இசையும் நானும்(235)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்
பாடியவர்:டி .எம்.சௌந்தர்ராஜன்
.
MOUTHORGAN
கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும் (கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக சுத்த திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழி பார்த்து போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடி வந்து
சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள் (கந்தன் )
மணம் மிகுந்த சாம்பலில் மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோருக்கு மகிழ்ச்சியை பெருக்குதடா
தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா
தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காக்குமடா (கந்தன்)
காணொளியில் இடம்பெறும் முருகன் படங்களும் நீங்கள் வரைந்தவைதானே? கேட்டேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.ஆம். சில ஆண்டுகளுக்கு முன் வரைந்தவை. மவுத்தார்கன் இசையில் மூழ்கியபின் எதற்கும் நேரம் இல்லை.பாடலை தேர்ந்தெடுப்பதில் ,பயிற்சி செய்வதில், பலமுறை பதிவு செய்தல்,பிறகு காணொளி தயார் செய்தல் என காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. இரவெல்லாம் விழிக்கும்போதெல்லாம் நாம ஜபம்,பகலில் வீட்டு வேலைகள்,கொஞ்சம் தூக்கம் என வாழ்க்கை . ரமணரின் சிந்தனைகள் என்னுள் புகுந்துவிட்டதால் மனம் எங்கும் செல்வதில்லை. அமைதியாய் இருக்கிறது. செய்யும் வேலையில் மட்டும் கவனம் அவ்வளவுதான்.
நீக்கு