சனி, 9 நவம்பர், 2013

நர்மதை பெற்ற நகர் (9)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (9)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (9)


பெண்கள் நூல் நூற்கத் தான் தகுதியானவர்கள் 
என்று ஏளனம் செய்த அக்பருக்கு 
பஞ்சு அடிக்கும் வில்லை பரிசாக அளித்து
அவமானப் படுத்தியதால் கோபம் கொண்ட 
அக்பர் சக்ரவர்த்தி பெரும் சேனையை அனுப்பி 
அவளது ராஜ்யத்தை கைப்பற்றினர். 

ராணி துர்காவதியிடம் இருந்த 
வெள்ளை யானையை அக்பர் கேட்டதாகவும் 
அதை ராணி தர மறுத்ததால் பெரும் சேனையை
அனுப்பி ராஜ்யத்தை கைப்பற்றியதாகவும் கூறுவர் 

கி .பி 1564 ல் தளபதி அசப்கான் தலைமையில் 
வந்த அக்பர் சேனை ஜபல்பூரிலிருந்து 
49 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 
சின்கோர்கர்ஷ் என்ற இடத்தில போரிட்டபோது 
இவளது வீரம் போர்க்களத்தில் கொடி கட்டிப் பறந்தது 


தன் பாலகன் வீரநாராயணனை 


தன் முதுகில் கட்டிக்கொண்டு குதிரையின் 
மேல் அமர்ந்து பல நாள் போரிட்டாள் 


தோல்வியை தழுவும் நேரத்தில் 
எதிரியின் கையில் சிக்காமலிருக்க 
யுத்த களத்திலேயே தன் யானைப் பாகனின் 
குத்து வாளைப்  பிடுங்கி 
வயிற்றில் பாய்ச்சி நரை நாலா  
என்ற இடத்தில வீர மரணம் எய்தினாள் 


ஜான்சி ராணிக்கு லக்ஷ்மிபாய்க்கு  
முன்னோடியாக விளங்கிய 
இவ்வீராங்கனையின் சமாதி 
ஜபல்பூரிலிருந்து 23 கிலோமீட்டர் 
தொலைவில் உள்ள பர்ஹா என்ற 
கிராமத்தை அடுத்துள்ளது 


1,25,000 ரூபாய் மதிப்பில் 
தயாரான 8 மீட்டர் உயரமுள்ள 
இந்த வீ ராங்கனையின் பளிங்கு சிலை 
இந்நகரின் பவர்தால் உய்யாவனத்தில்
 கம்பீரமாக  திகழ்கிறது. 


கோண்ட்வனத்து கிராமிய பாடல்கள்
 இவளது வீர பிரதாபங்களை 
இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன 


இந்திய பெண்கள் மத்தியில் 
இதுபோன்ற வீராங்கனைகளின் 
சரிதம் பரப்பப்படவேண்டும். மாறாக அவர்களை இழிவுபடுத்தும் 
கட்டுக்கதைகளும், அவர்களின் மன உறுதியை 
குலைக்கும் சம்பவங்களும்தான் ஊடகங்களால் 
ஒவ்வொருநாளும் பரப்பபடுகின்றன 

இந்நிலை மாறினால்தான். 
நம் நாடு முன்னேறும். 

pic.courtesy-google images. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக