வெள்ளி, 15 ஜூன், 2018

இசையும் நானும் (307)-திரைப்படம்-அரங்கேற்ற வேளை -1990 பாடல்: ஆகாய வெண்ணிலாவே

இசையும் நானும் (307)-திரைப்படம்-அரங்கேற்ற வேளை    -1990

பாடல்:

ஆகாய வெண்ணிலாவே

સંબંધિત છબી
MOUTHORGAN VEDIO-307

MovieArangetra VelaiMusicIlaiyaraaja
Year1990Lyricsவாலி 
SingersK. J. Yesudas-உமா ரமணன் 
ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


Images-lyrics-courtesy-from google 


2 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். வளைவுகள் நன்றாகவே வந்துள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி .

      வளைவுகள் அழகு என்றான் வைரமுத்து.



      இந்த பாடலுக்காக ஒரு வாரமாக மிகவும் பாடுபட்டேன். உதடுகள் ரணமாகியும் விடவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து. ஓரளவிற்கு கொண்டு வந்துள்ளேன். சளி தொல்லை வேறு. உடலில் பலவேதனைகள் வேறு. எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு. எனக்கு பிடித்த இந்த பாடலை வெளியிட்டுள்ளேன். இந்த பாடலில் இதயத்தை வருடும் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதையும் கொண்டு வர ஆசை.



      ஆசை இருக்கு தாசில் பண்ண ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்பதுபோல் என் நிலைமை உள்ளது



      அடுத்த பாட்டு நினைவில் வந்துவிட்டது.மனம் அங்கே சென்றுவிட்டது.

      நீக்கு