செவ்வாய், 28 ஜூலை, 2015

நான் யார் ?(தொடர்ச்சி)(1)

நான் யார் ?(தொடர்ச்சி)(1)

நான் யார் என்ற இந்த கேள்வியை
யாரிடம் கேட்பது?

மற்றவர்களிடம் போய்க் கேட்டால்.
இவன் ஒரு மன நலம் சரியில்லாதவன்
போல் தெரிகிறது.

நம்மிடம் வந்து "நான் யார்" என்று கேட்கிறான்
என்று கிண்டல் செய்வார்கள்.

இதில் ஒரு உண்மை என்னவென்றால்
எவரைக் கேட்டாலும் அவர்களுக்கே
அவர்கள் யார் என்று தெரியாது
என்பதே உண்மை.

அதனால்தான் "நான் யார் " என்று
உனக்குள்ளேயே கேட்டுக்கொள்
என்றார் பகவான் ரமணர்.

ஆனால் நீங்கள் கேள்வி கேட்டால்
உங்கள் மனது பல பதில்களை சொல்லும்
எப்படி?

அது தனது நினைவில் சேமித்து வைத்துள்ள
தகவல்களிலிருந்து ஒவ்வொன்றாக
புருடா (அவிழ்த்து விட்டுகொண்டிருக்கும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும். ?

அந்த புருடாக்களை நம்பாதீர்கள்.

சும்மா பார்த்துக்கொண்டிருங்கள்.
அது போதும்.

எவ்வளவு காலம்?

சில மணியிலோ அல்லது சில மாதங்களிலோ 
அல்லது சில வருடங்களிலோ
அந்த பொய் மூட்டைகள் காலியாகிவிடும்
.
ஆனால் நீங்கள் புதிதாக குப்பைகளை
அதில் போடாமல் இருந்தால்.

உங்களுக்கு பதில் சொல்ல மனம்
என்று ஒன்று இருக்காது.

அப்போது நீங்கள் யார் என்று உங்களுக்கு
புரிந்துவிடும்

ஆனால் அது வரைக்கும்
பொறுமை காக்க வேண்டும்.

தயார் என்றால்
வெற்றி உங்கள் பக்கம்

கஷ்டம்தான். பாஸ்ட் புட்  சாப்பிடும்
எங்களுக்கு இது ரொம்ப  ரொம்ப கஷ்டம்தான் .

ஏதாவது குறுக்கு வழி இருந்தால்
சொல்லுங்கள் என்கிறீர்களா.?

இல்லை சாமி .
பாடுபட்டால்தான் பலனுண்டு.


1 கருத்து: