ஞாயிறு, 6 மே, 2018

இசையும் நானும் (291)-திரைப்படம்-தொழிலாளி(1964) பாடல்:: ஆண்டவன் உலகத்தின் முதலாளி

இசையும் நானும் (291)-திரைப்படம்-தொழிலாளி(1964)

பாடல்:: ஆண்டவன் உலகத்தின் முதலாளி 


MOUTHORGAN VEDIO-291


Movie : 

தொழிலாளி(1964)

Singers : T.M. Soundararajan-பி .சுசீலா 
Music : கே.வி .மகாதேவன் 
Lyricist :ஆலங்குடி சோமு 

ஆண்டவன் உலகத்தின் முதலாளி 
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி 
அன்னைஉலகின் மடியின் மேலே 
அனைவரும் எனது கூட்டாளி (ஆண்டவன்)

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் 
இலக்கணம் படைத்தவன் தொழிலாளி 
முறுக்கு போன்ற தன் கரத்தினை நம்பி 
ஓங்கி நிற்பவன் தொழிலாளி (ஆண்டவன்)

கல்லை கனியாக மாற்றும்தொழிலாளி 
கவனம் ஒருநாள் திரும்பும் 
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம் 
நிச்சயம் ஒருநாள் அரும்பும் 

வாழ்க்கை என்றொரு பயணத்திலே 
பலர் வருவார் போவார் பூமியிலே 
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் 
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி. (ஆண்டவன்

4 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். என்ன ஒரு அமைதியான பாடல்... மூன்றாம் பிறை பாடலான 'கண்ணே கலைமானே' பாடல் கேட்கும்போதெல்லாம் எனக்கு இந்தப் பாடலும் நினைவுக்கு வரும்! கிட்டத்தட்ட ஒரே டியூனோ என்னவோ!

    பதிலளிநீக்கு
  2. டி எம் சௌந்தரராஜன் மட்டுமே பாடியுள்ள பாடல் இது. பி. சுசீலா பெயரும் சேர்த்துப் போட்டிருக்கிறீர்களே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவேற்றும்போதுதான் கவனித்தேன். இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. சரி இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டேன்

      நீக்கு
  3. நன்றி ஸ்ரீராம். ஒரு மாதமாக இந்தி பாடல் எதுவும் போடவில்லை. "தூரி "படத்தில் "ஆஜாரே "என்ற அருமையான பாடலை தேர்வு செய்து வைத்திருக்கிறேன்.

    ஆனால் அதை பயிற்சி செய்வதற்கு முன்னரே 5 தமிழ் பாடல்கள் முந்திக்கொண்டு விட்டன.

    இந்த தொழிலாளி பட பாடலை நேற்று காலையில்தான் பார்த்தேன்.

    உடனே இசைக்கவேண்டும் என்று தோன்றியது.

    ஆனால் பாடல் வரிகள் எங்கும் கிடைக்கவில்லை.

    பிறகு பாடலை கேட்டுவரிகளை எழுதி. ஒரே நாளில் பயிற்சிசெய்து நேற்று இரவு 9 மணிக்கு பதிவு செய்தேன்.

    எல்லாம் சரி செய்து இரவு 11 மணிக்கு வெளியிட்டுவிட்டுதான் படுக்க போனேன்.

    " கண்ணே கலைமானே "இதயத்தில் வலியை தரும். ஆனால் இந்த பாடல் இதமாக வரும் மஹாதேவன் மயக்கும் இசை.

    .

    எவ்வளவோ ஆசைகள்.என்ன செய்வது?

    கேட்கின்ற எல்லா பாடல்களையும் இசைக்க ஆசைதான்?
    அதற்கு தகுதிவேண்டாமா ?
    முறையான இசை பயிற்சி இல்லை.

    மவுத்தார்கனையும் முறைப்படி கற்கவில்லை.


    70 வயது முடியப்போகிறது.

    இனிமேல் எதுவும் மண்டைக்குள் போகாது.


    காதில் கேட்டதை என்னால் முடித்த அளவிற்கு இசைக்க முயற்சி செய்கிறேன்.
    நேரம் இல்லை, உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. சில சமயம் கணினி சதி செய்கிறது.
    உங்களைத் தவிர உற்சாகப்படுத்துபவர்கள் யாரும் இல்லை. ஏதோ ஒன்றிரண்டு ரசிகர்கள் அவர்களைறியாமல் கருத்து. தெரிவித்தால்தான் உண்டு.
    ஆனால் எனக்கும் இருக்கும் போராடும் குணம் என்னை சும்மா இருக்க விடாது. தொடர்ந்து பயணிப்பேன். நன்றி.

    பதிலளிநீக்கு