வெள்ளி, 5 ஜூன், 2015

இன்பம் எங்கே இருக்கிறது ?

இன்பம் எங்கே இருக்கிறது ?

இன்பம் எங்கே இருக்கிறது?

இன்பம் எங்கே இருக்கிறது ?

ஒவ்வொருவரும்  அவரவர் அனுபவங்களுக்கு
ஏற்ப இன்பம் எதில் உள்ளது என்பதை கூறுவார்கள்.

ஒருவருக்கு இன்பமாக இருப்பது
மற்றவர்க்கு துன்பமாக தெரியும்.

ஒரு கால கட்டத்தில் அதே மனிதருக்கு
இன்பத்தை தரும் ஒரு பொருளோ
அல்லது அனுபவமோ ஏற்கெனவே
அனுபவித்த இன்பத்தை
தரும் என்று கூற இயலாது

இன்பம் எங்கே இருக்கிறது?

இன்பம் துன்பத்தின் பின்னால் 
ஒளிந்துகொண்டிருக்கிறது. 

வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி
வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
ஆற்றினிலே நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்
தண்ணீர் போல

எனவே அது நிலையில்லாது என்கிறார்கள்
ஞானிகள்.

நாம் ஆற்றில் நீரை ஓட விடாமல் அங்கங்கே பள்ளங்கள் தோண்டி
தேக்கி  ஆற்று நீரை கடலில் கலக்காமல் தடுத்துவிடுகிறோம்.

தேங்கிய நீரில் புழுக்களும் பூச்சிகளும்
பெருகி நாற்றமடிக்கின்றன. நம் மனமும் அப்படியே!

எந்த அனுபவம் ஏற்ப்பட்டாலும் அதிலேயே நம்மை
மூழ்கடித்துக் கொள்ளாமல் அதை விட்டு அடுத்த
அனுபவத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

இன்பத்தை வேண்டி பெறுவதுபோல்
அனைத்து  மனிதர்களும் துன்பத்தையும்
இன்பமாக அனுபவிக்கிறார்கள் என்பதை
நாம் அனுதினம் நம் வாழ்வில் பார்க்கின்றோம்.

பத்து  மாதம் தன் வயிற்றில் சுமந்த தன் குழந்தையை
கண்டு கொஞ்சி  மகிழ பிரசவ வலியைசகித்துக்கொள் கிறாள்.

வாழ்வில் முன்னேற நினைப்பவர்கள் அனைவரும்
பலவிதமான, இழப்புகளையும், அசௌகர்யங்களையும்
அவமானங்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர்.

துன்பப்படாமல் இன்பம் இல்லை.
இன்பம் வேண்டுமென்றால் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிறு தீக் காயத்தை தாங்க முடியாத மனிதர்கள்
பக்தியின் காரணமாக தீ மூட்டி தணலின் மேல்
நடக்கின்றனர்.

இன்பமும் துன்பமும் எல்லாம் மனதில்தான் உள்ளது.
எதற்கெடுத்தாலும் மனதில் உள்ள உருப்பெருக்கியை
ஒவ்வொரு செயலுக்கும் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்.

இன்பமும் துன்பமும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல்
வாழ்வில் வெற்றி நடை போடலாம். 

2 கருத்துகள்: