இசையும் நானும் (262) தமிழ் திரைப்படம் -அரச கட்டளை (1967) song- வேட்டையாடு விளையாடு
Movie | Arasa Kattalai | Music | K. V. Mahadevan |
---|---|---|---|
Year | 1967 | Lyrics | Alangudi Somu |
Singers | P. Susheela, T. M. Soundararajan |
வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு -
நீவெற்றி எனும் கடலில் ஆடு
குறும்புக்கார வெள்ளாடே
கொடியை வளைத்து தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
தருமத்தையே மறந்து உந்தன்
துணிவைக் காட்ட எண்ணாதே (வேட்டையாடு)
நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே (வேட்டையாடு)
குறும்பையாடே முந்தாதே
குள்ள நரியை நம்பாதே
கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
குணத்தைப் போற்றி நடந்துக்கோ
விரிஞ்சு கிடக்கும் பூமியிலே
இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
விளக்கு வைக்கிற நேரம் வந்தா
வீடிருக்கு புரிஞ்சுக்கோ (வேட்டையாடு)
பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும் (வேட்டையாடு)
கேட்டேன், ரசித்தேன். அரசகட்டளையில் ஒன்றிரண்டைத்தவிர மற்ற எல்லா பாடல்களுமே எனக்குப் பிடிக்கும்.
பதிலளிநீக்குஆலங்குடி சோமுவின் வரிகளை இசையுடன் இசைக்கும்போது அதன் இனிமை தனி சுகம்.
நீக்கு