வெள்ளி, 26 மே, 2017

இசையும் நானும் (188) திரைப்படம்: பாலும் பழமும் (1961) - பாடல்:என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


இசையும் நானும் (188) திரைப்படம்:பாலும்  பழமும் (1961) - பாடல்:என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்



MY MOUTHORGAN VEDIO 


திரைப்படம்:

பாடியவர் :.டி எம்.எஸ்./பி.சுசீலா 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 
நடிப்பு :சிவாஜி  கணேசன் /சரோஜாதேவி 




ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,(என்னை}

நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா....(என்னை}


பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,(என்றும்)
,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா,(கனவான)

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…

ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,(எந்தன்)

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா(கனவென்னும்)

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…(என்னை}


பெ: இன்று உனக்காக உயிர் 
வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் 
கொண்ட சிலையில்லையா,
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா(அவள்)

அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…

இருவரும்: என்னை யாரென்று எண்ணி 
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் 
என்று நீ கேட்க்கிறாய்,...

பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......



புதன், 24 மே, 2017

இசையும் நானும் (187) திரைப்படம்:சுமை தாங்கி - பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம்


இசையும் நானும் (187) திரைப்படம்:சுமை தாங்கி - பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 


MY MOUTHORGAN VEDIO 



திரைப்படம்:சுமை தாங்கி 
பாடல்:மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 
பாடியவர் :பி. பி ஸ்ரீனிவாஸ் 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல் வரிகள்: கண்ணதாசன் 
நடிப்பு :ஜெமினி கணேசன் 

 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்(3)

வாரி  வாரி  வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்(வாரி)



உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
தெய்வம் ஆகலாம் ..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த  உள்ளம் மலர்கள் ஆகலாம்(ஊருக்கென்று)

யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோவில் ஆகலாம்(மனிதன்)



மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்(மனமிருந்தால்)

துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்(மனிதன்)


செவ்வாய், 23 மே, 2017

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன?

மொழி என்பது என்ன?

மொழி என்றால் என்ன?
இன்று மொழியை வைத்து நடக்கும்
அரசியல் செய்யப்படுகிறது

மொழியைக் காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு
மொழி ஆர்வலர்களுடன் சமூக விரோதிகள்
சேர்ந்து கொண்டு மக்களுக்கு
(அதை அடித்து நொறுக்கும் மூடர்களுக்கும்) சேர்த்து
 பயன்படும் பொது சொத்துக்களை
பல ஆண்டுகள் பல ஆயிரம் பேர்களால்
பாடுபட்டு உண்டாக்கப்பட்ட உடைமைகளை
நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த செயலை அந்த ஆர்வலர்களும்  கண்டிப்பதில்லை.
அந்த செயலுக்காக வருத்தப்படுவதுமில்லை.
இது ஒரு கலாச்சாரமாக ஆகிவிட்டது.

முடிவில் அல்லல்படுவது  பெரும்பாலான பொது மக்களே.

மொழி என்பது ஒரு மனிதர்களோ விலங்குகளோ அல்லது பறவைகளோ  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவும் சாதனம் அவ்வளவுதான்.

அது ஒலியாக   வெளிப்படுகிறது.

கூட்டமாக சேர்ந்து வாழும் கூட்டம் அவர்களுக்குள்ளே கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வெவ்வேறுவிதமான சங்கேத ஒலிகளை
காலம்காலமாக எழுப்பி அதை ஒழுங்கு செய்து வைத்துக்கொண்டு
வாழ்ந்து கொண்டு வருகின்றன என்பதுதான் உண்மை

வாயிலிருந்து ஒலி மொழியாக   வெளிவருவதற்கு முன் அது எண்ணமாகத்தான் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது
அப்போது எந்த வேறுபாடுகளும் கிடையாது.

இந்த தத்துவத்தை உணராமல் மக்களிடையே வெறுப்பை விதைத்து அதில் குளிர் காயும் மனிதர்கள் நம்மிடையே பெருகி வருகிறார்கள்.

மொழி வளரவேண்டுமானால் அதை முறையாக கற்பிக்க,
பேச  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஊக்குவிக்கப்படவேண்டும். ஆனால்  இன்று அது இல்லை.

நன்கு படித்த தலைவர்கள் கூட "ழகரம் மற்றும்" "ளகரத்தை " சரியாக உச்சரிக்கத்தெரியவில்லை.
பிற மொழி கலப்பில்லாமல் பேச தெரியவில்லை.

ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி
தமிழை (தமிளை ) விளக்குகிறார்கள்.

தமிழில் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களின்
பெயர்கள் கூட பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.

தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில்
அந்த மாநில மொழிதான் பேசப்படுகிறது,
நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் தமிழ் நாட்டில்
அந்த நிலைமை இல்லை.

பட்டி மன்றங்களில் மட்டும்தான் தமிழ் ஒலிக்கிறது
அதுவும் அங்கு வாழ்க்கையில் மனிதர்களின் செயல்பாடுகள் மட்டும்தான் விமர்சிக்கப்பட்டு சிரிக்க  பொழுதை  ஓட்ட பயன்படுகிறது.
.
தேவாரம் பிரபந்தம் ,திருஅருட்பா ,திருப்புகழ்,மற்றும் பிற மதங்கள்  சார்ந்த இலக்கியங்கள்  போன்ற எண்ணற்ற ஆன்மிகம் சார்ந்த பாடல்களில் தமிழ் உயிரோடு உள்ளது.

திரைப்படங்களில் பல ஆண்டுகளுக்கு முன்
அருமையான கருத்துள்ள தமிழ் பாடல்கள்
தமிழை வளர்த்தது.

சில தமிழ் ஊடகங்களும்
அந்த பணியை செய்தன.

மொழி உணர்வு வேண்டும்.
அது அந்த மொழியை வளர்க்கும்

மொழி உணர்ச்சி கூடாது
அது நன்மைகளை விட தீமைகளை அதிகம்.  விளைவிக்கும்.

பிற மொழிகளை வெறுப்பதினாலும்
தடை செய்வதினாலும்   தாய் மொழி வளராது.

எப்படி மற்ற மொழி பேசுபவர்கள் திட்டமிட்டு அவர்கள் மொழியை நம் மீது திணிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்களோ  அதே பாணியை

இவர்களும் பின்பற்றட்டும்,
மொழியை வளர்க்கட்டும்.
அதுதான் அறிவுபூர்வமான செயல்.

அதை விடுத்து  போராட்டங்களும் அதை தொடர்ந்து வன்முறைகளும்
மக்கள் மனதில் மொழி மீது ஆர்வத்தை தூண்ட உதவாது.

திட்டமிட்டு மொழியை வளர்ப்பதிலும் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் கல்வியாளர்களும், ஆர்வலர்களும் ஆளும் அரசுகளும் ஒன்றிணைந்து செயலாற்றுதலே நன்மை பயக்கும். . 

திங்கள், 22 மே, 2017

இசையும் நானும் (186) HINDI Film -Sabak (1973)-- song-Barakha rani,

இசையும் நானும் (186)


HINDI Film -Sabak (1973)-- 


song-Barakha rani,

Zara jam ke baraso

MY MOUTHORGAN VEDIO 


Movie/album: Sabak (1973)Song : Barakha rani,Zara jam ke baraso
Music : Music Composer: Usha Khanna
lyrics : Saawan Kumar Tak
Singers : Mukesh Chand Mathur (Mukesh)
Director: Jugal KishoreMusic Label: Saregama
Starring: Shatrughan Sinha, Poonam Dhillon, Ramesh Deo



Barakha rani,
Zara jam ke baraso
Mera dilabar jaa na paye
Jhumakar baraso
Barakha rani
Ye abhi to aaye hai
Kahate hai ham jaae hai
Ye abhi to aaye hai
Kahate hai ham jaae hai
Yun baras baraso baras
Ye umr bhar na jaaye re
Barakha rani,
Zara jam ke baraso
Mera dilabar jaa na paye
Jhumakar baraso
Barakha rani
Mast sawan ki ghata
Bijuriya chamaka zara
Mast sawan ki ghata
Bijuriya chamaka zara
Yaar mera dar ke mere
Sine se laga jaaye re
Barakha rani,
Zara jam ke baraso
Mera dilabar jaa na paye
Jhumakar baraso
Barakha rani
Barakha rani,
Zara jam ke baraso
Mera dilabar jaa na paye
Jhumakar baraso
Barakha rani.






மரணம் ஒரு முடிவல்ல !

மரணம் ஒரு முடிவல்ல !

ஆம் மரணம் ஒரு முடிவல்ல !
அது நம் ஜீவனின் பயணத்தில்
அடுத்த எபிசோடை தொடங்கும் முன்
விடப்படும் இடைவேளை.

பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மரணம் ஒரு மனிதனின் வாழ்வில் உள்ள
எல்லா பிரச்சினைகளையும்  முடிவுக்கு கொண்டு
வந்து விடும் என்று.

அவன் வாழும் குடும்பம் அல்லது சமூகத்திற்கு
வேண்டுமானாலும்ஒரு தற்காலிக  தீர்வை தரலாம்.

ஆனால் அந்த மனிதனின் அடுத்த பயணம்
வாழ்ந்த காலத்தில் செய்த வினைகளின்
அடிப்படையில்தான்
தொடரும். என்பதே உண்மை.

ஒருவன் வாழ்நாள் முழுவதும்
பிறருக்கு தீமைகளையே செய்து
துன்பம் தந்தவன் அடுத்த பிறவியிலும்
அப்படிதான் அவன் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்வான்.

அதனால்தான். இறப்பதற்குள் ஒவ்வொரு
மனிதனும் தன்னுடைய
தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும்.

நல்ல சிந்தனைகளுடன் நல்ல
பயனுடைய வாழ்க்கையை
அமைத்துக்கொண்டால்தான்.
அடுத்த பிறவி நல்லதாக அமையும்.

 அவன் அடுத்த பிறவியில் நல்லவனாக வாழ்ந்தாலும்
 முற்பிறவியில் செய்த தீய வினைகளின் பயனை
அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும் என்ற
விதியை யாரும் மற்ற முடியாது.

நடந்துபோனவை
கடந்து போனவை மீண்டும் வராது.

அதனால் அவைகளை நினைத்து
நிகழ் காலத்தை கோட்டை விடுபவன் முட்டாள்.


இன்று இந்த உலகில் கடந்த கால சம்பவங்களை பற்றி பேசியே வாழ்நாளை வீணாக்கி கொண்டிருக்கும் கூட்டம் பெருகிக். கொண்டிருக்கிறது.

நடந்த தவறுகளை சரி செய்யும் பணிகளில் அவர்கள் இறங்குவதில்லை.
மாறாக அவர்கள் முழு மூச்சுடன் அதை தடுக்கும் வேலையில்தான்  ஈடுபடுகிறார்கள். என்பது நிதரிசனம்

நம் கையில் கணமும் இருப்பது நிகழ் காலம்
அதுவும் இந்த நொடி மட்டும்தான்

அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்பவனே
வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

The PURPOSE of life

The PURPOSE  of life



Your individual SOUL
is a part of WHOLE

Your life's GOAL
is to realise this TRUTH

If you MIND your MIND
it will BIND you

WATCH your thoughts
otherwise it will CATCH in its net
and land  yourself in misery

The purpose of MEDITATION is to
free you from all TROUBLES

MEDITATION  is not controlling the MIND
It is a process to make you you FREE from mind


The PURPOSE  of life is to
find ways to know the PURPOSE  of life

Our life is a CONTINUOUS TRAIN JOURNEY
through BIRTH we board the train
and through DEATH we alight from a train.

We met different types of passengers
in the train. who comes and goes
some are friendly and some are
giving trouble .so also the people
around us in our life

Nothing is permanent .Nothing remains.
But the train goes on moving so also
our life.

After we reach our destination
we forget everything and revert to
our regular duties.

We must always remember that nothing
remains for ever. and everything
changing every moment.

whatever may be changes outside
we should not allow them to disrupt
our inner peace of mind.

உயிரும் ஆன்மாவும் வேறு வேறா?

உயிரும் ஆன்மாவும் வேறு வேறா?

ஆன்மா உடலில்
இருக்கும் போது  உயிர் எனப்படும்

உடலை விட்டு உயிர்நீங்கி விட்டால்
உடல் அழிந்துவிடும்

உயிர் தான் ஆன்மா என்பதை அறியும்வரை
 மறுபடி பிறந்து செத்துக்கொண்டிருக்கும்.
 புதிய உடல்களில் மீண்டும் மீண்டும்.

இந்தக்குழப்பம் உலகத்தில்
இன்பங்களை அனுபவிக்கும் மட்டும் வரை
யாருக்கும் தோன்றாது.

துன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பவர்களுக்கும்
எந்த பிரச்சினைகளுக்கும் எந்த தீர்வும்
புலப்படாமல் கவலைப்படுபவர்களுக்கும்
மேம்போக்காக ஏதோ  சில ஆன்மீக புத்தகங்களை படித்துவிட்டு அரைகுறையாக அவர்களுக்குள்ளே தானே
இது இப்படித்தான் இருக்கும் என்று
ஒரு தீர்மானத்தை செய்துகொண்டு
அதற்கு  விடை தேடி அலைபவர்களுக்கு
இந்த குழப்பம் தோன்றலாம்.

