சனி, 28 டிசம்பர், 2013

நம் நாட்டில் மாற்று திறனாளிகளின் நிலை

நம் நாட்டில்
மாற்று திறனாளிகளின் நிலை  

நம் நாட்டில்
அவர்கள் காட்சிப் பொருள்கள்

அரசு அவர்களுக்கு 
சலுகைகள் அளித்தாலும் 
அதை கொடுக்க அவர்களிடம் கூட
 லஞ்சம் கேட்கும் ஈனப் பிறவிகள் 
நிறைந்த நாடு நம் நாடு 

கைப் புண்ணைக் காண
கண்ணாடி  தேவையில்லை.



இருந்தும் அவர்கள் இருக்கும்  
இடம் தேடி சென்று உதவிகளை அளிக்காமல் 
அவர்களை பல அலுவலர்களிடம் 
அலைய வைத்து சான்று பெற்றுவரக் கோரும் 
அரக்கத்தனமான் அரசு விதிகள்.



அதைக் கண்டும் காணாமல் இருக்கும்
அதிகார வர்க்கம். நிறைந்த நாடு நம் நாடு.

உரிமைகளுக்கு போராடும் அவர்கள்
மீது இரக்கமின்றி அவர்களை



கொடுமைப்படுத்தும் காவல் துறை



சில இழி பிறவிகளுக்கு 
காசு சம்பாதித்துக் கொடுக்கும் 
கற்பகத் தரு



சர்க்கஸ்சில் காட்சிகளுக்கு
இடை இடையே வந்து போகும் கோமாளிகள்.

அது அவர்கள் விதி என்றும்,
கடந்த பிறவியில் இந்தவிதமான 
பாவத்தைத் செய்ததால்தான் இப்படி 
அங்கம் குறையுள்ளவராக பிறந்தார் 
என்று வறட்டு வேதாந்தம் பேசித் திரியும் 
கூட்டம் நிறைந்த நாடு நம் நாடு. 

மேலை நாட்டவரிடம் நாம் 
கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம்.

ஆனால் நம் கற்றுக்கொண்டது எல்லாம் 
அவர்களில் சிலரிடம் உள்ள பிறரை அழித்து
தான்மட்டும் வாழும் சுயநல குணம் ,மற்றும் 
பிறரை அடிமைப்படுத்தி சுரண்டி வாழும் 
ஈன குணத்தையும்தான் கற்றுக்கொண்டோம்.

பிறரை நம்ப வைத்து நம்பிக்கை
துரோகம் செய்து அவர்களை  அழிக்கும்
வித்தையை கற்றுக்கொண்டோம்

நன்றாக இருக்கும் மக்கள் விளையாட்டில்
வெற்றிபெற்றால் மட்டும் தூக்கி வைத்து கொண்டாடும்
 நம்முடைய அரசு இயந்திரங்கள், ஊடக விளம்பரப் பொறுக்கிகள்



பல துன்பங்களையும், இழி சொற்களையும்,
பழிச் சொற்களையும் தாங்கிக் கொண்டு
பல இடர்களையும், புறந்தள்ளி 
தங்க பதக்கம் பெற்றுவந்தாலும் 
அவர்களை பாராட்டும்மனமில்லாத 
ஒர வஞ்சனை நிறைந்த சமூகம் நம்முடையது. 

என்றுதான் திருந்துமோ இந்த சமுதாயம். ?

படங்கள்-நன்றி-கூகிள்


5 கருத்துகள்:

  1. ஆம் ஐயா நமது சமூகம் ஓர வஞ்சனை நிறைந்த சமுகம்தான்

    பதிலளிநீக்கு
  2. பேருந்துகளில் ஏற வசதி செய்து தரும்படி கேட்டும் அந்த வசதியை நிரந்தரமாகச் செய்து தர முடியவில்லை நம் அரசால். இன்னும் பயணங்கள், தியேட்டர்கள், எல்லா இடத்திலுமே அவர்களைப் பற்றிச் சிந்திக்க மறுக்கும் அரசு!

    பதிலளிநீக்கு
  3. பழம் பெருமை பேசி தீர்த்தே பாழாய் போகும்
    சமூகம் தமிழ் சமூகம்

    .உணர்ச்சிக்கு அடிமையாகி
    ஊதாரிதனமாய் ,வாழ்ந்து எல்லோர்க்கும் அடிமை செய்யும் சமூகம் தமிழ் சமூகம்

    பிரச்சினையை தீர்க்கும் வழி தேடாது
    ஒவ்வொரு நிகழ்வையும் பிரச்சினை ஆக்கி பிழைப்பை நடத்தும் தலைவர்களைக் கொண்டது தமிழ் சமூகம்.


    மங்கையரோடு உருண்டு திரியும் நடிகர்களின் பின்னால் சென்று,
    அரசு அளிக்கும் மதுவில் மயங்கி,
    தேர்தலில் போது அளிக்கப்படும் மாமிசப் பொட்டலங்களில் மனம் பறி கொடுத்து மாய்ந்து போகு கூட்டம்

    தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் தமிழை முறையாக கற்க, பேச ,எழுத தெரிந்துகொள்ள முயலாது தமிழுக்காக போராடுவதாக ஆர்பாட்டம் செய்யும் கூட்டம்.

    பதிலளிநீக்கு
  4. மாற வேண்டும்... நிறைய நிறைய மாற வேண்டும் இந்த சமூகம்...

    பதிலளிநீக்கு
  5. ear Sir,

    The plight of the physically & mentally challenged people are disturbing me for a long time.
    You have brought it out very nicely. Soon a good solution will emerge. I am continuously praying for that.

    Best Regards

    S. Krishna Kumar

    Let us build a Responsible Society
    www.responsible-citizen.org

    உயிர்களிடத்தில்
    அன்பு வேண்டும்

    அன்பிருந்தால் போதும்

    அன்பில்லாதமனதில்தான்
    குறைகள் குவிந்து கிடக்கும்

    அன்பு மழை பொழியத்தொடங்கினால்
    இவ்வுலக அவலங்கள் அனைத்தும் நீங்கும்

    குறையொன்றுமில்லை என்று
    எல்லோரும் கூடி கோவிந்தா என்று கூடி
    பாடினால் மட்டும் போதாது

    வாயினால் பாடி மனத்தினால்
    சிந்திக்கவேண்டும் என்ற
    ஆண்டாள் நாச்சியாரின் மொழியை
    மனதில் கொள்ள வேண்டும்

    அரசுகளோ
    ஆர்பாட்டங்களோ எதுவும் பயனளிக்காது.

    மக்களின் மனங்களில்
    அன்பு பயிர் விளைய வேண்டும்

    அன்பே சிவம் எனும்,
    மந்திரம் அனுதினமும் முழங்கவேண்டும்.

    கருணைக் கடலே கண்ணன்
    என்னும் கண்ணன் வழிபாடு ஓங்கவேண்டும்

    கருணைத்த் தெய்வமே கற்பகமே
    என்னும் சக்தி வழிபாடு துளிர்க்க வேண்டும்.

    மூட நம்பிக்கையை வளர்க்கும் உயிர்பலிகள்,
    சடங்குகளுக்கு சமாதி கட்ட வேண்டும்.

    உயிர்களை இரக்கமின்றி கொல்லும் உள்ளங்களில்
    உயிர்கள் மீது அன்பு எவ்வாறு துளிர்க்கும்?

    நிச்சயம் அது சாத்தியமில்லை.

    பதிலளிநீக்கு