உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்
தவழும் நிலவாம் தங்க ரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்.
எவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்? கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குபாடல் மட்டுமல்ல .படத்தில் எம் ஜி ஆர் வெளிப்படுத்தும் energy இக்கால ஹீரோக்களிடம் காண இயலுமா என்பது சந்தேகம்.
நீக்கு