நான் யார்?
நான் யார்?
ரமண பகவானே
உன் உள்ளே இருக்கும்
பொருளை நீ உணர்ந்தபடி
உலகுக்கு அறிவித்ததை.
இன்னும் உணர்ந்துகொள்ளாமல்
இவ்வுலகில் இன்னல் பட்டுக் கொண்டு
காலத்தை கழிக்கின்றோம்.
உள்ளிருந்து வெளியே வந்துவிட்டோம்.
தவறு தவறு.
உறக்கத்திலும், மயக்கத்திலும்
உள்ளே தினமும் தன்னை அறியாமல்
பல நேரம் சென்று வந்து கொண்டுதான் இருக்கிறோம்.
உள்ளே செல்லும் போது
அதை கவனிக்க எத்தனை முறை
முயற்சித்தாலும் தோல்விதான் .
அதேபோல் உள்ளிருந்து வெளியே வருவதும்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடுகிறது.
உள்ளே இருக்கும்போது ஒன்றும் தெரிவதில்லை
உடல் பற்றிய சிந்தனை இல்லை.
மனம் இல்லை.
காணும் இந்த உலகம் இல்லை.
நம்மை ஆட்டிப் படைக்கும் மனம் இல்லை.
ஆஹா. என்ன அமைதி. !
ஆனால் அந்த அமைதியை அனுபவிக்கும்போது
அதை உணர முடியவில்லை.
அந்த நிலையை விட்டு வெளியில்
வந்தவுடன்தான் அதன் மகிமை
தெரிகிறது.
அதை விழிப்பு நிலையிலும் உணர
தலைப்பட்டால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.
ஆனால் அவ்வாறு செய்ய விடாமல் தடுப்பது எது?
அதுதான் "நான்" என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும்
அகந்தை கொண்ட மனம்.
ஆனால் அது மட்டும் தனக்கு வேண்டியபோது அந்த
சுகத்தை அனுபவிக்கிறது.
நாம் அதை அனுபவிக்க நினைத்தாலே போதும்
அது நம்மை ஏமாற்றி .அந்த எண்ணத்தையே நீர்க்க செய்து விடுகிறது.
பகவான் நம் உள்ளே தேட வேண்டிய பொருளை வெளியில் தேடுவது
எப்படி சரியாகும் என்று கேட்கிறார்.
ஆனால் நம் மனமோ நம்மை புறத்தே எங்கெங்கெங்கெல்லாமோ
அந்த பொருள் இருப்பதாக நம்மை நம்ப வைத்து அலைய வைத்துக்கொண்டிருக்கிறது.
எவ்வளவு காலம்தான் இப்படி போராடுவது?
அதனுடன் போராடி வெற்றி பெற என்றும் இயலாது.
ஒரே வழி. அதன் செயல்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதுதான்.
விரைவில் பலனைத் தரும்.