற்றவர்கள் யாரும்நமக்கும்  தெரியாது.

அந்த குடும்பத்திற்கும் தெரியாது.

ஒரே சத்திரத்தில் 2 அல்லது 3 திருமணங்கள் நடைபெறும்போது வேறு திருமணத்தில் கலந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிவிட்டு செல்வதும், அடுத்தநாள் நம்மை அழைத்தவர்  ஏன்  வரவில்லை என்று கேட்கும்போதுதாம் நாம் செய்த தவறு அம்பலத்திற்கு வருவது பெரிய தமாஷ்

அரசியல்  கூட்டம்போல்  ஆள்  சேர்க்கும்
இந்த  கலாசாரம்  ஒழிய  வேண்டும்.

சில திருமணங்களில் கட்டுக்கடங்காத  கூட்டம்   வரும் .
 உணவுக்கூடத்தின்   கதவை  அடைத்துவிடுவார்கள்

 கூண்டின்    உள்ளே எலிகள்போல்   இருக்கும்
கூட்டம்  சாப்பிட  விடுவது  கிடையாது .

 அப்படியே  போட்டதை  போட்டுவிட்டு
 எழுந்துவிட  நேரிடும் .
சில  இடங்களில்  சாப்பிட  தொடன்க் உணவு தொந்திக்குள் போகத் தொடங்கியவுடனே  முன்பே  பந்தியில்  இடம்  பிடிக்க  பக்கத்தில்  வந்து  நின்று  விடுவார்கள் .

ஏதோ   பேருக்கு  சாப்பிட்டுவிட்டு   முடித்து  கைகழுவி  வெளியே வருவதற்குள்  வெளியே  இருக்கும்  கூட்டம்  திபு திபு என்றே முண்டியடித்துக்கொண்டு  நுழையும் . இடம்  பிடித்க்கொண்டு  உட்காரும் .

 பாதி  பேர் இடமில்லாமல்  அசடு  வழிய  மீண்டும்
வெளியே  வந்து காத்திருக்க  வேண்டும்.

ஒரு ஒழுங்கு  கிடையாது. எத்தனை  ஆண்டுகளானாலும்  நம்முடைய  மக்கள்  திருந்தமாட்டார்கள்

சிறிய  திருமண  மண்டபத்தில்  இருக்கும்  இடத்தின்  ஒரு மூலையில் இசைக்கச்சேரி  வைத்துவிடுவார்கள் . அவர்கள்   போடும்  கூச்சலும் , இசைக்கருவிகளின்  ஒலியும்   காதைப் பிளக்கும் இதை யாரும் ஏன்  என்று ,கேட்க முடியாது  பக்கத்தில் உட்கார்பவர்களிடம் எதுவும் பேசமுடியாது.

மணமக்களுக்கு தூவப்பட வேண்டிய அட்சதை அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அனைவரின் மீதும்தான் தூவப்படும். ஏதோ சில பேர் மட்டும் அருகில் சென்று தூவுவார்கள். அப்போது ஒரே கூட்ட நெரிசல் ஏற்ப்படும் அரங்கத்தில்.

அடுத்து மணமக்களுக்கு பரிசு வழங்கும் படலம்.
அது ஒரு ஒரு பாடாவதி படலம். ரேஷன் கடையில் நிற்கும்  க்யூ போல் நிற்கும்கூட்டம் கால் கடுக்க நின்று அருகே செல்லும்போது எதிர்பாராமல் எதிர் வரிசையில் இருந்து ஒரு கூட்டம் புகுந்து வந்து நின்றுகொண்டு சாகவாசமாக பேசிக்கொண்டு  உயிரை வாங்கும்.

சில பணக்காரர்களின் திருமணங்களில் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை. கார் வைடிருப்பவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. வண்டியை வெளியிலே நிறுத்த வேண்டும். பாதுகாப்பு கிடையாது.

சில சத்திரங்களில் திருமண மண்டபம் பெரிதாக இருக்கும். உணவுக்கூடம் நிலவறையில் சிறியதாக இருக்கும் அங்கே கூட்ட நெரிசலாக இருக்கும். உள்ளே நுழைந்தால் வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

முதல் பந்தியில் வரும் பல இடங்கள் அயிட்டங்கள் அடுத்தடுத்து வரும் பந்திகளில் காணாமல் போய்விடும். எல்லாவற்றிலும் தண்ணீர் கலந்துவிடுவார்கள், உப்பை அள்ளிவிடுவார்கள் தெருக்கோடி கடையில் கிடைக்கும் இனிப்புதான் இலையில் விழும்.

