ஞாயிறு, 14 ஜூன், 2015

உள்ளும் புறமும் அவனை காணலாம்

உள்ளும் புறமும் 
அவனை காணலாம் உள்ளும் புறமும்
அவனை காணலாம்
நீ உலகில் உண்மையாய்
நடந்துகொண்டால்

அல்லும் பகலும் ஓய்வின்றி
பேயாய் உழலும் மனமே

நீ ஆசைகள் விரிக்கும் வலையில்
வீழ்ந்து புலன் வழி சென்றால்
அனுதினம் அடைவது ஏமாற்றமே

உள்ளத்தில் உறையும்
உண்மைப் பொருளாம்
இறைவனை என்றும்
உணர இயலாது
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினால்

தத்துவங்கள் பல பேசினாலும்
தவறை மறைக்க
தானங்கள் பல செய்தாலும்
உண்மை நெறி வழி நில்லாதார்
உலகில் என்றும் பொல்லாதவரே


1 கருத்து: