வெள்ளி, 31 ஜூலை, 2015

இசையும் நானும் (34)

இசையும் நானும் (34)

இசையும் நானும் (34)

இசையும்   நானும் என்னும் தொடரின்
என்னுடைய 34வது காணொளி

நானே இயற்றி பாடியுள்ள பாடல்.




ஹரி  என்று சொன்னாலும்
ஹரன் என்று சொன்னாலும்







அறியப்படும் பொருள் ஒன்றுதான்.
முடிவில் அறியப்படும்
பொருள் ஒன்றுதான் (ஹரி)






இதை அறியாது அனுதினமும்
வாதம் செய்யும் மனிதர்களே

உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு
உங்கள் இதயத்தின் உள்ளே
சென்று பாருங்களே  (ஹரி)

கல்லினில் இருப்பவன்
நாம் சொல்லும்
சொல்லினில் இருப்பவன் (கல்லினில்)

நம் கண்கள் காணும்
உயிர்கள் யாவுமாய் இருப்பவன் (ஹரி)

இந்த உண்மையை உணர்ந்துகொண்டு
உள்ளத்தில் பேதம் நீங்கி
உலகில் மகிழ்வோடு வாழுங்களே.


காணொளி இணைப்பு:

https://youtu.be/QL84i7AUqnU 
Pictures-courtesy-google images. 

செவ்வாய், 28 ஜூலை, 2015

நான் யார் ?(தொடர்ச்சி)(1)

நான் யார் ?(தொடர்ச்சி)(1)





நான் யார் என்ற இந்த கேள்வியை
யாரிடம் கேட்பது?

மற்றவர்களிடம் போய்க் கேட்டால்.
இவன் ஒரு மன நலம் சரியில்லாதவன்
போல் தெரிகிறது.

நம்மிடம் வந்து "நான் யார்" என்று கேட்கிறான்
என்று கிண்டல் செய்வார்கள்.

இதில் ஒரு உண்மை என்னவென்றால்
எவரைக் கேட்டாலும் அவர்களுக்கே
அவர்கள் யார் என்று தெரியாது
என்பதே உண்மை.

அதனால்தான் "நான் யார் " என்று
உனக்குள்ளேயே கேட்டுக்கொள்
என்றார் பகவான் ரமணர்.

ஆனால் நீங்கள் கேள்வி கேட்டால்
உங்கள் மனது பல பதில்களை சொல்லும்
எப்படி?

அது தனது நினைவில் சேமித்து வைத்துள்ள
தகவல்களிலிருந்து ஒவ்வொன்றாக
புருடா (அவிழ்த்து விட்டுகொண்டிருக்கும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும். ?

அந்த புருடாக்களை நம்பாதீர்கள்.

சும்மா பார்த்துக்கொண்டிருங்கள்.
அது போதும்.

எவ்வளவு காலம்?

சில மணியிலோ அல்லது சில மாதங்களிலோ 
அல்லது சில வருடங்களிலோ
அந்த பொய் மூட்டைகள் காலியாகிவிடும்
.
ஆனால் நீங்கள் புதிதாக குப்பைகளை
அதில் போடாமல் இருந்தால்.

உங்களுக்கு பதில் சொல்ல மனம்
என்று ஒன்று இருக்காது.

அப்போது நீங்கள் யார் என்று உங்களுக்கு
புரிந்துவிடும்

ஆனால் அது வரைக்கும்
பொறுமை காக்க வேண்டும்.

தயார் என்றால்
வெற்றி உங்கள் பக்கம்

கஷ்டம்தான். பாஸ்ட் புட்  சாப்பிடும்
எங்களுக்கு இது ரொம்ப  ரொம்ப கஷ்டம்தான் .

ஏதாவது குறுக்கு வழி இருந்தால்
சொல்லுங்கள் என்கிறீர்களா.?

இல்லை சாமி .
பாடுபட்டால்தான் பலனுண்டு.






திங்கள், 27 ஜூலை, 2015

இவர்களை யார் திருத்துவது?

இவர்களை யார் திருத்துவது?


கடமையை ஒழுங்காக செய்யாதவன்
அதை ஒழுங்காக  செய்ய வேண்டும் என்று
பகவத் கீதையை மற்றும் பண்டரிபுரம்
மகாத்மியத்தை காட்டி
பிறருக்கு உபதேசம் செய்வது



அலுவலகத்தில் ஒழுங்காக
வேலை செய்வது கிடையாது.
கடமையை செய்ய காசு எதிர்பார்ப்பது

சாலை விதிகளை மதிப்பது கிடையாது
மதிக்காமல் காவல் துறைக்கு லஞ்சம் கொடுத்து
காலத்தை ஓட்டுவது

அநீதிகளை  கண்டும் காணாமல் இருப்பது

எதற்கெடுத்தாலும் பொய் சொல்வது
தங்கள் குழந்தைகளையும்  பொய் சொல்லி
ஊக்குவித்து அவர்கள் எதிர்காலத்தை
பாழாக்குவது

தேவையில்லாமல்
பொருட்களை வாங்கி  குவிப்பது

தேவையில்லாமல் தவளைபோல் கவைக்குதவாத
சமாசாரங்களை எப்போதும் வம்பளந்து கொண்டிருப்பது.

விழித்திருக்கும் நேரத்தில் உறங்குவது

உறங்கும் நேரத்தில் விழித்திருப்பது.

கண்ட கண்ட உணவுகளை உண்டு நோயாளியாகி
மருந்துகளையே முடிவில் உண்டு மாண்டு போவது.

ஆன்மிகம் என்ற பெயரில் யார்
எதை சொன்னாலும் அதை
அப்படியே நம்பி நாசமாய்ப்  போவது

வதந்திகளையும், பொய் பேசுபவர்களையும்,
ஏமாற்றுகாரர்களையும்
ஆராயாமல் அப்படியே
முழுமையாக நம்பி மோசம் போவது.

பேராசையினால் இருப்பதையும்
இழந்து மோசம்  போ ய் புலம்பி  திரிவது

யார் எதை சொன்னாலும் விசாரிக்காமல்
 லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துவிட்டு
ஆபத்தில் மாட்டிகொண்டு ஆயுள் முழுவதும் அல்லபடுவது.

இந்த பட்டியலுக்கு முடிவே இல்லை. 

நான் யார் ?

நான் யார் ?

நான் யார் ?

இந்த கேள்விக்கு ஆதி சங்கரர் முதல்
கடைசியாக ரமணர் வரை பதில் சொல்லி விட்டார்கள்.

பகவான் ரமணர் எப்படி என்று வாழ்ந்தும்
காட்டி விட்டார் நமக்காக.






எவ்வளவு பிறவிகள்
இந்த வஸ்துவைப் பற்றி
கதை கேட்பது ?

சாதனையில்
இறங்க வேண்டாமோ ?

தினமும் சாப்பிட்டுவிட்டு
தூங்கி விழித்து முடிவில்
எழமுடியாமல் தூங்கி-மீண்டும்
விழிக்கும்போது வேறு ஒரு உடலில் விழித்து
இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்படி?

தண்ணீரில் குதித்தால்தான்
நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்.

நீந்துபவனை பேட்டி  எடுப்பதினாலேயோ
நீச்சல் பற்றிய புத்தகங்களைப் படிப்பதினாலேயோ
அதைப் பற்றி சிந்தை செய்வதாலோ
நீச்சல் பற்றி பயிற்சியாளரின்
பேச்சைக் கேட்பதினாலேயோ
எந்த பயனும் விளையப் போவதில்லை.

அதைப்போல்தான் ஆன்மாவை அறிவதும்

இன்றே இப்போதே தொடங்குவோம்
முயற்சியை.நான் யார் என்பதை உணர

ஏனென்றால் அடுத்த கணம்
நாம் பிணமாக போய்
ஒன்றும் செய்ய முடியாமல் போய்
அடுத்த பிறவிக்காக விண்ணில்
அலையே வேண்டி நேரலாம். 

அப்துல் கலாம் -உங்களுக்கு எங்கள் சலாம்

அப்துல் கலாம் -உங்களுக்கு எங்கள் சலாம் 



மதங்களை கடந்தவர்
மாசு மருவற்றவர்

விண்ணில் கணைகளை   ஏவினாலும்
மாணவர்கள் தொடுக்கும் கேள்விக்
கணைகளுக்கும் செவி சாய்ப்பவர்

அலைகடலின் ஓரத்திலே தோன்றி
அகில உலகெங்கும் தன் முயற்சியால்
புகழ் கொடியை  நாட்டியவர்.

அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் கவர்ந்தவர்

உயிர் உடலை விட்டு பிரிந்தாலும்
அவர் ஆன்மா இங்குதான் மீண்டும் வரும்
அவர் கண்ட கனவை மெய்யாக்க.

மதம்  என்னும்  குறுகிய  வட்டத்துள்
சிக்கிக்  கொள்ளாதவர்

மாமேதையானாலும்
மண்டைக் கனம்   இல்லாதவர். .

மாணவர்களை நேசித்தவர்,

ஆணவம் கொண்ட
அரசியல்வாதிகளை புறக்கணித்தவர்.



பிறந்த மண்ணின்
 பெருமையை விண்ணிலும்
பரவ செய்தவர்.

குணம் என்னும்
 குன்றேறி நின்றவர்.

என்றும் அவர் புகழ்
இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.


இசையும் நானும் (33)

இசையும்  நானும் (33)
இசையும் நானும் என்னும் இத்தொடரின் என்னுடைய

33 வது பாடல் -மவுதார்கன் இசையில்-

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் ஒரு இனிமையான பாடல்

Image result for uyarntha manithan


விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் உருவானது.

Image result for uyarntha manithan

அந்த பாடல் வரிகள் இதோ.
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா 
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா 
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு 
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு .

வண்ண விழியின்  வாசலில் என் தேவன் தோன்றினான் 
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் 
கன்னியழகைப்   பாடவோ அவன் கவிஞனாகினான் 
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞனாகினான் 
கலைஞனாகினான் (நாளை)

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் 
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன் 
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் 
மங்கையின் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் 
மயக்கம் கொண்டதேன்  (நாளை)

காணொளி இணைப்பு.

https://youtu.be/KZ-MWUHM0To



ஞாயிறு, 19 ஜூலை, 2015

தெய்வங்கள் வாழும் இல்லம்


தெய்வங்கள் வாழும் இல்லம் 


கள்ளமில்லா உள்ளம்
தெய்வங்கள் வாழும் இல்லம்

மழலைகள் மனித குலத்திற்கு
இறைவன் தந்த  செல்வம்

அதை அடையாதோர்
அடைவார்  அளவற்ற துன்பம்

ஆனால் அடைந்தவரோ அதன்
மாண்பை உணராது மட்டிபோல்
மதம் பிடித்து அலைகின்றார்.

அடித்து துன்புறுத்துகின்றார்
தகாத வார்த்தைகள் கூறி
அவர்களின் மனதில் ஆறாத
வடுவை உண்டாக்குகின்றார்.


சிலர் பெற்ற குழந்தையை
குப்பை தொட்டியில் இரக்கமின்றி
வீசுகின்றார் பிறர் தம்மை
ஏசுவாறேன்று .எண்ணி
என்னே மடமை !

இன்னும் சிலரோ மாதவம் செய்தால்  கூட
கிடைக்காத பெண் சிசுவை தாய்ப்பால்
ஊட்ட மறுத்து கள்ளிப்பால் ஊட்டி
கொல்லுகின்றார்

என்று  திருந்துமோ இந்த மூடர் கூட்டம் 
தன்  அடாத செயலுக்கு என்று வருந்துமோ 
நான் அறியேன்?



Pattabiraman Tr's photo.

செவ்வாய், 14 ஜூலை, 2015

இசையும் நானும் (28)

இசையும் நானும் (28)

இசையும் நானும் எனும் தொடரில்
என்னுடைய 28 ஆவது காணொளி


ஒரு இந்தி பாடல்.

திரு கிஷோர்  குமார் பாடிய

பிரபலமான பாடல்.





பாடல்  (ஆஜ் உன்சே பஹேலி  முலாகாத் ஹோகி "


பாடல் இணைப்பு.

http://youtu.be/JsjPP3_P_BY



திங்கள், 13 ஜூலை, 2015

எம் எஸ் .விஸ்வநாதன் ஒரு சகாப்தம்

எம் எஸ் .விஸ்வநாதன் ஒரு சகாப்தம் 



1928-2015

Image result for ms viswanathan


இசை ரசிகர்களால் MSV

அன்போடு அழைக்கப்பட்ட

எம். எஸ். விஸ்வநாதன்

இசை வாணியுடன் கலந்துவிட்டார்.


இசை தந்த அவர் வடிவம்

மறைந்துவிட்டது

ஆனால் அவர் உருவாக்கிய

இசைக்கோலங்கள் இவ்வுலகம்

உள்ளவரை நிலைத்து இன்பத்திலும்

துன்பத்திலும் கேட்போரின்

இதயத்தை

வருடிக்கொண்டிருக்கும்.



புல்லாங்குழல் கொடுத்த  மூங்கில்

இல்லை .ஆனால் அவர் பாடிய

புருஷோத்தமனின் புகழோடு

அவர் புகழும் என்றென்றும்

நிலைத்து நிற்கும்.

இசையும் நானும் (26)






இசையும் நானும் (26)


இசையும்  நானும் என்னும் தொடரில் என்னுடைய

26 வது மவுதார்கன் இசை.

மதுமதி என்ற ஹிந்தி படத்தில் வரும்

"ஆஜாரே" என காலத்தால் அழியாது

 நிலைத்து நிற்கும் பாடல்.






காணொளி இணைப்பு:



https://youtu.be/z7lhuIfFTV0



புதன், 8 ஜூலை, 2015

அதிசய பெண்மணி.

அதிசய பெண்மணி.


கீழே காணும் கானொளியில்

சந்திரா  சுப்ரமண்யம் என்ற பெண்மணி

ஒரு இந்தி பாடலை ஆண் மற்றும் பெண் குரலில்

பாடி கலக்குவதை கண்டு கேட்டு மகிழுங்கள்.

இணைப்பு கீழே


https://www.youtube.com/watch?v=95kpRBVaYKo

திங்கள், 6 ஜூலை, 2015

இசையும் நானும் (23)



இசையும் நானும் (23)

இசையும் நானும் என்ற தொடரில் என்னுடைய

23 வது வீடியோ .

மவுத்தார்கள் இசையில் "தும்  பின் ஜாவு  கஹான் "
என்ற மிக பிரபலமான ஹிந்தி பாடல்.

விரும்புவோர் கேட்க இணைப்பு.

http://www.youtube.com/attribution_link?a=66GSRuzER7I&u=/watch%3Fv%3DgeWGRtNpFLM%26feature%3Dem-upload_owner

ஞாயிறு, 5 ஜூலை, 2015

மருத்துவ உதவியாளர்களின் சேவை பற்றி

மருத்துவ உதவியாளர்களின் சேவை பற்றி


மருத்துவ உதவியாளர்களின்  சேவை பற்றி 


Image result for nurses



மனிதர்களின் பிணி போக்கி
துன்பம் தேங்கிய முகத்தில்
இன்பத்தைக் கூட்டும்
மருத்துவர்களின் பணிக்கு
ஈடு வேறெதுவும் ஈடாகாது.

அதே சமயம் நோயுற்றவர்களை
தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து
அவர்களை நல்ல  நிலைக்கு கொண்டு வரும்
மருத்துவ உதவியாளர்களின்  பணியும்
பாராட்டுதற்குரியதே.

அதிலும் சிலர் தங்கள் பணியில்
அவர்களின் முத்திரையை பதிக்கிறார்கள்
என்பதற்கு கீழ்க் கண்ட
காணொளி ஒரு உதாரணம்.

பார்த்து மகிழ .




https://www.facebook.com/Kadhambam/videos/vb.363469940379117/898236526902453/?type=2&theater