இசையும் நானும் (260) தமிழ் திரைப்படம் - நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) song- ஒன்றையே நினைத்திருந்து
MOUTHORGAN-vedio(260)
ஒன்றையே நினைத்திருந்து
ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம்..ஆலயம்.
ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம் (ஒருவர்)
கருணை தெய்வம் கைகள் நீட்டி
அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும்
கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்
தியாகமென்னும் ஒளியினாலே
தீபம் ஏற்றும் ஆலயம் (ஒருவர்)
படத்தின் கதையால் மிகவும் ஈர்க்கப் பட்டிருப்பீர்கள் போலும்.
பதிலளிநீக்குஇசையைக் கேட்டேன், ரசித்தேன்.
என்னுடைய 21 வது வயதில் இந்த படத்தை பார்த்தேன். அதில் வரும் காட்சிகள் இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. இந்தப்பாடலை கேட்கும்போது என் மனது வேதனைப்படும். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலை மவுத்தார்கனில் இசைக்கும்போது அது வெளிப்பட்டது .எப்போதும் ஒரு பாடகன் அந்த பாத்திரத்துடன் ஒன்றினால்தான் பாடலில் ஜீவன் வரும் .
பதிலளிநீக்கு