இசையும் நானும் (306)-திரைப்படம்-யார் நீ -1966
பாடல்:
நானே வருவேன் இங்கும் அங்கும்
இசை-வேதா
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார் .ஆ.ஆ..(நானே)
உன் மங்கலமாலை பெண்ணாக
உன் மஞ்சள் குங்கும மலராக
நான் வந்தேன் உன்னிடம் உறவாட
உன் மாளிகை சொல்லும் கதையாக
சொந்தம் எங்கே செல்லும்
அது வந்து வந்து செல்லும்
அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)
மயங்கும் கண்ணைப் பாராமல்
கலங்கும் நெஞ்சைக் கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே..எ.எ...
மாலை வந்த வேளை
மனம் தந்த பாதை
அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)
என் நெஞ்சம் என்பது நீயாக
என் நினைவுகள் எல்லாம் ஒளியாக
என் காதல் கோயில் சிலையாக
நான் கண்டேன் உன்னை துணையாக ..
கைகள் செல்லும் தூரம்
உன்கண்கள் வந்து சேரும்
அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்கு