திங்கள், 16 டிசம்பர், 2013

தாயும் சேயும்

தாயும் சேயும் 





ஒரு குழந்தை தன் தாயுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரம்  கழித்து தன்னை சுற்றி
வைக்கப்பட்ட விளையாட்டு
பொம்மைகளுடன் விளையாடுகிறது.

தாய் குழந்தையை பொம்மைகளுடன்
குழந்தையை விளையாடவிட்டு விட்டு
தன் வேலைகளை கவனிக்க தொடங்குகிறாள்.

இருந்தாலும் அவளின் புலன்கள் அனைத்தும்
அந்த குழந்தையை நோக்கியே இயங்கி கொண்டிருக்கும்.

 குழந்தை சிறிது நேரம் விளையாடிவிட்டு
 தன் தாயை நினைத்து அங்குமிங்கும் பார்க்கும் .
காணவில்லை எனில் அம்மா !
 என்று வருந்தி அழைக்கும்.

அதைக் கேட்ட மாத்திரத்தில்
அனைத்து வேலைகளையும் அப்படியே
போட்டுவிட்டு தாய் வந்து குழந்தையை எடுத்து
அணைத்துக் கொள்வாள்.

அழத் தொடங்கிய அந்த குழந்தை முகத்தில்
புன்னகை மலரும்.
அந்த புன்னகையிலே
தாய் சொக்கிப் போவாள்.

ஆனால் வளர்ந்தததும் அந்த குழந்தை
தாயிடம் குழந்தையாய் இருந்த போது
காட்டிய அன்பை பொழிவதில்லை.

அம்மா ! என்று அவன் அழைப்பதிலேயே
ஒரு அதிகாரக் குரல் தொனிக்கிறது.

என்னுடைய கடிகாரம் மேஜை மீது
வைத்தேனே எங்கே? என்று மிரட்டுகிறான்.

அவன் குரலை கேட்டு உடனே
ஓடி வந்த தாயோ இப்போது ,
அங்கேதான் இருக்கும் சரியாக பாருடா. என்கிறாள்.

இருவருக்கும் இடையே எவ்வளவு
பெரிய இடைவெளி வந்துவிட்டது பார்த்தீர்களா?

அப்போதும் அவள் வருவாள் ,
அவனுடன் சேர்ந்துகொண்டு தேடுவாள்.
ஆனால் அது கிடைக்காது.

அன்னையை வசை பாடிவிட்டு,
உணவு கூட உண்ணாமல்
அவன் அலுவலகம் சென்றிடுவான்.

அலுவலகம் சென்றவுடன்
அவன் மேஜை மீது அந்த கைக்கடிகாரம் கிடக்கும்
.
தாய் தன் மகன் நன்றாக உணவு சமைத்தும்
உண்ணாமல் சென்றுவிட்டானே என்று
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள்

அவன் வசை பாடிவிட்டுப் போனதை
அப்போதே மறந்து போயிருப்பாள்.

அவன் இரவு வரும்போது அவனுக்கு
பிடித்த ஏதாவதொன்றை செய்த தரலாம்
என்று எண்ணிக்கொண்டிருப்பாள்

ஆனால் என்ன நடக்கும்?

அவன் தான் செய்த அடாத செயலுக்கு
ஒரு சிறிய வருத்தம் கூட தெரிவிக்க மாட்டான்.

மாறாக வீட்டிற்கு
மிக தாமதமாக வருவான்.

அவன் அன்னை பாவம்.
உனக்குப் பிடித்த தெல்லாம் செய்து வைத்திருக்கிறேன்
கை கால் கழுவிக் கொண்டு வா என்பாள்
சாப்பிடலாம் என்பாள். .

அவன் பதிலேதும் சொல்லமாட்டான்.
கைபேசியில் ஏதொ ஒரு உதவாக்கரையுடன்
கலாய்த்து கொண்டிருப்பான்.

எவ்வளவு நேரம்?
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக

பிறகு சாவகாசமாக அவர் சொல்லவார்
நான் வெளியில் சாப்பிட்டுவிட்டேன்,
நீ போய் சாப்பிடு. என்று  தொல்லை காட்சியில்
தன் முகத்தை புதைத்துக் கொள்ளுவான் .
அப்படியே தூங்கிப் போய்விடுவான்

தொல்லைகாட்சியின் மென்னை பிடிக்கப்போனால்
ஏன் எனைக்  கேட்காமல் நிறுத்துகிறாய்
என்று அதட்டல் போடுவான்.

இதுபோல் ஒரு தாய் பிள்ளைகளை
பெற்றுவிட்டு பாசத்தினால் மோசம் போகிறார்கள்

அவர்கள் தங்கள் உடல் நலனை கவனிப்பதில்லை.
அவர்களின் உடல்நலனில் யாரும்
அக்கறை கொள்வதில்லை.

உடல்நலம் கெட்டு  மருத்துவமனையில்
உயிருக்கு போராடும்போதும்
அவர்களின் பாசம் மாறுவதில்லை.
அவர்களுக்கு வேஷம் போடத் தெரிவதில்லை.
அப்படியே அந்த நினைவுகளுடனே
அவர்களின் நினைவு.  தப்பி போகிறது.

 இந்த சம்பவம் எல்லோருடைய
வீட்டிலும் தினம் தினம் அரங்கேறும்
.இன்னும் பலவிதமாக.

இறுதி வரையில் குழந்தைகள்
தன் தாயின் அன்பை புரிந்துகொள்ளுவதில்லை

அவர்களை மகிழ்ச்சியுடன்
வாழ வைப்பதில்லை.

அவர்கள் வளர்ந்து வாழ்க்கையில்
அவர்களுக்கு அந்த அனுபவங்கள் ஏற்படும்போதுதான்
தான் செய்த தவறை உணர்கிறார்கள்.
அப்போது காலம் கடந்துவிடுகிறது

இழந்தது இழந்ததுதான்
அது மீண்டும் வாராது.

அதுகூட மனசாட்சி உள்ளவர்களுக்குத்தான்.

மற்றவர்கள் அந்த பாசப்பிணைப்பை
அன்பு பிணைப்பை உணரமுடியாத
அளவிற்கு அவர்களின் உள்ளம்
இறுகிபோய் கிடக்கிறது. 

1 கருத்து: