செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தமிழ்தாத்தா உவே சாமிநாத ஐயரை பற்றி எந்த தமிழனுக்கு தெரியும்


U.Ve. Swaminatha Iyer

தமிழ்தாத்தா உ வே சாமிநாத ஐயரை பற்றி
எந்த தமிழனுக்கு தெரியும்?

அரசு பராமரிக்கும் தமிழ்த்தாத்தாவின் வீடு பூட்டி கிடக்கிறது -
அதை மீண்டும் திறப்பார் இல்லையா என்று
சில உள்ளங்கள் புலம்புகின்றன-
செய்திகள் வந்தன நாளேடுகளில் -
அரசுக்கு கோரிக்கை


இன்றைய தமிழனுக்கு
தமிழை பற்றி என்ன தெரியும்?

தகுதியில்லாதவர்களை
தலைமேல் தூக்கி
வைத்துக்கொண்டு ஆடுவான்

டாஸ்மாக் கடையில்
20000 கோடி ரூபாய் அளவிற்கு
குடித்து தமிழ்நாடு அரசுக்கு
வருவாய் சேர்ப்பான்

நடிகர்களுக்கு கோயில்  கட்ட
அவர்களின் படங்களை பார்க்க,
கட்டவுட்டுகளுக்கு
பாலபிஷேகம் செய்ய
காசு கேளுங்கள்
பல லட்சங்கள்
ஒரே நாளில் சேர்ந்துவிடும்

கட்சி துவங்கி
காசு கேளுங்கள்
கல்லா நிறையும்

தமிழை பற்றி தமிழனே
கவலைப்பட்டதில்லை.

தமிழை வைத்து பிழைப்பு நடத்தி
லட்சக்கணக்கில் சம்பாதித்தும்
கவிஞர்களும் புலவர் பட்டம்
பெற்றவர்களும், எழுத்தாளர்களும்
தமிழ் தாயில் மடியில்
காலசுவட்டில் சுவடுகள் தெரியாமல்
மறைந்து போன சுவடிகளை
தேடி பிடித்துஅச்சில்
ஏற்றி அனைவரும் பயனுற உய்ய வகை
செய்த தமிழ் தாத்தா ஊ வே சாமிநாத ஐயரை பற்றி
 பற்றி கவலைப்பட அவர்களுக்கு எது நேரம்?

அவரை பற்றியே அறியாத தமிழ் இனம்
அவர் வாழ்ந்த வீட்டை பற்றியா
கவலைப்படப்போகிறது?

நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த
காந்தி தாத்தாவையே இந்தசமூகம் மறந்துவிட்டது.

தினம் தினம் அவர் முகத்தை
மக்களுக்கு கரன்சி நோட்டில் காட்டியும்
அவரை நோக்குவார் இல்லை.
அந்த நோட்டு என்ன நோட்டு
என்றுதான் பார்க்கின்றார்.
அதன் மதிப்பை மட்டும் பார்க்கின்றார்
மதித்து போற்றவேண்டிய காந்தி மகானின்
கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு.

வங்கியில் பணி செய்வோர் அது நல்லநோட்டா
அல்லது கள்ள நோட்டா என்று மட்டும்தான் பார்க்கின்றார்

ஒரு அரசு ஒரு நினைவாலயம் ஏற்படுத்தினால்
அடுத்து வரும் அரசு அதை கவனிக்காமல் விடுகிறது
அனேக காரணங்களினால்

தமிழன் என்றும் தமிழால் ஒன்று பட்டதில்லை
மற்ற மொழி பேசுபவர்கள் போல்.

எதிர்காலத்திலும் ஒன்றுபடப்போவதில்லை

அவன்தான் மொழி,ஜாதி, இனம், மதம்,ஏழை,பணக்காரன்,அரசியல் என்று சுக்குநூறாக உடைந்து கிடக்கிறான். உடைந்து போன கண்ணாடி துண்டுகள்போல்

ஒரு அரசு நிறுவனமே செயல்படாமல் உள்ளது
 என்றால் யாரை குறை சொல்வது?

அதை பராமரிக்கும் அரசு துறையில் உள்ள அதிகாரிகளின்
மெத்தன போக்கா அல்லது தமிழார்வமே இல்லாத
அதன் துறை தலைவரா?

தமிழ் தாய் அவ்வப்போது தன் புதல்வர்களை
இவ்வுலகிற்கு அனுப்பி தன்னை பாதுகாத்து கொள்வாள்

பாரதி வந்தான் சென்ற நூற்றாண்டில்
ஒரு புயலை கிளப்பிவிட்டுப்போனான்.

அவன் அடிசுவட்டை பின்பற்றி
ஒரு பெரும்படையே வந்தது தமிழைக்காக்க
.
யாரிடமும் தமிழை காக்க  கையேந்தாதீர்.

முருகபெருமான் அளித்த தமிழ் அகத்தியன்,தொல்காப்பியன், சேக்கிழார்,திருமூலர், அருணகிரிநாதர்திருவள்ளுவர்,ஆழ்வார்கள்
,நாயன்மார்கள்,கம்பர் என எண்ணற்ற .தெய்வீக புலவர்களால் வளந்த தமிழ்

என்றும் இளமை குன்றாது,வளமை குன்றாது வாழும்
பெருமைஉடைத்தது

கவலை வேண்டாம்.

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்களை
   பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி

   நீக்கு
 2. அருமையான பதிவு அய்யா. கால் தேய, நடந்து நடந்து, ஓலைச் சுவடிகளைத் தேடித் தேடி, கண்டு பிடித்து, நூல் வடிவில் அச்சாக்கி வழங்காமல்,தமிழ்த் தாத்தா இருந்திருப்பாரேயானால், தமிழின் பெருமையும், தமிழரின் நாகரீகமும், கரையானுக்கல்லவா இரையாகிப் போயிருக்கும். உ,வே.சா அவர்களின் 159 ஆம் ஆண்டு பிறந்த நன்நாளில் , அவரைப் போற்றிடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்களை
   பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி

   நீக்கு
 3. தாத்தாவுக்கு அஞ்சலிகள். நானும் இயன்றவரை தாத்தாவின் நினைவு மஞ்சரியைத் தட்டச்சி மரபு விக்கியில் சேர்த்து வருகிறேன். அஞ்சலி செலுத்தவானும் மறப்பதில்லை. :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது செய்தவர்களை
   நன்றியுடன்
   நினைவு கூறுவது
   நற்பண்புகளில்
   ஒன்றாகும்.

   வருகைக்கும்
   கருத்துக்களை
   பகிர்ந்துகொண்டமைக்கும்
   நன்றி

   நீக்கு