இன்று  ஒரு  சின்ன  வைபவத்தைக்  கூட போஸ்டர் அடித்து  பல லட்சங்களை  செலவு  செய்வது  வாடிக்கையாகிவிட்டது .

மொய்  எழுதும்  ஒரு  பழக்கம்  ஒரு  தவிர்க்க  முடியாத  சடங்காகிவிட்டது .
அதை  சில குடும்பங்களில்  ஒலிபெருக்கியில்  ஒலி   பரப்பும்  வழக்கம்  , அநாகரீகத்தின்   உச்ச   கட்டம்  .

சிலர்  மொய் எழுதியதை  கவனத்தில்  கொண்டு  அதற்கு  தகுந்தாற்போல்  மொய் எழுதுபவர்களின்  வீட்டு  விஷேஷங்களுக்கு  மொய் எழுதுபவர்களும்  உண்டு .

சில குடும்பங்களில்  ஒன்று  அல்லது  இரண்டு  நபர்கள்  வருவார்கள்  சில குடும்பங்களில்  குறைந்தது  அரை  டசன்   டிக்கட்டாவது   வந்து  ஒரு  கட்டு  கட்டிவிட்டு  போவதும்  உண்டுசிலர் வீட்டில் உள்ளவர்களுக்கு  பார்சல் வாங்கி கொண்டு செல்வதையும் காணலாம்.

மேற்க்கண்டவை யாவும் நான் பல ஆண்டுகளாக திருமணங்களுக்கு சென்ற வகையில் ரசித்தது,அனுபவித்தது -அனைவரிடமும் பகிர்ந்துகொண்டேன்.
அவ்வளவுதான்.

இன்றைய  உலகம்  இப்படிதான் .(என்ன  செய்வது ?அதனால்தான்  உலகத்தோடு   ஓட்ட  ஒழுகல் ஒழுகலார்  அறிவிலாதார் - என்றார்  திருவள்ளுவர் )
கல்யாணத்துக்கு 
போலாம்  வாரீயளா !(பகுதி-1)

கல்யாணம்  பண்ணிப்  பார்  –பழமொழி
கல்யாணங்களுக்கு  போய்ப்  பார்  –புதுமொழி



கல்யாணத்தை
பண்ணிப்  பார்  என்பது   பழமொழி

அது   அந்தக்  காலம் .
இப்போதெல்லாம்  எல்லாவற்றிற்கும்
ஒப்பந்தக்கார  மேதைகள்  வந்துவிட்டார்கள்

சில்லறை செலவுகளுக்கு
கொஞ்சம் கையில் காசு.
மற்ற  அனைத்திற்கும்
ஒரே ஒரு செக் அவ்வளவுதான் .

பெண்ணையும் பிள்ளையையும்
கல்யாண மேடையில் உட்கார வைத்து
தாலியை கட்டிக்கொண்டு வந்து மணமக்கள்
இருவரையும். இரவில்
ஒரு  அறைக்குள்    தள்ளிவிட்டால்
மற்ற  வேலைகளை  அவர்கள்
பார்த்துக்கொள்வார்கள்.
அவ்வளவு எளிதாகிவிட்டது. .

அதைவிட  கல்யாணங்களுக்கு  
சென்ற பொது ஏற்பட்ட   
அனுபவங்கள்  இன்னும்  
சுவையாக  இருக்கும் . 
அதைப்  பார்ப்போம் . 

பலர்  அழைப்பை  கொடுத்துவிடுவார்கள் .
 அப்போது அவர்கள் முகத்தில்
ஆயிரம்  வாட்  பல்ப்பு  மின்னும் .

ஆனால் அவர்களின் நடிப்பை
நம்பி  அங்கு  சென்றால் ?
என்ன  நடக்கும் . ?

பல  கல்யாணங்களில்
வந்தவர்களுக்கு உபசரிப்பு கிடையாது
அவர் வரவில்லையா, இவர் வரவில்லையா
என்ற ஆத்திரமூட்டும் கேள்விகள்
கேட்பதில் பல ஜன்மங்கள்
வாடிக்கையாக கொண்டுள்ளன.

எல்லாம்  போலித்தனம் .
வந்தவர்களை  வரவேற்ப்பதற்கு
 ஒரு முட்டைக்கண்ணி  பெண்  பொம்மையை
 நிற்க  வைத்துவிடுவார்கள் .

அது செயற்கைதனமாக
எல்லோரையும்  பார்த்து  தலையை
ஆட்டி  ஆட்டி தலையாட்டி பொம்மைபோல்
வரவேற்றுக்கொண்டிருக்கும் .

சில ஜன்மங்கள் நாம்  வருவதை
பார்த்துவிட்டு  எங்கேயாவது  போய்
ஓடி  ஒளிந்து  கொள்ளும்
நாம்தான்  அதை  அங்கும்
இங்கும்  தேடி  அலைய  வேண்டும் .

சில எதிரே  நின்றாலும்  கண்டுகொள்ளாமல்
சம்பந்தா சம்பந்தமில்லாமல்
மற்றவரோடு  பேசிக்கொண்டிருக்கும் .

சத்திரத்தில்  உள்ள  கழிவறைநாற்றம்  ,
அங்கு  வேலை  செய்பவர்களின்,
குடி பீடி, சிகரெட் நாற்றம் தெரியாமல் இருக்க சென்ட்
நுழைவாயிலிலேயே நம் மீது அடிக்கப்படும்.

தப்பித்தவறி கழிவறை பக்கம் சென்றால்
இருட்டாக இருக்கும்.

குழாயில் தண்ணீர் வராது. அல்லது
தண்ணீர் போய்கொண்டே இருக்கும்.

சிலநேரங்களில் குழாயை
திறந்தால் மூட முடியாது.

சில இடங்களில் குழாயை
திறக்கவே முடியாது  .

இதையெல்லாம்  முதலில்
தெரிந்துகொண்ட  பிறகே
பாண்ட்  பட்டனை  அவிழ்க்கவேண்டும்

சில இடங்களில் இடத்தை
கண்டுபிடிக்கவே அலையவேண்டும்.
எங்கோ கோடியில் ஒரு இருண்டபகுதியில்
சமையலறை பக்கத்திலே இருக்கும்.
கழிவறையில் நுழையும் போது
அதி கவனமாக இருக்கவேண்டும்.
சில இடங்களில் பாசி பிடித்திருக்கும்.
ஏமாந்தால்வரவேற்ப்புக்கு வந்தவர்கள்
மருத்துவ மனை வரவேற்பறையில்
 நிற்க வேண்டி நேரிடும்.

பல  இடங்களில் விளக்கே இருக்காது.
ஆண்  பெண் விவர பலகை இருக்காது.

கதவுகளுக்கு தாழ்பாள் இருக்காது.
 எனவே கூட ஒரு நபரை பாதுகாப்புக்கு
அழைத்து செல்வது நலம்.
மூச்சு திணறி வெளியே வருவதற்குள்
ஒரு வழி ஆகிவிடுவோம்.

நம்முடைய காலாசாரம் அப்படி.

சில ஜன்மங்கள் வருபவர்களை
கண்டு  கொள்ளாமல் நிற்கும்

நாம்தாம் அவர்களிடம் சென்று
பல்லை இளிக்க வேண்டும்.
அப்போதுகூட  அவர்கள்  நம்மை
அமர  வைப்பதற்கோ  உபசரிப்பதற்க்கோ
அக்கறை  காட்ட  மாட்டார்கள்

நாம்தான்   பேக்கு  மாதிரி  கையில்
கிப்ட் பாக்குடன்  
நின்றுகொண்டிருக்கவேண்டும்    

(இன்னும் வரும்) .

திங்கள், 2 டிசம்பர், 2013

கான மயிலாட

கான மயிலாட அதைக் கண்டு 
வான்கோழி ஆடியதாம் 

அதுபோல்தான் இதுவும்.


வியாழன், 14 நவம்பர், 2013

தோசையம்மா தோசை

தோசையம்மா தோசை
தோசை மீது என்றும்
ஆறாது ஆசை



தோசையிலே பலவகை உண்டு.
அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது
மசால் தோசை



,ஆனியன் ரவா,



நெய் ரோஸ்ட்
ஆனியன் ஊத்தப்பம் .

ஆனால் சீனாவில் தோசை தயார் செய்யும் விதம் சற்று
வித்தியாசமாக உள்ளது. அதை பார்த்து சுவையுங்கள்.
அதன் இணைப்பு கீழே/


https://www.facebook.com/photo.php?v=564578970260297&set=vb.265507410167456&type=2&theater

ஞாயிறு, 10 நவம்பர், 2013

அழுவதும் சிரிப்பதும் அழகிய அனுபவம்

அழுவதும் சிரிப்பதும் 
அழகிய அனுபவம் 


அகந்தையில்லா குழந்தை






அழுதாலும் 









சிரித்தாலும் 




பார்க்க பார்க்க இன்பம். 





அகந்தையுடைய நாமோ 
அழுதால்




 பிறர் சிரிப்பார்




சிரித்தால் 
பிறர் எள்ளி  நகைப்பார்.  

pic-courtesy-google images. 

சனி, 9 நவம்பர், 2013

நர்மதை பெற்ற நகர் (9)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (9)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (9)


பெண்கள் நூல் நூற்கத் தான் தகுதியானவர்கள் 
என்று ஏளனம் செய்த அக்பருக்கு 
பஞ்சு அடிக்கும் வில்லை பரிசாக அளித்து
அவமானப் படுத்தியதால் கோபம் கொண்ட 
அக்பர் சக்ரவர்த்தி பெரும் சேனையை அனுப்பி 
அவளது ராஜ்யத்தை கைப்பற்றினர். 

ராணி துர்காவதியிடம் இருந்த 
வெள்ளை யானையை அக்பர் கேட்டதாகவும் 
அதை ராணி தர மறுத்ததால் பெரும் சேனையை
அனுப்பி ராஜ்யத்தை கைப்பற்றியதாகவும் கூறுவர் 

கி .பி 1564 ல் தளபதி அசப்கான் தலைமையில் 
வந்த அக்பர் சேனை ஜபல்பூரிலிருந்து 
49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 
சின்கோர்கர்ஷ் என்ற இடத்தில போரிட்டபோது 
இவளது வீரம் போர்க்களத்தில் கொடி கட்டிப் பறந்தது 


தன் பாலகன் வீரநாராயணனை 


தன் முதுகில் கட்டிக்கொண்டு குதிரையின் 
மேல் அமர்ந்து பல நாள் போரிட்டாள் 


தோல்வியை தழுவும் நேரத்தில் 
எதிரியின் கையில் சிக்காமலிருக்க 
யுத்த களத்திலேயே தன் யானைப் பாகனின் 
குத்து வாளைப்  பிடுங்கி 
வயிற்றில் பாய்ச்சி நரை நாலா  
என்ற இடத்தில வீர மரணம் எய்தினாள் 


ஜான்சி ராணிக்கு லக்ஷ்மிபாய்க்கு  
முன்னோடியாக விளங்கிய 
இவ்வீராங்கனையின் சமாதி 
ஜபல்பூரிலிருந்து 23 கிலோமீட்டர் 
தொலைவில் உள்ள பர்ஹா என்ற 
கிராமத்தை அடுத்துள்ளது 


1,25,000 ரூபாய் மதிப்பில் 
தயாரான 8 மீட்டர் உயரமுள்ள 
இந்த வீ ராங்கனையின் பளிங்கு சிலை 
இந்நகரின் பவர்தால் உய்யாவனத்தில்
 கம்பீரமாக  திகழ்கிறது. 


கோண்ட்வனத்து கிராமிய பாடல்கள்
 இவளது வீர பிரதாபங்களை 
இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன 


இந்திய பெண்கள் மத்தியில் 
இதுபோன்ற வீராங்கனைகளின் 
சரிதம் பரப்பப்படவேண்டும். 



மாறாக அவர்களை இழிவுபடுத்தும் 
கட்டுக்கதைகளும், அவர்களின் மன உறுதியை 
குலைக்கும் சம்பவங்களும்தான் ஊடகங்களால் 
ஒவ்வொருநாளும் பரப்பபடுகின்றன 

இந்நிலை மாறினால்தான். 
நம் நாடு முன்னேறும். 

pic.courtesy-google images.