மனித குலத்து எதிரிகள்
மத வெறியும் இன வெறியும்
மனித குலத்து எதிரிகள்
இவ்வுலக மாந்தர்களின்
இன்ப வாழ்வை சிதைக்க
வந்த கிருமிகள்.
ஒருவருக்கொருவர் உதவி
வாழும் உயர்ந்த குணம்
மனித மனங்களில்
வளர வேண்டும்
ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து இசைந்து போகும்
இனிய பண்பு மலர வேண்டும்
குறை காணும் போக்கொழிந்தால்
காண்பதெல்லாம் நிறைவாகும்
விருப்பும் வெறுப்பும் நம்மை
விட்டொழிந்தால் போதும்
அனைவரின் வாழ்வும்
இன்ப மயமாகும்
பிரிவினை பேசி பிதற்றி திரியும்
கேடர்களை விட்டு விலகிடுவோம்
பகைமை என்னும் தீயை மூட்டி
அன்பு மனங்களில் நச்சு விதையை
விதைக்கும் நய வஞ்சகர்களின்
உளறல்களுக்கு செவி சாயோம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே
ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவர்க்கும்
தாழ்வே என்ற பாரதி சிந்தனையை
மனதில் கொண்டு நலம் பெறுவோம்.
மத வெறியும் இன வெறியும்
மனித குலத்து எதிரிகள்
இவ்வுலக மாந்தர்களின்
இன்ப வாழ்வை சிதைக்க
வந்த கிருமிகள்.
ஒருவருக்கொருவர் உதவி
வாழும் உயர்ந்த குணம்
மனித மனங்களில்
வளர வேண்டும்
ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து இசைந்து போகும்
இனிய பண்பு மலர வேண்டும்
குறை காணும் போக்கொழிந்தால்
காண்பதெல்லாம் நிறைவாகும்
விருப்பும் வெறுப்பும் நம்மை
விட்டொழிந்தால் போதும்
அனைவரின் வாழ்வும்
இன்ப மயமாகும்
பிரிவினை பேசி பிதற்றி திரியும்
கேடர்களை விட்டு விலகிடுவோம்
பகைமை என்னும் தீயை மூட்டி
அன்பு மனங்களில் நச்சு விதையை
விதைக்கும் நய வஞ்சகர்களின்
உளறல்களுக்கு செவி சாயோம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே
ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவர்க்கும்
தாழ்வே என்ற பாரதி சிந்தனையை
மனதில் கொண்டு நலம் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக