நவராத்ரி வாழ்த்துக்கள்
நவராத்ரி வாழ்த்துக்கள்
இந்த உலகில் நாம் மட்டும் பிறக்கவில்லை
நம்மோடு கணக்கற்ற உயிரினங்களும்
இறைவனால் படைக்கப்பட்டு நம்மோடு இணைந்து
அன்போடு நமக்கு உதவி செய்து வாழ்கின்றன
என்பதை நாம் உணர்ந்து கொள்ளும்முகத்தான்
நம்முடைய முன்னோர்கள்.நவராத்திரி விழாக் காலத்தில்
பொம்மைக் கொலு வைக்கும் முறையை ஏற்படுத்தி வைத்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் அனைவரும்
ஒருவரோடு கலந்து பழகி புரிந்துகொண்டு அன்பு செலுத்தவும்,
நட்புறவை பலப்படுத்தவும், கலைஞர்களின் வாழ்வை மேம்பவுத்தவும், கலைகளை வளர்க்கவும், இறை வழிபாட்டை மனிதர்களிடையே ஊக்குவிக்கவும். வாழ்வில் ஏற்படும் இடர்களை மறந்து மன மகிழ்ச்சியுடன் நம்மை மேம்படுத்தி கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் இந்த விழாக் காலம் அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் நலமும் ,பெற்று மகிழ அன்னை பராசக்தியை வேண்டுவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக