செவ்வாய், 23 மே, 2017

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன?

மொழி என்றால் என்ன?
இன்று மொழியை வைத்து நடக்கும்
அரசியல் செய்யப்படுகிறது

மொழியைக் காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு
மொழி ஆர்வலர்களுடன் சமூக விரோதிகள்
சேர்ந்து கொண்டு மக்களுக்கு
(அதை அடித்து நொறுக்கும் மூடர்களுக்கும்) சேர்த்து
 பயன்படும் பொது சொத்துக்களை
பல ஆண்டுகள் பல ஆயிரம் பேர்களால்
பாடுபட்டு உண்டாக்கப்பட்ட உடைமைகளை
நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த செயலை அந்த ஆர்வலர்களும்  கண்டிப்பதில்லை.
அந்த செயலுக்காக வருத்தப்படுவதுமில்லை.
இது ஒரு கலாச்சாரமாக ஆகிவிட்டது.

முடிவில் அல்லல்படுவது  பெரும்பாலான பொது மக்களே.

மொழி என்பது ஒரு மனிதர்களோ விலங்குகளோ அல்லது பறவைகளோ  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவும் சாதனம் அவ்வளவுதான்.

அது ஒலியாக   வெளிப்படுகிறது.

கூட்டமாக சேர்ந்து வாழும் கூட்டம் அவர்களுக்குள்ளே கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வெவ்வேறுவிதமான சங்கேத ஒலிகளை
காலம்காலமாக எழுப்பி அதை ஒழுங்கு செய்து வைத்துக்கொண்டு
வாழ்ந்து கொண்டு வருகின்றன என்பதுதான் உண்மை

வாயிலிருந்து ஒலி மொழியாக   வெளிவருவதற்கு முன் அது எண்ணமாகத்தான் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது
அப்போது எந்த வேறுபாடுகளும் கிடையாது.

இந்த தத்துவத்தை உணராமல் மக்களிடையே வெறுப்பை விதைத்து அதில் குளிர் காயும் மனிதர்கள் நம்மிடையே பெருகி வருகிறார்கள்.

மொழி வளரவேண்டுமானால் அதை முறையாக கற்பிக்க,
பேச  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஊக்குவிக்கப்படவேண்டும். ஆனால்  இன்று அது இல்லை.

நன்கு படித்த தலைவர்கள் கூட "ழகரம் மற்றும்" "ளகரத்தை " சரியாக உச்சரிக்கத்தெரியவில்லை.
பிற மொழி கலப்பில்லாமல் பேச தெரியவில்லை.

ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி
தமிழை (தமிளை ) விளக்குகிறார்கள்.

தமிழில் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களின்
பெயர்கள் கூட பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.

தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில்
அந்த மாநில மொழிதான் பேசப்படுகிறது,
நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் தமிழ் நாட்டில்
அந்த நிலைமை இல்லை.

பட்டி மன்றங்களில் மட்டும்தான் தமிழ் ஒலிக்கிறது
அதுவும் அங்கு வாழ்க்கையில் மனிதர்களின் செயல்பாடுகள் மட்டும்தான் விமர்சிக்கப்பட்டு சிரிக்க  பொழுதை  ஓட்ட பயன்படுகிறது.
.
தேவாரம் பிரபந்தம் ,திருஅருட்பா ,திருப்புகழ்,மற்றும் பிற மதங்கள்  சார்ந்த இலக்கியங்கள்  போன்ற எண்ணற்ற ஆன்மிகம் சார்ந்த பாடல்களில் தமிழ் உயிரோடு உள்ளது.

திரைப்படங்களில் பல ஆண்டுகளுக்கு முன்
அருமையான கருத்துள்ள தமிழ் பாடல்கள்
தமிழை வளர்த்தது.

சில தமிழ் ஊடகங்களும்
அந்த பணியை செய்தன.

மொழி உணர்வு வேண்டும்.
அது அந்த மொழியை வளர்க்கும்

மொழி உணர்ச்சி கூடாது
அது நன்மைகளை விட தீமைகளை அதிகம்.  விளைவிக்கும்.

பிற மொழிகளை வெறுப்பதினாலும்
தடை செய்வதினாலும்   தாய் மொழி வளராது.

எப்படி மற்ற மொழி பேசுபவர்கள் திட்டமிட்டு அவர்கள் மொழியை நம் மீது திணிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்களோ  அதே பாணியை

இவர்களும் பின்பற்றட்டும்,
மொழியை வளர்க்கட்டும்.
அதுதான் அறிவுபூர்வமான செயல்.

அதை விடுத்து  போராட்டங்களும் அதை தொடர்ந்து வன்முறைகளும்
மக்கள் மனதில் மொழி மீது ஆர்வத்தை தூண்ட உதவாது.

திட்டமிட்டு மொழியை வளர்ப்பதிலும் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் கல்வியாளர்களும், ஆர்வலர்களும் ஆளும் அரசுகளும் ஒன்றிணைந்து செயலாற்றுதலே நன்மை பயக்கும். . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக