சனி, 1 டிசம்பர், 2012

சீன மண்ணில் தமிழ் (இறுதிபகுதி )சீன மண்ணில் தமிழ் (இறுதிபகுதி )

ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
சீனாவில் தமிழ் பரவிஇருந்தது 
இந்த செய்தி ஒரு கல்வெட்டு 
மூலம் தெரிய வருகிறது 


அவனுடைய படைகள்
இரண்டு முறைதான் தோல்வியை தழுவின

ஒன்று ஜாவா மீது கடல் வழி தாக்குததல் நடத்திய போது .
ஆனால் அந்த போர் நடைபெறவில்லை

மற்றொன்று ஜப்பான் மீது கடல் வழி மூலம் தாக்கி
போரை துவங்கிய போது .
அப்போது பயங்கரமான Kami Kaze என்னும் புயல் வீசி
அவனுடைய அனைத்து கப்பல்களையும் அழித்துவிட்டது
அந்த புயலிலிருந்து தப்பிய அவன் வீரர்கள்
அனைவரும் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டுவிட்டனர்.
              
குப்ளாய்கான் மங்கோலிய இனத்தவனாக
இருந்த போதும் சீன மக்களை மாற்றவில்லை
அவர்களை அனுசரித்து திறமையாக ஆட்சி செய்தான்.

அவனுடைய நிர்வாக திறமை
அதிசயிக்கும்படியாக இருந்தது
அவன் அஞ்சல்துறை, மற்றும் செய்தி
துறையை மேம்படுதினான்
அவனுடைய ஒற்றர் படை சிறப்பாக செயல்பட்டது
              
இவ்வளவு இருந்தும் அவன் சீன மொழியை கற்கவில்லை

அவன் யவான் வம்சத்தை உருவாக்கினான்
அவன் காலத்தில்தான் பாண்டிய மன்னர்கள்
 தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஆண்டு வந்தனர்.
 பாண்டிய மன்னார்கள் குப்லைகானுடன்
 நட்பு முறையிலானா தொடர்பு வைத்திருந்தார்கள்
 
சீனாவில் தமிழ் கல்வெட்டு அமைத்த போது
குப்ளாய்கான் நோய்வாய்பட்டிருந்தான்

வெனிஸ் நாட்டை சேர்ந்த யாத்ரிகர்
மார்கோ போலோ குப்லாயகானின்
அரசவையில் பதினேழு ஆண்டுகள் இருந்துள்ளார்.

அவன் நோய்வாய் பட்டதும் அவர் சீனாவை
விட்டு வெளியேற அரசனிடம்
அனுமதி பெற்று வெளியேறினார்.

 சீனாவில் கட்டப்பட்ட இந்து கோயில்
அரசனின் பிரத்தியேக அனுமதி பெற்று
கட்டப்பட்டுள்ளதாக அந்த கல்வெட்டில்
 குறிப்பிடப்பட்டுள்ளது

 மங்கோலியர்கள் நாடுகளை கைப்பற்றும்போது
அந்த பகுதிகளின் வார்த்தைகளையும், காலாசாரத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த கல்வெட்டில் கடைசி வரிகள்
மட்டும் சீன மொழியில் உள்ளதை படத்தில் காணலாம்
சோழர் கால சிலைகளும் கோயிலில் காணலாம்
              
 தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள
அபூர்வமான தமிழ் கல்வெட்டு இதுவாகும்.


நன்றி: VIDYALANKARA 
DR.S.JAYABARATHI

JayBeeமூல பதிவு


2 கருத்துகள்: