வெள்ளி, 11 மே, 2018

இசையும் நானும் (294)-திரைப்படம்-செல்வமகள் (1967) பாடல்:: அவன் நினைத்தானா அது நடக்குமென்று..

இசையும் நானும் (294)-திரைப்படம்-செல்வமகள்  (1967)

பாடல்:: அவன் நினைத்தானா அது நடக்குமென்று..




MOUTHORGAN VEDIO-294


திரைப்படம் : 

செல்வமகள்  (1967)

பாடல் : 

அவன் நினைத்தானா இது  நடக்குமென்று..


பாடியவர்  : T.M. சௌந்தராஜன் ,
வரிகள் : கண்ணதாசன்
இசை-எம் எஸ் .விஸ்வநாதன்

இந்த பாடல் அருமையான பாடல். விஸ்வநாதன் அவர்கள் பியானோ இசையை கையாண்டுள்ளது இந்த பாடலுக்கு ஒரு கம்பீரத்தை தருகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாடல். டிஎம்ஸ் பாடல் தொடங்கும்போது பாடும் ஹம்மிங் அருமை. 


அவன் நினைத்தானா இது நடக்குமென்று.(அவன்)
அவன் நினைக்குமுன்னே பழம் பழுக்குமென்று.(அவன்) 

நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும் 
அது யாரிடம் என்றா பார்த்து வரும்(நல்ல) 

நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறி வரும் 
அது ஊர்வலம் சென்றா  தேடி வரும் (நெஞ்சின்)

அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான் 
அந்த ஏழை உன் கோயிலை நாடி வந்தான் (அன்று)
நல்ல காவல் கொண்டாய்,நீ கை  கொடுத்தாய் 
அவன் காத்திருந்தான் இன்னும் கனியும் என்று(அவன்)

உன்னை பார்த்தவன் மனதில் பசியிருக்க 
அவன் பார்வையில் ஆயிரம் இசையிருக்க (உன்னை)

நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க 
ஏன் நேற்று வந்தான் உன்னை கலங்க வைக்க (அவன்)




2 கருத்துகள்:

  1. நல்ல பாடல். நன்றாகவும் வந்திருக்கிறது. கேட்டேன், ரசித்தேன். ஆனால் எனக்கு இந்தப் படத்தில் பிடித்த பாடல் "குயிலாக நான் இருந்தென்ன..."

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம். நீங்கள் "குயிலாக இருந்தால் என்ன?உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் மௌத்தார்கனாக நிச்சயம் நான் இருப்பேன் .

    பதிலளிநீக்கு