வியாழன், 5 டிசம்பர், 2013

கல்யாணத்துக்கு 
போலாம்  வாரீயளா !(பகுதி-1)

கல்யாணம்  பண்ணிப்  பார்  –பழமொழி
கல்யாணங்களுக்கு  போய்ப்  பார்  –புதுமொழி



கல்யாணத்தை
பண்ணிப்  பார்  என்பது   பழமொழி

அது   அந்தக்  காலம் .
இப்போதெல்லாம்  எல்லாவற்றிற்கும்
ஒப்பந்தக்கார  மேதைகள்  வந்துவிட்டார்கள்

சில்லறை செலவுகளுக்கு
கொஞ்சம் கையில் காசு.
மற்ற  அனைத்திற்கும்
ஒரே ஒரு செக் அவ்வளவுதான் .

பெண்ணையும் பிள்ளையையும்
கல்யாண மேடையில் உட்கார வைத்து
தாலியை கட்டிக்கொண்டு வந்து மணமக்கள்
இருவரையும். இரவில்
ஒரு  அறைக்குள்    தள்ளிவிட்டால்
மற்ற  வேலைகளை  அவர்கள்
பார்த்துக்கொள்வார்கள்.
அவ்வளவு எளிதாகிவிட்டது. .

அதைவிட  கல்யாணங்களுக்கு  
சென்ற பொது ஏற்பட்ட   
அனுபவங்கள்  இன்னும்  
சுவையாக  இருக்கும் . 
அதைப்  பார்ப்போம் . 

பலர்  அழைப்பை  கொடுத்துவிடுவார்கள் .
 அப்போது அவர்கள் முகத்தில்
ஆயிரம்  வாட்  பல்ப்பு  மின்னும் .

ஆனால் அவர்களின் நடிப்பை
நம்பி  அங்கு  சென்றால் ?
என்ன  நடக்கும் . ?

பல  கல்யாணங்களில்
வந்தவர்களுக்கு உபசரிப்பு கிடையாது
அவர் வரவில்லையா, இவர் வரவில்லையா
என்ற ஆத்திரமூட்டும் கேள்விகள்
கேட்பதில் பல ஜன்மங்கள்
வாடிக்கையாக கொண்டுள்ளன.

எல்லாம்  போலித்தனம் .
வந்தவர்களை  வரவேற்ப்பதற்கு
 ஒரு முட்டைக்கண்ணி  பெண்  பொம்மையை
 நிற்க  வைத்துவிடுவார்கள் .

அது செயற்கைதனமாக
எல்லோரையும்  பார்த்து  தலையை
ஆட்டி  ஆட்டி தலையாட்டி பொம்மைபோல்
வரவேற்றுக்கொண்டிருக்கும் .

சில ஜன்மங்கள் நாம்  வருவதை
பார்த்துவிட்டு  எங்கேயாவது  போய்
ஓடி  ஒளிந்து  கொள்ளும்
நாம்தான்  அதை  அங்கும்
இங்கும்  தேடி  அலைய  வேண்டும் .

சில எதிரே  நின்றாலும்  கண்டுகொள்ளாமல்
சம்பந்தா சம்பந்தமில்லாமல்
மற்றவரோடு  பேசிக்கொண்டிருக்கும் .

சத்திரத்தில்  உள்ள  கழிவறைநாற்றம்  ,
அங்கு  வேலை  செய்பவர்களின்,
குடி பீடி, சிகரெட் நாற்றம் தெரியாமல் இருக்க சென்ட்
நுழைவாயிலிலேயே நம் மீது அடிக்கப்படும்.

தப்பித்தவறி கழிவறை பக்கம் சென்றால்
இருட்டாக இருக்கும்.

குழாயில் தண்ணீர் வராது. அல்லது
தண்ணீர் போய்கொண்டே இருக்கும்.

சிலநேரங்களில் குழாயை
திறந்தால் மூட முடியாது.

சில இடங்களில் குழாயை
திறக்கவே முடியாது  .

இதையெல்லாம்  முதலில்
தெரிந்துகொண்ட  பிறகே
பாண்ட்  பட்டனை  அவிழ்க்கவேண்டும்

சில இடங்களில் இடத்தை
கண்டுபிடிக்கவே அலையவேண்டும்.
எங்கோ கோடியில் ஒரு இருண்டபகுதியில்
சமையலறை பக்கத்திலே இருக்கும்.
கழிவறையில் நுழையும் போது
அதி கவனமாக இருக்கவேண்டும்.
சில இடங்களில் பாசி பிடித்திருக்கும்.
ஏமாந்தால்வரவேற்ப்புக்கு வந்தவர்கள்
மருத்துவ மனை வரவேற்பறையில்
 நிற்க வேண்டி நேரிடும்.

பல  இடங்களில் விளக்கே இருக்காது.
ஆண்  பெண் விவர பலகை இருக்காது.

கதவுகளுக்கு தாழ்பாள் இருக்காது.
 எனவே கூட ஒரு நபரை பாதுகாப்புக்கு
அழைத்து செல்வது நலம்.
மூச்சு திணறி வெளியே வருவதற்குள்
ஒரு வழி ஆகிவிடுவோம்.

நம்முடைய காலாசாரம் அப்படி.

சில ஜன்மங்கள் வருபவர்களை
கண்டு  கொள்ளாமல் நிற்கும்

நாம்தாம் அவர்களிடம் சென்று
பல்லை இளிக்க வேண்டும்.
அப்போதுகூட  அவர்கள்  நம்மை
அமர  வைப்பதற்கோ  உபசரிப்பதற்க்கோ
அக்கறை  காட்ட  மாட்டார்கள்

நாம்தான்   பேக்கு  மாதிரி  கையில்
கிப்ட் பாக்குடன்  
நின்றுகொண்டிருக்கவேண்டும்    

(இன்னும் வரும்) .

1 கருத்து: