வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சீரழிக்கும் சினிமாவும் சீர்கெட்ட அரசியலும்


சீரழிக்கும் சினிமாவும் 
சீர்கெட்ட அரசியலும்



இந்த பூமியில் இயக்குனர்களும்,
பாடலாசிரியர்களும், நடிகர்களும்,
நடிகைகளும். மக்களை 
மிருகங்களாக்கி
கொண்டிருக்கிறார்கள்.


திரைப்படங்களில் 
வன்முறைதீயை மூட்டி 
அதில் காம ரசத்தை காய்ச்சி 
மக்களுக்கு கொடுத்து 
காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் அதை போதை 
தரும் மதுவோடு சேர்த்து அளித்து 
பாமர மக்களை மயக்கி 
நாட்டை கொள்ளை 
அடித்து கொண்டிருக்கிறார்கள். 

உடகங்கள் ஊழலை 
வெளிச்சம் போட்டு காட்டுகின்றன 
நாள்தோறும் தவறாது.
தங்கள் பைகளை நிரப்பிக்கொள்ள

சராசரி மனிதன் வானை முட்டி 
அதை தாண்டி அண்ட வெளிக்கு 
வெளியில் சென்றுவிட்ட 
விலைவாசியை நினைத்து வாழ 
வழிதெரியாதுபட்டினியை மறக்க 
பாட்டிலை நாடுகின்றான். 

என்ன செய்ய? 

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முதலில் நாட்டில் உள்ள
      மக்கள் உருப்படவேண்டும்

      அப்போது நாடு உருப்படும்.
      ஆனால் அது நடக்காது

      அதை உருப்பட விடக்கூடாது என்று
      கங்கணம் கட்டிகொண்டவ்ர்கள் மிக அதிகம்

      உருப்படவேண்டும்
      என்று நினைப்பவர்களை
      விரல் விட்டு எண்ணி விடலாம்.

      சுனாமியும் பூகம்பங்களும்
      வெள்ளமும் புயலும்
      நோய்களும் இழப்புகளும்தான்
      இறைவன்
      இது போன்ற நீசர்களுக்கு
      தரும் அதிர்ச்சி வைத்தியம்

      அவன் பகதர்கள்
      இறைவனை மட்டும் பார்க்கிறார்கள்
      அதனால் அவர்கள் உலகம்
      இனிமையாக் இருக்கிறது

      மற்றவர்கள்
      தீயவைகளையே காண்கிறார்கள்
      துர்யோதனன் போல
      எல்லாம் அவர்களுக்கு
      தீமையாக தெரிகிறது
      அவ்வளவுதான்

      திருந்த நினைப்பவர்கள்
      தர்மராக மாறட்டும்
      (சூதாடி மனைவியையே
      அடகு வைத்த பிற்கால
      தருமராக அல்ல)

      எல்லாம்அப்போது
      அனைத்தும்
      நல்லதாக தெரியும்.

      நீக்கு