செவ்வாய், 25 டிசம்பர், 2012

இந்த உடல் எதற்கு?


இந்த உடல் எதற்கு? 

பரோபகாரம் இதம் சரீரம்
என்று வடமொழியில் ஒரு வாக்கியம் உண்டு.

பிறருக்கு உதவி செய்வதற்காகவே இந்த சரீரம்
படைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

பொதுவாக அனைவரும் உதவி செய்வது என்றால் வீட்டிற்கு வெளியே பிறருக்கு உதவி செய்வதுதான் உதவி என்று நினைக்கிறார்கள்.

அதற்காக தொண்டு நிறுவனங்களிடமோ அல்லது தொண்டு செய்யும் பிறருடனோ இணைந்து தொண்டு செய்ய எத்தனிக்கிறார்கள்.

உதவிகள் செய்வதில் பல வகைகள் உண்டு

சிலர் யார் உதவிகள் கேட்டாலும்
அதை ஆராயாது உதவி செய்பவர்கள் சிலர்.

சிலர் உதவி கேட்பவர்களுக்கு உண்மையாக உதவி தேவைப்படுகிறதா என்பதை தீர விசாரித்து அதன் பிறகே உதவி செய்பவர்களும் உண்டு.

சிலர் பிறர் அவர்களை உதவி கேட்காமல் இருக்கும்போதே வலிய  சென்று உதவுவதும் உண்டு

பலர் உதவி செய்யபோய் உபத்திரவத்தில் மாட்டிகொண்டு தீர்க்க முடியாத பிரச்சினையில் சிக்கிக்கொண்டு அல்லல் படுவதும் உண்டு.

இது பிரச்சினைகளெல்லாம் நமக்கு வேண்டாம் என்று உதவி செய்யாமல் ஒதுங்கி விடுவதும் உண்டு.

சிலர் தமக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் தன்னிடமுள்ள அனைத்தையும் பிறருக்கு வழங்கி விடுவதும் உண்டு.

தொண்டு செய்வதாக கூறிக்கொண்டு சிலர் பணம் பறிக்க வேண்டுமென்று கவர்ச்சிகரமாக விளம்பரங்களை வெளியிட்டு மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டத்தினருக்கு தாரளமாக தொகை வழங்கும் கூட்டமும் உண்டு.

அவர்கள் அந்த தொகை முறையாக உதவி தேவைப்படும் மக்களுக்கு போய் சேருகிறதா அல்லது அதை நிர்வகிக்கும் தலைவரால் சுரண்டப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

ஏதோ தொகையை தர்மத்திற்கு கொடுத்துவிட்டு புண்ணியம் தேடிவிட்டதாக மனதில் நினைத்துக்கொள்ளுவார்கள்.

சிலர் நேரே அந்த நிறுவனத்திற்கு சென்று நேரில் பார்த்து நிலைமையை அறிந்தபின் உதவிகள் செய்வார்கள்.
அங்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்சிகளிலும் கலந்துகொள்வார்கள்.

சிலர் வெளி உலகத்தில் தர்மவான்கள் போல் நடித்துக்கொண்டு,வீட்டில் அதற்க்கு எதிர்மாறாக நடந்துகொள்வார்கள்.

வீட்டில் வயதான தாய் தந்தையர்களை புறக்கணித்து விட்டு அவர்களை கொடுமைப்படுத்துவதுடன் அவர்களை கடும் சொற்களால் மனதை காயபடுத்துபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

சிலர் வீட்டில் ஒருவரே எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த விதத்திலும் அவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்.

இப்படிதான் பலர் இந்த உலகில் இருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் பிறருக்கு உதவுவது 
என்ற பண்பு சிறு வயதிலிருந்தே, வீட்டில்தான் தொடங்க வேண்டும்.
வீட்டில் ஒருவொருக்கொருவர் அகந்தை பார்க்காமல் உதவும் பழக்கம் வரவேண்டும். 

சொல்லித்தான், அல்லது கேட்டுதான் உதவுவது என்ற மனோபாவம் நீங்கவேண்டும்.

அப்படி எல்லோரும் நடந்து கொண்டால் வீட்டில் அன்பு கோலோச்சும். 
வெறுப்பும் வேதனைகளும் தலை காட்டாது.


இன்று பலர் letterpads,receipt books,மற்றும் சில பிரபலங்களின் படங்களையும் வைத்துக்கொண்டு சிறு குழுக்களாக சென்று வீடு வீடாக சென்று பணம் பறிக்கும் கும்பல்கள் இன்று பெருகிவிட்டன.

மக்களின் மனதில் உள்ள இரக்க உணர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு இந்த கூட்டம் பணத்தை வசூலித்து தங்கள் வயிற்றை நிரப்பிகொண்டிருக்கின்றன என்பது வேதைனையான விஷயம் 

பொதுமக்கள் இதுபோன்று கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஏனென்றால் இவர்களுக்கு அளிக்கபடும் உதவிகளால் எந்த புண்ணியமும் இல்லை.

மக்கள் தங்களால் நேரிடையாகவே பிறருக்கு உதவி புரிய ஏராளமான வாய்ப்புக்கள் அவர்கள் அருகிலேயே இருப்பதால் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் புண்ணியமும் மன திருப்தியும் கிடைக்கும்.


2 கருத்துகள்:

  1. பிறருக்கு உதவுவது
    என்ற பண்பு சிறு வயதிலிருந்தே, வீட்டில்தான் தொடங்க வேண்டும்.
    வீட்டில் ஒருவொருக்கொருவர் அகந்தை பார்க்காமல் உதவும் பழக்கம் வரவேண்டும்.

    அடிப்படை கருத்து அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு வீட்டிலும் யாராவது
      ஒருவர் மட்டும் தான் காலை முதல்
      இரவு வரை வேலை செய்து கொண்டு இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் அவரை மிரட்டிகொண்டும், குறை சொல்லிக்கொண்டும், சில நேரங்களில் அவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள்போல் நடித்துக்கொண்டும்
      வெறும் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருக்கும், கூட்டம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் உண்டு.

      அவர்களில் ஒருவராவது உழைக்கும் நபருக்கு ஏதாவது ஒரு ஒரு வகையில் உதவுவது கிடையாது.

      அப்படி செய்தால் வேலைகளும் சீக்கிரம் முடிவடையவும் உழைக்கும் நபரும் சிறிது ஒய்வு எடுத்து கொள்ளவும் இன்னும் மகிழ்ச்சியாக உழைக்கவும் செய்வார்கள்.

      ஆனால் அது எந்த வீட்டிலும் நடப்பதில்லை இதுதான் யதார்த்தம்.

      நீக்கு