திங்கள், 27 ஜூலை, 2015

இவர்களை யார் திருத்துவது?

இவர்களை யார் திருத்துவது?


கடமையை ஒழுங்காக செய்யாதவன்
அதை ஒழுங்காக  செய்ய வேண்டும் என்று
பகவத் கீதையை மற்றும் பண்டரிபுரம்
மகாத்மியத்தை காட்டி
பிறருக்கு உபதேசம் செய்வது



அலுவலகத்தில் ஒழுங்காக
வேலை செய்வது கிடையாது.
கடமையை செய்ய காசு எதிர்பார்ப்பது

சாலை விதிகளை மதிப்பது கிடையாது
மதிக்காமல் காவல் துறைக்கு லஞ்சம் கொடுத்து
காலத்தை ஓட்டுவது

அநீதிகளை  கண்டும் காணாமல் இருப்பது

எதற்கெடுத்தாலும் பொய் சொல்வது
தங்கள் குழந்தைகளையும்  பொய் சொல்லி
ஊக்குவித்து அவர்கள் எதிர்காலத்தை
பாழாக்குவது

தேவையில்லாமல்
பொருட்களை வாங்கி  குவிப்பது

தேவையில்லாமல் தவளைபோல் கவைக்குதவாத
சமாசாரங்களை எப்போதும் வம்பளந்து கொண்டிருப்பது.

விழித்திருக்கும் நேரத்தில் உறங்குவது

உறங்கும் நேரத்தில் விழித்திருப்பது.

கண்ட கண்ட உணவுகளை உண்டு நோயாளியாகி
மருந்துகளையே முடிவில் உண்டு மாண்டு போவது.

ஆன்மிகம் என்ற பெயரில் யார்
எதை சொன்னாலும் அதை
அப்படியே நம்பி நாசமாய்ப்  போவது

வதந்திகளையும், பொய் பேசுபவர்களையும்,
ஏமாற்றுகாரர்களையும்
ஆராயாமல் அப்படியே
முழுமையாக நம்பி மோசம் போவது.

பேராசையினால் இருப்பதையும்
இழந்து மோசம்  போ ய் புலம்பி  திரிவது

யார் எதை சொன்னாலும் விசாரிக்காமல்
 லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துவிட்டு
ஆபத்தில் மாட்டிகொண்டு ஆயுள் முழுவதும் அல்லபடுவது.

இந்த பட்டியலுக்கு முடிவே இல்லை. 

1 கருத்து: