வியாழன், 10 மே, 2018

இசையும் நானும் (293)-திரைப்படம்-பார் மகளே பார் (1963) பாடல்:: அவள் பறந்து போனாளே

இசையும் நானும் (293)-திரைப்படம்-பார் மகளே பார் (1963)

பாடல்:: அவள் பறந்து போனாளே




MOUTHORGAN VEDIO-293


திரைப்படம் : பார் மகளே பார்
பாடல் : அவள் பறந்து போனாளே
பாடகர்கள் : T.M. சௌந்தராஜன் , P.B. ஸ்ரீனிவாஸ்
வரிகள் : கண்ணதாசன்
இசை-எம் எஸ் .விஸ்வநாதன்-ராமமூர்த்தி 



அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து போனாளே (அவள் பறந்து)

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை 
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே



அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகளானேன் 
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துக் கொண்டாள் 
என் உயிரை எடுத்துக் கொண்டாள் 

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் ரெண்டைக் கவர்ந்து போனாளே!

6 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன். சோகமான பாடல்களைத் தவிர்த்து விடுங்களேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். இந்த உலகில் எனக்கு இதுவரை நிரந்தர நண்பர்களே அமைந்தது இல்லை. ரயில் பயணிகள்போல் ஒரு தடவைஅல்லது சில நாட்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் என்னோடு பயணிப்பார்கள். நான் அவர்கள் கூறும் கருத்துக்கு மாறுபட்டால் அவர்கள் உடனே என்னை விட்டு விலகிவிடுவார்கள்.நான் வாழ்வில் பட்ட அடிகள் அவமானங்கள் ஏமாற்றங்கள் கணக்கற்றவை. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் என்னை கரை சேர்த்து காப்பாற்றிக்கொண்டு வருவது இறைவன் மீது கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையே. இசையும் நானும் பயணத்தில் ஏராளமான தத்துவ, காதல்,சோக ரசம் கொண்ட பாடல்களையும் பக்தி பாடல்களையும் கொடுத்திருக்கிறேன். நான் எதையும் பிரித்து பார்ப்பது கிடையாது. என் இதயத்தை ஒரு பாடல் தொட்டால் அதை இசைத்து விடுகிறேன்.. அவ்வளவுதான். அது அத்தோடு முடிந்துபோகும். உடன் அடுத்த பாடலுக்கு தாவி விடுவேன் எனக்கு ஒரே ஒரு நண்பர்தான் உள்ளார். அவர் என்னை ஏன் சினிமா பாடல்களை இசைக்கிறீர்கள். ஆன்மீக பாடல்கள் இசைப்பது விட்டு விட்டீர்களா என்று கேட்கிறார் . ஆனால் அவர் நான் இசைத்த 50 க்கு மேற்பட்ட ஆன்மீக பாடல்களை முழுமையாக கேட்டது கிடையாது.
      என் மனைவி எச்சரிக்கை. ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி இருக்கும் ஒரே ரசிகர் ஸ்ரீராமை இழந்துவிடாதீர்களென்று. என்ன செய்வது? என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.ஒரு இசை சாப்பாட்டு ராமனாய் எனக்கு எல்லா ரசங்களும் பிடிக்கும்.

      நீக்கு
    2. சோகமும் ஒரு ருசிதான். சரிதான் ஸார். நடுவில் அப்படி ஓரிரு பாடல்கள் வருவதில் என்ன குறை? என் கமெண்ட்டை வாபஸ் வாங்கி கொள்கிறேன்!!!

      நீக்கு
    3. உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லுகிறேன் .ஆனந்தம் என்பதுதான் நம் அனைவரின் இயல்பு நிலை. அதைத்தான் நாம் உறக்க நிலையில் நம்மையறியாமல் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
      துன்பம் என்பதை விழிப்பு அல்லது கனவு நிலையில்தான் அனுபவிக்கமுடியும் அதனால்தான் மனம் துன்ப நினைவுகளை மட்டும் மறக்காமல் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். ஏனென்றால் அது எப்போதாவது ஒருமுறைதான் நம் வாழ்வில் வரும்.You need not worry about your comments. comments alone make us grow.if it is understood in the right sense

      நீக்கு
  2. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற பாடல்கள் இனி வராது. 55 ஆண்டுகள் ஆனாலும் பாடல் வரிகளுடன் நெஞ்சில் நிழலாடும் பாடல்.

      நீக்கு