கல்யாணத்துக்கு
போலாம் வாரீயளா !(பகுதி-2)
கல்யாணம் பண்ணிப் பார் –பழமொழி
கல்யாணங்களுக்கு போய்ப் பார் –புதுமொழி
கல்யாணத்தை
பண்ணிப் பார் என்பது பழமொழி
அது அந்தக் காலம் .
இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும்
ஒப்பந்தக்கார மேதைகள் வந்துவிட்டார்கள்
சில்லறை செலவுகளுக்கு
கொஞ்சம் கையில் காசு.
மற்ற அனைத்திற்கும்
ஒரே ஒரு செக் அவ்வளவுதான் .
பெண்ணையும் பிள்ளையையும்
கல்யாண மேடையில் உட்கார வைத்து
தாலியை கட்டிக்கொண்டு வந்து மணமக்கள்
இருவரையும். இரவில்
ஒரு அறைக்குள் தள்ளிவிட்டால்
மற்ற வேலைகளை அவர்கள்
பார்த்துக்கொள்வார்கள்.
அவ்வளவு எளிதாகிவிட்டது. .
அதைவிட கல்யாணங்களுக்கு
சென்ற பொது ஏற்பட்ட
அனுபவங்கள் இன்னும்
சுவையாக இருக்கும் .
அதைப் பார்ப்போம் .
பலர் அழைப்பை கொடுத்துவிடுவார்கள் .
அப்போது அவர்கள் முகத்தில்
ஆயிரம் வாட் பல்ப்பு மின்னும் .
ஆனால் அவர்களின் நடிப்பை
நம்பி அங்கு சென்றால் ?
என்ன நடக்கும் . ?
பல கல்யாணங்களில்
வந்தவர்களுக்கு உபசரிப்பு கிடையாது
அவர் வரவில்லையா, இவர் வரவில்லையா
என்ற ஆத்திரமூட்டும் கேள்விகள்
கேட்பதில் பல ஜன்மங்கள்
வாடிக்கையாக கொண்டுள்ளன.
எல்லாம் போலித்தனம் .
வந்தவர்களை வரவேற்ப்பதற்கு
ஒரு முட்டைக்கண்ணி பெண் பொம்மையை
நிற்க வைத்துவிடுவார்கள் .
அது செயற்கைதனமாக
எல்லோரையும் பார்த்து தலையை
ஆட்டி ஆட்டி தலையாட்டி பொம்மைபோல்
வரவேற்றுக்கொண்டிருக்கும் .
சில ஜன்மங்கள் நாம் வருவதை
பார்த்துவிட்டு எங்கேயாவது போய்
ஓடி ஒளிந்து கொள்ளும்
நாம்தான் அதை அங்கும்
இங்கும் தேடி அலைய வேண்டும் .
சில எதிரே நின்றாலும் கண்டுகொள்ளாமல்
சம்பந்தா சம்பந்தமில்லாமல்
மற்றவரோடு பேசிக்கொண்டிருக்கும் .
சத்திரத்தில் உள்ள கழிவறைநாற்றம் ,
அங்கு வேலை செய்பவர்களின்,
குடி பீடி, சிகரெட் நாற்றம் தெரியாமல் இருக்க சென்ட்
நுழைவாயிலிலேயே நம் மீது அடிக்கப்படும்.
தப்பித்தவறி கழிவறை பக்கம் சென்றால்
இருட்டாக இருக்கும்.
குழாயில் தண்ணீர் வராது. அல்லது
தண்ணீர் போய்கொண்டே இருக்கும்.
சிலநேரங்களில் குழாயை
திறந்தால் மூட முடியாது.
சில இடங்களில் குழாயை
திறக்கவே முடியாது .
இதையெல்லாம் முதலில்
தெரிந்துகொண்ட பிறகே
பாண்ட் பட்டனை அவிழ்க்கவேண்டும்
சில இடங்களில் இடத்தை
கண்டுபிடிக்கவே அலையவேண்டும்.
எங்கோ கோடியில் ஒரு இருண்டபகுதியில்
சமையலறை பக்கத்திலே இருக்கும்.
கழிவறையில் நுழையும் போது
அதி கவனமாக இருக்கவேண்டும்.
சில இடங்களில் பாசி பிடித்திருக்கும்.
ஏமாந்தால்வரவேற்ப்புக்கு வந்தவர்கள்
மருத்துவ மனை வரவேற்பறையில்
நிற்க வேண்டி நேரிடும்.
பல இடங்களில் விளக்கே இருக்காது.
ஆண் பெண் விவர பலகை இருக்காது.
கதவுகளுக்கு தாழ்பாள் இருக்காது.
எனவே கூட ஒரு நபரை பாதுகாப்புக்கு
அழைத்து செல்வது நலம்.
மூச்சு திணறி வெளியே வருவதற்குள்
ஒரு வழி ஆகிவிடுவோம்.
நம்முடைய காலாசாரம் அப்படி.
சில ஜன்மங்கள் வருபவர்களை
கண்டு கொள்ளாமல் நிற்கும்
நாம்தாம் அவர்களிடம் சென்று
பல்லை இளிக்க வேண்டும்.
அப்போதுகூட அவர்கள் நம்மை
அமர வைப்பதற்கோ உபசரிப்பதற்க்கோ
அக்கறை காட்ட மாட்டார்கள்
நாம்தான் பேக்கு மாதிரி கையில்
கிப்ட் பாக்குடன்
நின்றுகொண்டிருக்கவேண்டும்
(இன்னும் வரும்) .
இதனால் பல பேர் திருமணத்திற்கு வந்தால்
இதையெல்லாம் எதிர்பார்ப்பதே கிடையாது
எப்போது இலை போடுவார்கள்
என்பதை கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்
சிக்னல் வந்தவுடன் எழுந்துவிடுவார்கள் .
முதல் பந்தியில் எல்லா ஐடெம்களையும்
ஒன்று விடாமல் ஒரு கட்டு கட்டிவிட்டு
பீடா ஐஸ்கிரீம் பழம் , உலர் பழ வகைகள் என
ஒன்று விடாமல் .உள்ளே தள்ளிவிட்டு
மொய் எழுதிவிட்டு அழைத்தவரிடம்
போட்டோவிர்க்கு போஸ் கொடுத்துவிட்டு
தான் வந்ததை தெரியப்படுத்தும் விதமாக
கையை கொடுத்துவிட்டு ,
அவர் உடனே சாப்பிட்டுப் போங்க
என்று சொல்வார் .
நான் சாப்பிட்டுவிட்டேன் என்று
சொல்லிவிட்டு தாம்பூல பையை
வாங்கி கொண்டு டக்கென்று
நடையைக் கட்டுவார்கள் .
சில ஜன்மங்கள் நாம் வருவதை
பார்த்துவிட்டு எங்கேயாவது போய்
ஓடி ஒளிந்து கொள்ளும் .நாம்தான்
அதை அங்கும் இங்கும் தேடி அலைய வேண்டும் .
சில எதிரே நின்றாலும் கண்டுகொள்ளாமல்
சம்பந்தா சம்பந்தமில்லாமல் மற்றவரோடு பேசிக்கொண்டிருக்கும் .
தாம்பூலம் வழங்குவதில் ,பாகுபாடு காட்டுவது
எல்லாவற்றையும் ஒப்பந்தக்காரர்களிடமே விட்டுவிடுவது போன்ற
அநாகரீக செயல்கள் வழக்கமாகிவிட்டது
ஒரே குடும்பத்தில் பலபேர் வந்தால்
ஒருவருக்குதான் கிப்ட் கொடுப்பது .
காலையில் முகூர்த்தத்திற்கு வந்தவர்கள் மாலையில் வரவேற்ப்பிற்கு வந்தால் கிப்ட் கொடுக்கவேண்டாம் ஜாடை காட்டுவது. போன்ற திரை மறைவு வேலைகள் கூட சில இடங்களில் நடக்கும்
சிலர் தாம்பூல பை கொடுக்க நேரம் கடத்துவார்கள் . அதனால் பலர் வேண்டாம் போய்விடுவதும் உண்டு. சிலர் கல்யாணத்திற்கு வந்தால் தாம்பூலப் பை கேட்டு செல்வதும் உண்டு.
திருமணத்திற்குவருபவர்கள் வழங்கும் பரிசுப்பொருட்கள் பல தரிசுபொருட்கள் போலத்தான் இருக்கும் எதற்கும் யார்க்கும் எந்த காலத்திலும் பயன்படாமல் கிடக்கும். அதுபோல்தான் அங்கு வருபவர்களுக்கு கொடுக்கப்படும் கிப்ட் பொருள்களும்.
வீண் ஆடம்பரமும் கண்மூடித்தனமான
விரயங்களும் ,பகட்டும், பலவிதமான
உணவு வகைகளை அடுத்தடுத்து
திணித்து வீணடிப்பதும் ,
எல்லோர் முன்பும் நடிப்பதும்
காமிரா முன்பு அலங்கரித்துக்கொண்டு நின்றுகொண்டு
போஸ் கொடுப்பதும் கட்டாயக் கடமைகளாகிவிட்டது இந்த கலாசாரம் இன்னும் மேம்படுத்தப்பட்டு தற்ப்போது ஒப்பனைக்கலைஞர்கள் இந்த பணிக்கு அமர்த்தப்படுவது இன்றைய கலாச்சாரமாகிவிட்டது
இதற்காக பல ஆயிரங்கள் வீணடிக்கப்படுகின்றன
எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையோ அல்லது புகைப்படங்களையோ யாரும் பார்ப்பதே கிடையாது. அவை மக்கி மண்ணாகி போவதுதான் மிச்சம். அதற்க்கு செலவழிக்கப்படும் பணம் வீண்.
அழைப்பிதழை அளித்தால் மட்டும் போதாது.
வருபவரை அன்பாக வரவேற்று உபசரிக்க
முடிந்தால் மட்டுமே அழைக்கவேண்டும் .
சில திருமணங்களில் அழைத்தவர்
மட்டும்தான் நமக்கு தெரியும்
மற்றவர்கள் யாரும்நமக்கும் தெரியாது.
அந்த குடும்பத்திற்கும் தெரியாது.
ஒரே சத்திரத்தில் 2 அல்லது 3 திருமணங்கள் நடைபெறும்போது வேறு திருமணத்தில் கலந்துகொண்டு சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிவிட்டு செல்வதும், அடுத்தநாள் நம்மை அழைத்தவர் ஏன் வரவில்லை என்று கேட்கும்போதுதாம் நாம் செய்த தவறு அம்பலத்திற்கு வருவது பெரிய தமாஷ்
அரசியல் கூட்டம்போல் ஆள் சேர்க்கும்
இந்த கலாசாரம் ஒழிய வேண்டும்.
சில திருமணங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும் .
உணவுக்கூடத்தின் கதவை அடைத்துவிடுவார்கள்
கூண்டின் உள்ளே எலிகள்போல் இருக்கும்
கூட்டம் சாப்பிட விடுவது கிடையாது .
அப்படியே போட்டதை போட்டுவிட்டு
எழுந்துவிட நேரிடும் .
சில இடங்களில் சாப்பிட தொடன்க் உணவு தொந்திக்குள் போகத் தொடங்கியவுடனே முன்பே பந்தியில் இடம் பிடிக்க பக்கத்தில் வந்து நின்று விடுவார்கள் .
ஏதோ பேருக்கு சாப்பிட்டுவிட்டு முடித்து கைகழுவி வெளியே வருவதற்குள் வெளியே இருக்கும் கூட்டம் திபு திபு என்றே முண்டியடித்துக்கொண்டு நுழையும் . இடம் பிடித்க்கொண்டு உட்காரும் .
பாதி பேர் இடமில்லாமல் அசடு வழிய மீண்டும்
வெளியே வந்து காத்திருக்க வேண்டும்.
ஒரு ஒழுங்கு கிடையாது. எத்தனை ஆண்டுகளானாலும் நம்முடைய மக்கள் திருந்தமாட்டார்கள்
சிறிய திருமண மண்டபத்தில் இருக்கும் இடத்தின் ஒரு மூலையில் இசைக்கச்சேரி வைத்துவிடுவார்கள் . அவர்கள் போடும் கூச்சலும் , இசைக்கருவிகளின் ஒலியும் காதைப் பிளக்கும் இதை யாரும் ஏன் என்று ,கேட்க முடியாது பக்கத்தில் உட்கார்பவர்களிடம் எதுவும் பேசமுடியாது.
மணமக்களுக்கு தூவப்பட வேண்டிய அட்சதை அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அனைவரின் மீதும்தான் தூவப்படும். ஏதோ சில பேர் மட்டும் அருகில் சென்று தூவுவார்கள். அப்போது ஒரே கூட்ட நெரிசல் ஏற்ப்படும் அரங்கத்தில்.
அடுத்து மணமக்களுக்கு பரிசு வழங்கும் படலம்.
அது ஒரு ஒரு பாடாவதி படலம். ரேஷன் கடையில் நிற்கும் க்யூ போல் நிற்கும்கூட்டம் கால் கடுக்க நின்று அருகே செல்லும்போது எதிர்பாராமல் எதிர் வரிசையில் இருந்து ஒரு கூட்டம் புகுந்து வந்து நின்றுகொண்டு சாகவாசமாக பேசிக்கொண்டு உயிரை வாங்கும்.
சில பணக்காரர்களின் திருமணங்களில் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை. கார் வைடிருப்பவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. வண்டியை வெளியிலே நிறுத்த வேண்டும். பாதுகாப்பு கிடையாது.
சில சத்திரங்களில் திருமண மண்டபம் பெரிதாக இருக்கும். உணவுக்கூடம் நிலவறையில் சிறியதாக இருக்கும் அங்கே கூட்ட நெரிசலாக இருக்கும். உள்ளே நுழைந்தால் வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
முதல் பந்தியில் வரும் பல இடங்கள் அயிட்டங்கள் அடுத்தடுத்து வரும் பந்திகளில் காணாமல் போய்விடும். எல்லாவற்றிலும் தண்ணீர் கலந்துவிடுவார்கள், உப்பை அள்ளிவிடுவார்கள் தெருக்கோடி கடையில் கிடைக்கும் இனிப்புதான் இலையில் விழும்.
இன்று ஒரு சின்ன வைபவத்தைக் கூட போஸ்டர் அடித்து பல லட்சங்களை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது .
மொய் எழுதும் ஒரு பழக்கம் ஒரு தவிர்க்க முடியாத சடங்காகிவிட்டது .
அதை சில குடும்பங்களில் ஒலிபெருக்கியில் ஒலி பரப்பும் வழக்கம் , அநாகரீகத்தின் உச்ச கட்டம் .
சிலர் மொய் எழுதியதை கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் மொய் எழுதுபவர்களின் வீட்டு விஷேஷங்களுக்கு மொய் எழுதுபவர்களும் உண்டு .
சில குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் வருவார்கள் சில குடும்பங்களில் குறைந்தது அரை டசன் டிக்கட்டாவது வந்து ஒரு கட்டு கட்டிவிட்டு போவதும் உண்டுசிலர் வீட்டில் உள்ளவர்களுக்கு பார்சல் வாங்கி கொண்டு செல்வதையும் காணலாம்.
மேற்க்கண்டவை யாவும் நான் பல ஆண்டுகளாக திருமணங்களுக்கு சென்ற வகையில் ரசித்தது,அனுபவித்தது -அனைவரிடமும் பகிர்ந்துகொண்டேன்.
அவ்வளவுதான்.
இன்றைய உலகம் இப்படிதான் .(என்ன செய்வது ?அதனால்தான் உலகத்தோடு ஓட்ட ஒழுகல் ஒழுகலார் அறிவிலாதார் - என்றார் திருவள்ளுவர் )

பணத்தால் (வரதட்சணை) அடிபிடி சண்டை வந்து திருமணம் கூட நின்று போகுதே...
பதிலளிநீக்குகுறளோடு முடித்தது சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா...
அனுபவங்களுக்கு முடிவில்லை
பதிலளிநீக்குஇதுஅனைவருக்கும் ஏற்படும் பொதுவான அனுபவங்கள்.அனுபவங்களுக்கு முடிவில்லை
எல்லாம் உங்கள் தாக்கம்தான்
அனைவரும் உணரும் சங்கடங்கள்..!!
பதிலளிநீக்கு