இசையும் நானும் (290)-திரைப்படம்-வல்லவன் ஒருவன்(1966)
பாடல்:: இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.
MOUTHORGAN VEDIO-290
Song :
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது..
Movie :
வல்லவன் ஒருவன்(1966)
Singers : T.M. Soundararajan-பி .சுசீலா
Music : வேதா
Lyricist : Kannadasan
பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..
இந்த பார்வைக்குத்தானா பெண்ணானது..
நான் கேட்டதை தருவாய் இன்றாவது..
ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது..
பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..
பெ.மாலுக்கு மாலை காதலர் கேட்கும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும்போதே கைகளினாலே வேடிக்கை செய்யவும் வேண்டும்
அது ஓடி வரும்-இன்பம் கோடி வரும்
பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..
இந்த பார்வைக்குத்தானா பெண்ணானது..
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.
ஆ.காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
பாட்டுக்கு யார் துணை வேண்டும்
தோட்டத்துப் பூவை மார்புக்கு மேலே சூடிட யார் சொல்ல வேண்டும்
இங்கு யாருமில்லை.இனி நேரமில்லை
ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது..
ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
ஆ.செண்பக பூவில் வண்டு விழுந்து தேன் குடித்தாடுதல் போலே
பெ.கேட்பதைக் கேட்டு பார்ப்பதைப்பார்த்து பார்த்திட துடிப்பதனாலே
ஆ.இனி பிரிவதில்லை-உன்னை விடுவதில்லை
பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..
ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
கேட்டேன், ரசித்தேன். நன்று.
பதிலளிநீக்கு