திங்கள், 4 செப்டம்பர், 2017

இசையும் நானும் (226) திரைப்படம் -புதிய பறவை பாடல்:சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து


இசையும் நானும் (226)  

திரைப்படம் -புதிய பறவை 

பாடல்:சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து


MOUTHORGAN


Movie: புதிய பறவை 
Year of release: 20.7.1964
Producer: சிவாஜி கணேசன்
Director: தாதா மிராசி
Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Lyrics: கண்ணதாசன்
Singer:பி.சுசீலா
Starcast: Cast: சிவாஜி கணேசன்-சரோஜாதேவி 



சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
(சிட்டுக்குருவி )
ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே

எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
(சிட்டுக்குருவி )
ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
(சிட்டுக்குருவி )



2 கருத்துகள்:

  1. கேட்டேன். ரசித்தேன். பல்லவியை விட சரணம் பெட்டர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் slow motion நில் பதிவு ஆகியுள்ளது மெதுவாக கேட்டால் பாடலின் வரிகள் புரியும்

      நீக்கு