திங்கள், 22 மே, 2017

மரணம் ஒரு முடிவல்ல !

மரணம் ஒரு முடிவல்ல !

ஆம் மரணம் ஒரு முடிவல்ல !
அது நம் ஜீவனின் பயணத்தில்
அடுத்த எபிசோடை தொடங்கும் முன்
விடப்படும் இடைவேளை.

பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மரணம் ஒரு மனிதனின் வாழ்வில் உள்ள
எல்லா பிரச்சினைகளையும்  முடிவுக்கு கொண்டு
வந்து விடும் என்று.

அவன் வாழும் குடும்பம் அல்லது சமூகத்திற்கு
வேண்டுமானாலும்ஒரு தற்காலிக  தீர்வை தரலாம்.

ஆனால் அந்த மனிதனின் அடுத்த பயணம்
வாழ்ந்த காலத்தில் செய்த வினைகளின்
அடிப்படையில்தான்
தொடரும். என்பதே உண்மை.

ஒருவன் வாழ்நாள் முழுவதும்
பிறருக்கு தீமைகளையே செய்து
துன்பம் தந்தவன் அடுத்த பிறவியிலும்
அப்படிதான் அவன் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்வான்.

அதனால்தான். இறப்பதற்குள் ஒவ்வொரு
மனிதனும் தன்னுடைய
தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும்.

நல்ல சிந்தனைகளுடன் நல்ல
பயனுடைய வாழ்க்கையை
அமைத்துக்கொண்டால்தான்.
அடுத்த பிறவி நல்லதாக அமையும்.

 அவன் அடுத்த பிறவியில் நல்லவனாக வாழ்ந்தாலும்
 முற்பிறவியில் செய்த தீய வினைகளின் பயனை
அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும் என்ற
விதியை யாரும் மற்ற முடியாது.

நடந்துபோனவை
கடந்து போனவை மீண்டும் வராது.

அதனால் அவைகளை நினைத்து
நிகழ் காலத்தை கோட்டை விடுபவன் முட்டாள்.


இன்று இந்த உலகில் கடந்த கால சம்பவங்களை பற்றி பேசியே வாழ்நாளை வீணாக்கி கொண்டிருக்கும் கூட்டம் பெருகிக். கொண்டிருக்கிறது.

நடந்த தவறுகளை சரி செய்யும் பணிகளில் அவர்கள் இறங்குவதில்லை.
மாறாக அவர்கள் முழு மூச்சுடன் அதை தடுக்கும் வேலையில்தான்  ஈடுபடுகிறார்கள். என்பது நிதரிசனம்

நம் கையில் கணமும் இருப்பது நிகழ் காலம்
அதுவும் இந்த நொடி மட்டும்தான்

அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்பவனே
வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக