புதன், 13 டிசம்பர், 2017

நம்மை ஆட்டிப்படைக்கும் சக்தி எது?

நம்மை ஆட்டிப்படைக்கும் சக்தி எது?

நம்மை ஆட்டிப்படைக்கும் சக்தி எது?

நம் அனைவரையும் ஆட்டி  படைக்கும் சக்தி எது?

சிலர் கடவுள் என்பார்கள்

பலருக்கு என்ன காரணம் என்றே தெரியாது

அதை பற்றிய சிந்தனையே அவர்களுக்கு கிடையாது.

சிலர் கடவுள்  என்று நினைத்துக் கொண்டு கண்ணுக்கு தெரியாத

அந்த சக்தியை  ஒரு வடிவத்திலோ அல்லது மனிதர்களிடமோ அல்லது  ஏதாவது ஒரு கொள்கையையோ பின்பற்றிக்கொண்டு அந்த பிரச்சினைகளிலிருந்து
விடுபட முயற்சி  செய்வார்கள்.

உண்மையில் நம்மை எல்லாம் ஆட்டி படைப்பது நம் மனதில் உள்ள எண்ணங்களே.

அதுவும் நம் மனதில் ஏற்கெனவே பதிவாகி மீண்டும் மீண்டும் மேலெழும்பி
நம்மை இன்பத்திலோ துன்பத்திலோ ஆழ்த்தும் எண்ணங்களே.

நம் மனதில் எண்ணங்கள் தோன்றும் மறையும்

இந்த செயல் இடைவிடாது நம் உயிர் உள்ள வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதை தடை செய்ய முடியாது.

இருந்தாலும் அதன் பிடியிலிருந்து தப்பிக்கும் வழி உள்ளது.

அதுதான் நம் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை செயல்படுத்தாமல் இருப்பது.

அவ்வாறுசெய்தால் சாலையில் நம் எதிரே வேகமாக போகும் வண்டி
நாம் அதன் குறுக்கே நில்லாவிடில் நம்மை கடந்து சென்றுவிடுவதைபோல்,
அந்த எண்ணம் மறைந்துவிடும்.

நமக்கு நன்மை  செய்யக்கூடிய எண்ணங்களை மட்டும் நாம் செயல்படுத்தினால் போதும்.

மனம் நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

நம்முடைய பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக