ஞாயிறு, 2 டிசம்பர், 2012

விலங்குகளும் மனிதர்களும்(பகுதி -3)

விலங்குகளும் மனிதர்களும்(பகுதி -3)




















விலங்குகள் தினமும்
உறங்குகின்றன
விழிக்கின்றன,விழித்தவுடன்
இரை தேடுகின்றன



விலங்குகள் உறங்கி விழிக்கின்றன .
இரை தேடுகின்றன. 
.இறைவன் ஒவ்வொரு விலங்கிற்கும் என 
தகுந்த உணவை பிரித்து இந்த உலகை படைத்துள்ளான். 
அவைகளை அவைகளுக்குரிய உணவை 
மட்டும் தேவைக்கு ஏற்ப மட்டும் 
அவைகள் தேடி கொள்கின்றன. 

சில பிற உயிர்களை கொன்று தின்கின்றன. 
மற்ற உயிர்களுக்கு அவைகள் 
எந்த துன்பமும் விளைவிப்பதில்லை.
மற்றவர்களின் வாழ்வில் தலையிடுவதில்லை. 
மற்றவர்களுக்கு எந்தவிதமான துன்பமும் தருவதில்லை.
தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட உணவைத்தவிர 
மற்றவர்களின் உணவை பறித்து தின்பதில்லை. 
குரங்கு,புலிகள் போன்ற.  சில குறிப்பிட்ட விலங்குகளை தவிர. 

ஆனால் மனிதன் உறக்கத்தில் இருக்கும்போதுதான் மற்றவர்களுக்கும்,விலங்குகளுக்கும் நல்லவன். 

அவன் உறக்கத்திலிருந்து. விழித்தவுடன் 
என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. 

அவனுக்கு தேவை சில கவலங்களே உணவு. 
ஆனால் அவன் உண்பதோ பல பேரை
 பட்டினி போட்டுவிட்டு
 அவன் ஒருவனே உண்டு தீர்க்கிறான். 

மேலும் தனக்கு தேவை போக மற்ற உயிர்களுக்கு 
உணவை அளிக்காமல் விருந்து, கேளிக்கைகள் 
என உணவை வீணாக்குகிறான். 

தேவைக்குமேல் உணவுபொருட்களை வாங்கி 
பதுக்கி பல ஆயிரம் உயிர்களை பட்டினி போடுகிறான். 

அது போதாதென்று அவன் மற்ற 
உயிர்களுக்கு அவன் செய்யும் கேடுகள் எண்ணிலடங்கா.

உணவுக்குதான் உயிர்களை கொல்லும்  விலங்குகளை விட 
கேடு கேட்டது இந்த மனித இனம். 
தன்னுடைய சக உயிர்களை காரணமின்றியும்,மதம்
இனம்,ஜாதி,நிறம்,என்னும் பல காரணங்களை காட்டி
சகட்டு மேனிக்கு கொன்று இன்புறும் 
அரக்க குணம் படைத்த மனிதர்களால் 
இந்த உலகம் நிறைந்துள்ளது 

தினமும் அப்பாவி மனிதர்கள், பெண்கள், 
குழந்தைகள் என பல ஆயிரம் பேர் அநியாயமாக 
இவர்கள் கையில் சிக்கி மடிந்து கொண்டிருக்கின்றனர்.

இதைதவிர சொல்லாலும், பார்வையாலும்,
 நடத்தையாலும் அவன் தன சக உயிர்களுக்கு 
விளைவிக்கும் தீங்குகளும், கொடுமைகளும் ஏட்டிலடங்காது  

மேலும் அப்பாவி விலங்குகளையும் 
தரை,வான்,கடல் உயிர்களையும் வேட்டையாடி 
கொன்று தின்பதுடன் அந்த இனங்கள் 
அழியும் வரை ஓய்வது கிடையாது. 

மேலும் விலங்குகள் வாழும் காடுகளையும் 
வாழ்விடங்களையும்  இந்த மனிதர்கள் 
ஆக்கிரமித்து கொண்டதுமட்டுமல்லாமல் 
எஞ்சி இருக்கும் அவைகளை ஒழிக்க 
தினம் தினம் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் 

இவர்களா பகுத்தறிவு பெற்ற இனம்?

விலங்குகளை வீட கீழான இனம் என்று 
சொல்வதில் எந்த தவறும் கிடையாது. 

என்றுதான் இந்த இனம் திருந்தப்போகிறதோ?.

1 கருத்து: