செவ்வாய், 5 ஜூன், 2018

இசையும் நானும் (304)-திரைப்படம்-ஆனந்தி -1965 பாடல்:: கண்ணிலே அன்பிருந்தால்

இசையும் நானும் (304)-திரைப்படம்-ஆனந்தி  -1965

பாடல்:: கண்ணிலே அன்பிருந்தால் 




MOUTHORGAN VEDIO-304

Lyrics-கண்ணதாசன் 
Music-எம் .எஸ் .விஸ்வநாதன் 
பாடியவர்:பி .சுசீலா.



கண்ணிலே அன்பிருந்தால் 
கல்லிலே தெய்வம் வரும் 
நெஞ்சிலே ஆசை வந்தால் 
நீரிலும் தேன் ஊறும் ..(கண்ணிலே}

நெல்லிலே மணியிருக்கும் 
நெய்யிலே மணமிருக்கும் 
பெண்ணாக பிறந்துவிட்டால் 
சொல்லாத நினைவிருக்கும் (கண்ணிலே}

பிள்ளையோ உன் மனது 
இல்லையோ ஓர் நினைவு 
முன்னாலே முகம் இருந்தும் 
கண்ணாடி கேட்பதென்ன (கண்ணிலே}

சொந்தமோ புரியவில்லை 
சொல்லவோ மொழியும் இல்லை 
எல்லாமும் நீ அறிந்தால் 
இந்நேரம் கேள்வியில்லை. (கண்ணிலே}




1 கருத்து: