இசையும் நானும் (261) தமிழ் திரைப்படம் -அண்ணன் ஒரு கோவில் (1977) song- அண்ணன் ஒரு கோவில் என்றால்
MOUTHORGAN-vedio(261)
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒருதீபமன்றோ (அண்ணன்)
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்-தீபமன்றோ)
பொன்னை வைக்கும் இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு (பொன்னை)
அண்ணன் அன்றி யாருமுண்டோ
இன்னும் ஒரு சொந்தமுண்டோ (அண்ணன்)
அதன் பேர் பாசமன்றோ ((அண்ணன்-தீபமன்றோ)
தொட்டிலிட்ட தாயும் இல்லை
தோளிலிட்ட தந்தையில்லை (தொட்டிலிட்ட)
கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்-தீபமன்றோ)
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள்சொன்னதுண்டு (கண்ணன்)
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்-தீபமன்றோ)
கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்கு