ஹிந்து மதத்தில் இதற்காக தெளிவான விடைகள் 
அளிக்கப்பட்டுள்ளன. 

அவைகளை படித்தாலும் கூட தெளிவு ஏற்படும் என்று
சொல்லமுடியாது.

அந்த தெளிவை அடைந்தவனிடம் சென்று நேரில் தெரிந்துகொண்டால்தான் உண்மை விளங்கும். 

எப்படி என்றால் திரைப்படத்தில் நெருப்பு பற்றி எரிந்தாலும் அது எப்படி தீப்பற்றாதோ  அல்லது சுடாதோ  அதுபோல்தான் புத்தக அறிவும். 

கீதையில் பகவான் கிருஷ்ணன் தெளிவாக ஆன்மாவை பற்றி
விளக்கி கூறியுள்ளார்.

அதை கண்ணதாசனும் கர்ணன் படத்தில்
 பாட்டாக நமக்கு அளித்துள்ளார்.

எல்லோருக்கும் இந்த பாடல் மனப்பாடம்.
சிலர் அதை தங்கள் வீடுகளிலும் கடைகளிலும்
தங்கள் எதிரே அட்டைகளில் அச்சடித்து மாட்டி
வைத்திருப்பதையும் நாம் காணலாம்.

அதை அவர்களோ அங்கு வருபவர்களோ படித்து
 தங்கள் மண்டையில் ஏற்றி
வைத்து புரிந்து கொண்டிருந்தால்
 எந்த குழப்பமும் வரப்போவதில்லை.

மண்டையில் உள்ள கோடிக்கணக்கான
விஷயங்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.

பரம்பொருளின் மற்றொரு பெயர்தான் ஆன்மா.

பரம்பொருள் என்றால் என்ன என்று கேள்வி கேட்டால்
உடனே பதில் சொல்லிவிடுவார்கள்.

அங்கிங்கெனாதபடி  எல்லா இடத்திலும் நீக்கமற 
நிறைந்திருக்கும் பொருள் என்று.

அந்த பொருள் எப்படி இருக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது

ஆனால் அதற்கு  பல பெயர்களை நாமகரணம் சூட்டி,
 வடிவம் அளித்து அதுதான் அது என்று
தப்பு கணக்கு போட்டுக்கொண்டு காலத்தை கடத்தி காலன்  அழைக்கும்போது அவன் பின்னே மவுனமாக சென்றுவிடுகின்றோம்.

ஆனால் அதிலிருந்துதான்  எல்லாம் உருவாகின்றன. நம் கண்கள் முன் உலாவுகின்றன.

நம் கண் முன்பே மறைந்துவிடுகின்றன.

அதை காணும் நாமும்   மறைந்துபோகின்றோம்.

அது தனி தனி ஆன்மாவாக விரிவடையாமல் ஒட்டு மொத்தமாக இருக்கும்போது அதன் பெயர் பரமாத்மா

அதுவே அண்டங்களாகவும் பிண்டங்களாகவும்(உயிர்கள்) விரிவடைந்து
ஒவ்வொரு கூட்டுக்குள் புகுந்து கொள்ளும்போது ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது.

அதுபோலத்தான் ஒவ்வொரு உடலும்
அது மனிதராகட்டும்.அல்லது ஏதாவது உயிராகட்டும் அதன் உள்ளும் பரமாத்மாவின் சக்தி ஆத்மாவின் வடிவில் புகுந்துகொள்கிறது

அது எப்படி என்றால்/ எந்த மின்  சாதனத்திற்கும் அது இயங்க மின்சக்தி (பேட்டரி) தேவைப்படுவது போல்.


பாட்டரியில் உள்ள மின் சக்தி தீர்ந்தவுடன் அந்த மின் சாதனமும்(உடல்)பேட்டரி சக்தி இருந்த மின்கலமும் பயனற்று போய் விடுகின்றன.

பேட்டரியில் உள்ள சக்தி (ஜீவான்மா) எங்கிருந்து வந்ததோ அதனுடன்(பரமாத்மா) உடன் கலந்து விடுகிறது.

இதுதான் உண்மையான தத்துவம்.
இதை புரியவைக்கத்தான் பல மதங்களும் பல சாத்திரங்களும்.


உண்பது, உறவு கொள்வது, உறங்குவது விழிப்பது உழைப்பது, சண்டைபோடுவது  போன்ற செயல்கள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானவை.

இதை தாண்டி முறையாக தகுந்த வழிகாட்டுதலுடன்
சிந்தித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். 

வெள்ளி, 19 மே, 2017

இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை


இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட
நமக்கு சொந்தமானது இல்லை! 


ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் 
ஒரு கோடியாவது ஆகும்.

அந்த ஒரு கோடிக்கு 
என்னென்ன கிடைக்கிறது? 

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது 
என்று சொல்லமுடியுமா?! முடியாது. 

காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; 
ஆகவே, அவனுக்கும் சொந்தம்!

நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது 
என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது;
து, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை. 

ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!

சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? 
முடியவே முடியாது... 
அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

சரி, இடது பக்க சுவர்?!
அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?
அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!

சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் 
ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?

நிச்சயமாக இல்லை...
 இடம் எல்லோருக்குமே பொதுவானது! 
அப்படியென்றால்,
*அந்த ஒரு கோடிக்கு நமக்கு 
கொடுக்கப்பட்டது என்ன?!*

1500 சதுர அடி கொண்ட காலியான 
அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!

சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, 
தரையோ நம்முடையது அல்ல, 
அந்த சுவர்களுக்கு இடையே உள்ள 
SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!

அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள 
த்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம், 
ஆனால்,
என்னுடையது என்று 
உரிமை கொண்டாட முடியாது!

கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.

இந்த பூமியில் வாழ்வதற்கான 
SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்; 

அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் 
உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்!

ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் 
உரிமை கொண்டாட முடியாது. 

கொண்டுசெல்லவும் முடியாது!

என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் 
என்று சொல்லலாம்,
ஆனால், அவர் அப்பாவின் மனைவி, 
அவருக்கு தான் சொந்தம். 

அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது!

சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா 
என்றால் அதுவும் இல்லை. 

அவர் இன்னொருவரின் மகள்; 
தாத்தாவுக்கு தான் சொந்தம்! 

தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,
காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது!

இப்படி இந்த பூமியில் இருக்கின்ற 
ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை! 

நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...

பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், 
போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்!?

நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம். 

சக மனிதர்களையும் நேசிப்போம். 

*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி ஏதாவது செய்வோம்!*


தகவல்-திரு.கே.எஸ் .ரமேஷ்.

இசையும் நானும் (185)-HINDI-திரைப்படம் - Meera (1947) பாடல்-pag ghungaroo re-

 

இசையும் நானும் (185)-HINDI-திரைப்படம் - Meera (1947)  பாடல்--

pag ghungaroo re

pag ghungaroo re


இசையும் நானும் (185)


MY MOUTHORGAN VEDIO 

MOVIE :

மீரா (1947)

Movie/album: Meera (1947)
Singers: M.S. Subbulakshmi
Song Lyricists: Meera Bai

Director: Ellis Dungan
Starring: M.S. Shubbulakshmi, Radha


70 ஆண்டுகள் கடந்தும் நினைவில் நிற்கும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் மீரா படத்தில்  பாடி நடித்த பாடல்.   

Pag ghungroo bandh meera nachi re lyrics


pag ghungaroo re

pag ghungaroo re

pag ghungaroo baandh  meera nachi re
pag ghungaroo baandh  meera nachi re

main toh apne narayan ki-2
hogayi  aap hi daasi re (pag)

vish ka pyaala rana ji bheja-2
peevat meera haansi re(pag)

log kahein meera bhai baavari-2
saas kahe kulnaasi re


meera ke prabhu ghirdhar naagar
ghirdhar naagar

pag ghungaroo baandh  meera nachi re




 

 

 

செவ்வாய், 16 மே, 2017

இசையும் நானும் (184) தமிழ் திரைப்படம் - சாந்தி (1965) பாடல்--நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்


இசையும் நானும் (184) தமிழ் திரைப்படம் - சாந்தி (1965) பாடல்--நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்


இசையும் நானும் (184)


MY MOUTHORGAN VEDIO 

MOVIE :

சாந்தி (1965)


Song Lyrics
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் (நெஞ்சத்திலே)
நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட
ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது நிம்மதி ஏது (நெஞ்சத்திலே)
காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம் போலாட
நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும் (நெஞ்சத்திலே)




Shanthi
HeroSivaji Ganaesan
DEVIKA
Music DirectorViswanathan Ramamurthy
LyricistKannadasan
SingersP.Suseela
Year1965