புதன், 12 டிசம்பர், 2012

பரலோகத்திற்கு வழி வகுக்கும் படிக்கட்டு பயணம்


பரலோகத்திற்கு வழி வகுக்கும் 
படிக்கட்டு பயணம் 


யாராவது செத்தால்தான் 
அரசு எந்த பிரச்சினையையும் 
கண்டு கொள்கிறது

அல்லது நீதிமன்றங்களே பிரச்சினையை 
கையில் எடுத்தால்தான் அரசும்,ஊடகங்களும் 
அதை கவனிக்கின்றன

ஆனால் தீர்வு என்பது அறிவிப்புகளோடு 
நின்று விடுவதுதான் இன்றைய யதார்த்த நிலை. 

பொதுவாக மக்களோ,பள்ளி செல்லும் குழந்தைகளோ 
பேருந்துகளிலோ,ரயில் வண்டிகளிலோ 
ஏன் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு 
பயணம் செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

பெருகி வரும் மக்கள் கூட்டம். 
இன்று எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே 
கணினி மூலமும், வலைத்தளங்கள் மூலமும் 
அனைத்தையும் கற்கலாம் 
ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை.

எதற்கெடுத்தாலும் மக்கள் வீட்டை விட்டு 
வெளியில் சென்றுதான் ஆகவேண்டிய நிலைக்கு 
தள்ளப்பட்ட மக்கள் கூட்டம் 
பயணம் மேற்க்கொள்ளப் பட வேண்டிய 
கட்டாயத்திற்கு ஆளாக்கபட்டுவிட்டனர். 

ஆனால் மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப
 வாகன வசதிகளோ, போக்குவரத்து
 வசதிகளோ இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. 

எங்கு சென்றாலும்,எந்த நேரத்தில் சென்றாலும் 
கூட்ட நெரிசல் .
அவரவர் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளியில்
அல்லது பணியிலோ இருக்கவேண்டிய நிர்பந்தம் 

அதனால்தான் மக்கள் வருகின்ற வண்டிகளில்
 எப்படியாவது தங்களை அடைத்துக்கொண்டு 
எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டு 
வேறு வழியில்லாமல் பயணம் 
மேற்கொள்ள வேண்டிய 
 நிலை ஏற்பட்டுவிட்டது.

பேருந்தில் இடமில்லாத நிலையில் பலர்
படிக்கட்டில் தொற்றிக்கொண்டு செல்வது 
தவிர்க்கமுடியாததாகிவிட்டது. .

வண்டியின் உள்ளே இடம் இருந்தும் 
படிக்கட்டில் பயணம் செய்யும் 
சில ஜன்மங்கள் இருக்கத்தான் செய்யும். 
அவர்களை விட்டுவிடுவோம் 
அவர்களை லாரியில் அல்லது ரயில் கம்பங்களில்
அடிபட்டு சாவதை யாரும் தடுக்க முடியாது

இந்த நிலை தடுக்க சில கருத்துக்களை 
முன் வைக்கிறேன்.

1அனைத்து வண்டிகளுக்கும் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்படவேண்டும்.கதவு அடைக்கப்பட்ட
பின் தான் ஓட்டுனர்களும் 
நடத்துனர்களும் வண்டியை எடுக்கவேண்டும்

2.எங்கெல்லாம் கூட்ட நெரிசல்கள் இருக்கிறதோ 
அங்கு உடனே மினி பேருந்துகளை இயக்க 
போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். 

3.அதை விடுத்தது மாணவர்களை
 பள்ளியிலிருந்து நீக்குதல் சரியான 
அணுகுமுறை ஆகாது. 
அவ்வாறு நீக்கினால் ஏற்கெனவே 
ஒழுங்கீனமானவனாக 
இருக்கும் அவன்பொறுக்கியாகவோ 
குற்றவாளியாகவோ ஆகி சமூகத்திற்கு 
துன்பம்தான் தருவான்.

ஏற்கெனவே இளம் குற்றவாளிகள் 
ஏராளமாக பெருகிவிட்ட நிலையில் மேலும் 
அவர்களின் ஜனத்தொகை கூட அனுமதிக்க கூடாது.

4.பெற்றோர்களிடமோஅல்லது 
பள்ளி முதல்வர்களிடமோ புகார்செய்வதால் 
எந்த பயனும் இல்லை
ஏனென்றால் அவர்களால் 
எதுவும் செய்ய முடியாது. 

5.கூடுதலாக போக்குவரத்து வசதிகளை 
ஏற்படுத்துவதும், கூடுதலாக பேருந்துகளை விட்டு 
கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதும்தான் 
பிரச்சினையை தீர்க்க உதவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக