திங்கள், 4 பிப்ரவரி, 2013
பயம் எதனால் ஏற்படுகிறது?
பயம் எதனால் ஏற்படுகிறது?
இந்த உலகத்தில் பயம் என்ற உணர்ச்சிக்கு
ஆட்படாதவர்கள் யாருமில்லை
ஏன் தேவர்கள் கூட அசுரர்களை
கண்டு பயப்படுகிறார்கள்.
ஏன் தெய்வங்கள் கூட அவர்களை விட
அதிக சக்தியுள்ள தெய்வங்களை கண்டு பயப்படுகின்றன
சிலர் மற்றவர்கள் முன்னாள் பயமில்லாமல்
இருப்பதுபோல் நடிப்பார்கள்
ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதாவது
ஒரு பயம் ஒளிந்துகொண்டிருக்கும்.
பயத்திற்கு முக்கியமான
காரணம் பற்றுதான்
ஒரு பற்று இருந்தாலே பயம்
மனிதர்களை போல் கணக்கற்ற பற்றுக்களை
வைத்திருப்பவன் பயந்துதான் ஆகவேண்டும்.
பற்றுகள் அதுவாக வருவதில்லை
நாம்தான் அவைகளை பற்றிகொள்ளுகிறோம்
நம் உடல் பற்றி எரியும் வரை
அவைகளை நாம் விடுவது கிடையாது.
ஆனால் நாமெல்லாம் சொல்லிகொள்வது
பற்றுக்கள் நம்மை பற்றிக்கொண்டிருக்கின்றன என்று.
பற்றுக்கு முக்கிய காரணம் நான் என்ற எண்ணமும்
எனது என்ற எண்ணமும்தாம் அடிப்படை காரணங்கள்
அதிலிருந்துதான் புற்றுநோய் போல் கணக்கிலடகா
பற்றுகள் நம்மை பற்றிக்கொண்டு நம்மை வாட்டி வதைக்கின்றன.
பற்றுக்கள் நம்மை ஒருமுறை பற்றிக்கொண்டால்
அதிலிருந்து விடுபடுவது அரிது
பற்றுகளினால் நாம் சில இன்பங்களையும்
எண்ணற்ற துன்பங்களையும் அனுபவிக்கின்றோம்.
இந்த இன்பங்கள் எல்லாம் நிலைத்து நிற்பவையும் அல்ல
நீடித்து இன்பம் தருபவையும் அல்ல
இப்படி பலமுறை துன்பப்படும் நாம் எந்த பொருளின்மீதும் பற்றுகளை விடுவதில்லை.
இவைகளுக்கெல்லாம் ஊற்றுகண்ணான மனமும்
உடலும்தான் காரணம் என்பதை யாரும் அறிவதில்லை.
பயம் ஏற்படுவதர்க்கு அடிப்படைக்காரணம்
இந்த மனம் மற்றும் உடல் மூலம் அனுபவித்து வரும்
இந்த நிலையற்ற இன்பங்களை மரணத்தின்
மூலம் நாம் இழந்துவிடுவோம் அல்லது
பிறரால் அபகரிக்க
ப்பட்டுவிடும் என்ற பயம்தான் காரணம்.
இதற்க்கான காரணத்தை கண்ட புத்தன்
ஆசைகள்தான் துன்பத்திற்கு காரணம் என்றான்
ஒரு சித்தர் ஒருநாள் அழியபோகும்
இந்த உடலை நான் என்று எண்ணும் வரையிலும்,
அதேபோன்று அழியக்கூடியவையும்,
பிறரால் களவாடபடக்கூடிய
பொருட்கள்மீதும் ஆசை வைக்கும்வரை
பயம் நீங்காது என்றார்.
ஆனால் இந்த அறிவுரைகளை
யார் கேட்கின்றார்கள்?
நாங்கள் இப்படியே பிறந்ததுமுதல்
இறக்கும்வரை பயந்துகொண்டேஎங்கள்
வாழ்க்கையை தொலைப்போம் என்று
கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார்கள்
பின்னர் எப்படி பயம் போகும்?
(இன்னும் வரும்)
.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மனதை அழிக்கும் ஆயுதங்களில் ஒன்று...
பதிலளிநீக்குமனிதனை தவறு செய்வதிலிருந்து காப்பாற்றுவதும் அந்த பயம்தான்
நீக்குசட்டத்தினை மீறினால் தண்டனை என்ற பயம் சிலரை தவறு செய்யாமல் காப்பாற்றுகிறது.
சாலை விதிகளை மீறினால் மரணம் தான் என்ற பயம் சிலரின் உயிரை காப்பாற்றுகிறது.
மீறுபவர்கள்தண்டிக்கப்படுகிறார்கள்.
எதற்கு பயப்படவேண்டும்,எந்த விஷயத்தை பயமில்லாமல் அணுகவேண்டும் என்பதுதான் கேள்வி
காரணமின்றி எல்லாவற்றிற்கும் பயந்து நடுங்கும் மனிதர்களின் வாழ்வை சோகம் கவ்வி அவர்களை உயிரோடு கொன்றுவிடும்