சனி, 3 அக்டோபர், 2015

இசையும் நானும் (61)

இசையும் நானும் (61) 

இசையும்  நானும் என்னும் தொடரில்

என்னுடைய 61 வது காணொளி

மவுதார்கன் இசை

தமிழ் திரைப்பட பாடல்

படம்-படகோட்டி- நானொரு குழந்தை நீயொரு குழந்தை..
அருமையான ,இனிமையான பாடல்.

நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி (நான் ஒரு குழந்தை)

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது (நேற்றொரு)

தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா (நான் ஒரு குழந்தை)


ஊரறியாமல் உறவறியாமல்
யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே

ஓடிய கால்களை  ஓடவிடாமல்
யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே 

ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே (ஆவி)


பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா (நான் ஒரு குழந்தை)


காணொளி இணைப்பு.



2 கருத்துகள்:

  1. சரணங்கள் இன்னும் நன்றாக இருக்கின்றன. ரசித்தேன். ஆனால் இரண்டாம் முறை வரும்போது பல்லவி ஓகே.

    பதிலளிநீக்கு

  2. Thank Mr Sriram .

    நான் ஒரு கத்துக்குட்டிதானே !
    இசை என்பது ஆழம் காண முடியாத கடல்.

    அதில் என்னுடைய 67 வது வயதில்
    நீந்த தொடங்கி இருக்கிறேன்.

    கர்நாடக இசை, ஆங்கிலம்,ஹிந்தி தெலுங்கு ,
    வடமொழி, தமிழ்,என பல மொழிகளில்
    மொத்தமாக 60 பாடல்களை நானே முயற்சி செய்து
    பல நூறு முறை பயிற்சி செய்து
    காணொளிகளாக வெளியிட்டிருக்கிறேன்.

    இதில் நானே இயற்றி இசைஅமைத்து பாடியுள்ள
    பாடல்களும் அடங்கும் உங்களைப் போன்ற ரசிகர்களின் ஆதரவால்.

    தினமும் 4 மணி நேரம் பயிற்சி செய்கிறேன்.
    இரவு 12 மணிக்குதான் உறங்க செல்கிறேன்.
    மீண்டும் 2 அல்லது மூன்று மணிக்கே
    விழித்துக்கொண்டு என்னுடைய
    ஆன்மீக தேடலை பொழுது
    விடியும் வரை தொடருகிறேன்.
    பகலில் மட்டும் 2மணி நேரம் தூக்கம்.

    எவ்வளவோ கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்
    எதற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
    ஊக்கம் தருவாரும் இல்லை.
    உதவி செய்வாரும் இல்லை
    முடிவில் தன் கையே தனக்குதவி என்று
    துணிந்தபின்புதான்.உற்சாகம் பிறந்துவிட்டது.

    மாட்டு செக்கில் மாட்டிக்கொண்ட
    மணிலாக் கடலையைப் போல என் வாழ்வு.
    ஓய்வு கிடையாது அதன் இடையேதான் இத்தனை முயற்சியும்

    I am an unsung hero

    But I never care for abuse, criticism,etc

    I will always look forward for new things in my life.

    That is my energy.That is my power.






    .

    பதிலளிநீக்கு