வெள்ளி, 29 செப்டம்பர், 2017

இசையும் நானும் (237) திரைப்படம் -திரைப்படம் -கௌரி கல்யாணம் (1966) பாடல்:திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்

இசையும் நானும் (237)  

திரைப்படம் -திரைப்படம் -கௌரி கல்யாணம்  (1966)

பாடல்:திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் 

பாடல் வரிகள்-பூவை செங்குட்டுவன் 
இசை :MSV
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி 


திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் 
எதிர்ப்புகளை முருகா  உன் வேல் தடுக்கும் (திருப்புகழை )


நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ்  எடுத்தது -அந்த 
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது 


முருகா முருகா முருகா.

நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது 
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது  (திருப்புகழை )


சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன் 
சரவணத்தில்  உருவெடுத்ததால்  வேதமானவன் 
முருகா முருகா முருகா

கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன் 
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்  (திருப்புகழை )

திங்கள், 25 செப்டம்பர், 2017

இசையும் நானும் (236) திரைப்படம் -ராமு (1966) பாடல்:நிலவே என்னிடம் நெருங்காதே


இசையும் நானும் (236)  

திரைப்படம் -ராமு  (1966) 

பாடல்:நிலவே என்னிடம் நெருங்காதே 

பாடல் வரிகள்-கண்ணதாசன் 
இசை :MSV
பாடியவர்: PBS

நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி(2)
Male:
நிலவே என்னிடம் நெருங்காதே 
நீ நினைக்கும் இடத்தில்  நான் இல்லை.
மலரே என்னிடம் மயங்காதே 
நீ மயங்கும் வகையில் நான் இல்லை (நிலவே)
கோடையில் ஒருநாள் மழைவரலாம் 
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ 
பாலையில் ஒருநாள் கொடி  வரலாம் 
என் பாதையில் இனிமேல் சுகம் வருமோ  (நிலவே)
ஊமையின் கனவை யார் அறிவார் 
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார் 
மூடிய மேகம் கலையும்  முன்னே 
நீ பாடவந்தாயோ வெண்ணிலவே  (நிலவே)
அமைதி இல்லாத நேரத்திலே 
அந்த ஆண்டவன் என்னை ஏன் படைத்துவிட்டான் 
நிம்மதி இழந்தே நான் அலைந்தேன் 
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்  (நிலவே)









ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இசையும் நானும்(235)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்

இசையும் நானும்(235)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும் 


பாடியவர்:டி .எம்.சௌந்தர்ராஜன்

.

MOUTHORGAN


கந்தன்  திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும் 
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும் (கந்தன்)

சுந்தரவேல் அபிஷேக சுத்த திருநீறணிந்தால் 
வந்தமர்ந்த மூத்தவளும் வழி பார்த்து போய்விடுவாள் 

அந்த நேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடி வந்து 
சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள் (கந்தன் )

மணம்  மிகுந்த சாம்பலில் மகிமை இருக்குதடா 
முடன் அணிவோருக்கு மகிழ்ச்சியை பெருக்குதடா 

தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா 
தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காக்குமடா (கந்தன்)


சனி, 23 செப்டம்பர், 2017

நம்மை சுற்றிலும்?

நம்மை சுற்றிலும்?

நம்மை சுற்றிலும்?

நம்மை சுற்றிலும்  என்ன நடக்கிறது?

எங்கும் ஒரே அமைதியின்மை.

உள்ளத்தில் ஒரே புகைச்சல்?

பொறாமை வெறுப்பு போன்ற கேடு விளைவிக்கக் கூடிய
நச்சு பொருட்கள் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுப்புறத்திலோ கேட்கவேண்டாம் .

நீர், நிலா, நிலம், காற்று, ஆகாயம்,என
எல்லாவற்றையும் பிளாஸ்டிக், அணு கழிவுகள், ரசாயன கழிவுகள் என ஒரு இடம் கூட மிச்சம் இல்லாமல் நிரப்பி அசுத்தமாக்கியது மட்டுமல்லாமல். அதன் தீய விளைவுகளை ஒவ்வொரு கணமும் அனுபவித்து வருகிறோம்.

இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

ஒவ்வொரு மனிதனும் ஏதாவது காரணத்தை தன்  உள்ளத்தில் கற்பித்துக்கொண்டு கொண்டு மற்ற மனிதனோடு ஏதாவது ஒரு வகையில் விரோதம் பாராட்டிக் கொண்டு அமைதியில்லாமல் திரிவதோடு மற்றவர்களின் அமைதியையும் கெடுக்கிறான்.

எதோ ஒரு சிலர் இந்த நிலையை சரி செய்ய முயற்சிகள் எடுத்தாலும் அவைகள் ஒன்றும் எடுபடுவதில்லை

ஆனால் உலகம் இப்படித்தான் இருக்கும். நாம் என்ன செய்ய வேண்டும்.?


வனவிலங்குகளைப்  பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்துகொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும்-காஞ்சி  மஹா பெரியவா


முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும். ஏனென்றால் முயற்சிகள் என்றும் வீண் போவதில்லை. 

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

மனம் என்னும் புதிர்.

மனம் என்னும் புதிர்.

மனம் என்னும் புதிர்.

மனம் என்ற
ஒரு மாபெரும் சக்தியை
உள்ளடக்கியவன் மனிதன்.

அது அனைத்தையும்
பதிவு செய்து வைத்துக் கொள்கிறது.

நாம் விரும்பினாலும்
அல்லது விரும்பாவிட்டாலும்.

பதிவு செய்த தகவல்களை நாம் விரும்பாவிட்டாலும்
விரும்பினாலும் அது மீண்டும் ஓயாமல்
 வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

நாம் அதை கவனிக்காவிடில்
அது அடுத்த தகவலுக்கு தாவிவிடும்.

அதை நாம் ஒரு தடவை தொட்டுவிட்டால்போதும்
நாம் அத்தோடு நாம் தொலைந்தோம்.

மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் தோன்றி
நம்மை செயல்படவைத்து நம்மை
அந்த எண்ணத்திற்கு அடிமையாக்கிவிடும்.

பிறகு அதிலிருந்து விடுபட
 இயலாது போய்விடும்.

மது போன்ற போதை பழக்கத்திற்கு
மனிதர்கள் அடிமையாகிப் போவதன் காரணம்  இதுதான்.

இது போன்றுதான் ஒவ்வொரு எண்ணங்களும் .

நாம் அவைகளை தெருவில் நம் கண் முன்னே போய்க்கொண்டிருக்கும் மனிதர்களை   கண்டு கொள்ளாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால்  பிரச்சினை  ஏதும் இல்லை.

அவர்கள் பாட்டுக்கு வருவதும் போவதுமாக
 அவரவர்கள் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

நாம் அவர்களோடு வலிய  போய் தொடர்பு கொண்டாலோ
அல்லது தொடர்பு கொள்பவர்களை  நாம் அனுமதித்தாலோ பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே நாம் நம் மனதில் தோன்றும்
ஒவ்வொரு எண்ணங்களையும் ஆராய்ந்து
நமக்கு தேவையானால் மட்டுமே
அதை கவனிக்க பழக வேண்டும்.

மற்றவற்றை சும்மா விட்டுவிட்டால்
வாழ்க்கை  பயணம் நிம்மதியாக போகும்.

இசையும் நானும் (234) திரைப்படம் -கேளடி கண்மணி (1990) பாடல்:கற்பூர பொம்மை ஒன்று

இசையும் நானும் (234)  

திரைப்படம் -கேளடி கண்மணி (1990) 

பாடல்:கற்பூர பொம்மை ஒன்று 



MOUTHORGAN




  • Movie Name : கேளடி கண்மணி (1990)
  • Director(s) : இளையராஜா 
  • Singer(s) :பி.சுசீலா 
  •     Lyrics-மு. மேத்தா 

    கற்பூர பொம்மை ஒன்று 
    கை  வீசும் தென்றல் ஒன்று
    கலந்தாட கை கோர்க்கும் நேரம் 
    கண்ணோரம் ஆனந்த ஈரம் 

    முத்தே என் முத்தாரமே 
    சபை ஏறும் பாடல் 
    நீ பாடம்மா  (கற்பூர பொம்மை)
    பூந்தேரிலே நீ ஆடவே 
    உண்டான அன்பே ஒரு ராஜாங்கம
     ராஜாங்கமே ஆனந்தமே 
    நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் 
    மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே 
    என் நெஞ்சில் நின்றாடும் (முத்தே என் முத்தாரமே )
    தாயன்பிற்கே  ஈதேடம்மா 
    ஆகாயம் கூட அது போதாது 
    தாய் போல யார்வந்தாலுமே 
    உன் தாய் போல அது ஆகாது 
    என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் 
    உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் (முத்தே என் முத்தாரமே )

    (கற்பூர பொம்மை)



    சனி, 16 செப்டம்பர், 2017

    இசையும் நானும்(233)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

    இசையும் நானும்(233)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்


    பாடியவர்:டி .எம்.சௌந்தர்ராஜன்

    பாடல் வரிகள்-வாலி .

    MOUTHORGAN

    கற்பனை என்றாலும் 
    கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் -நீ-(கற்பனை)

    அற்புதமாகிய அருட்பெருஞ்சுடரே 
    அருமறை தேடிடும் கருணையங்கடலே (கற்பனை)

    நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே 
    நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே 
    கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே 
    காண்பதெல்லாம் உன் கண் விழியாலே (கற்பனை)



    வெள்ளி, 15 செப்டம்பர், 2017

    இசையும் நானும் (232) திரைப்படம் -வெண்ணிற ஆடை பாடல்:என்ன என்ன வார்த்தைகளோ

    இசையும் நானும் (232)  

    திரைப்படம் -வெண்ணிற ஆடை 

    பாடல்:என்ன என்ன வார்த்தைகளோ 

    MOUTHORGAN






  • Movie Name : Vennira Aadai(1965)
  • Director(s) : M.S. Viswanathan,Ramamurthi
  • Singer(s) : P Susheela
  •     Lyrics-kannadasan



    என்ன என்ன வார்த்தைகளோ 
    சின்ன விழி பார்வையிலே 
    சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் 
    சொன்ன கதை புரியவில்லை (என்ன)

    ஆ.ஆ..ஆ.அஹாஹஹா 

    உன்னைத்தான் கண்டு சிரித்தேன் 
    நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன் (உன்னைத்தான்)
    என்னைத்தான் எண்ணி  துடித்தேன் 
    எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன் 
    பெண்மை பூவாகுமா 
    இல்லை நாளாகுமுமா 
    இது  தேனோடு பாலாகுமா 


    என்ன என்ன வார்த்தைகளோ 
    சின்ன விழி பார்வையிலே 
    சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் 
    சொன்ன கதை புரியவில்லை (என்ன)

    ஆ.ஆ..ஆ.அஹாஹஹா 

    நிலவே உன்னை அறிவேன் 
    அங்கே நேரே ஓர்  நாள் வருவேன் (நிலவே )

    மலர்ந்தால் அங்கு மலர்வேன் 
    இல்லை பனிபோல் நானும்மறைவேன் 
    இன்னும் நான் என்பதா உன்னை நீ என்பதா 
    இல்லை நாம் என்று பேர் சொல்வதா 

    என்ன என்ன வார்த்தைகளோ 
    சின்ன விழி பார்வையிலே 
    சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் 
    சொன்ன கதை புரியவில்லை (என்ன)



    புதன், 13 செப்டம்பர், 2017

    இசையும் நானும்(231)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-நினைத்த போது நீ வர வேண்டும்


    இசையும் நானும்(231)-SONG ON LORD SRI MURUGA-பாடல்-நினைத்த போது நீ வர வேண்டும்


    பாடியவர்:டி .எம்.சௌந்தர்ராஜன்.
    முருகா..நீ வரவேண்டும்.
    முருகா.நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
    முருகா..நீ வரவேண்டும்
    நினைத்தபோது நீ வரவேண்டும் நீல எழில் மயில் மேலமர் முருகா (நினைத்தபோது ) உனையே நினைந்து உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே (நினைத்தபோது) கலியுக தெய்வம் கந்தா நீயே
    கருணையின் விளக்கம் கடம்பா நீயே
    மலையெனத் துன்பம் வளர்ந்திடும்போது
    மாயோன்..முருகா..முருகா.
    என்றே..(நினைத்தபோது ) நீ வரவேண்டும் ..நீ வரவேண்டும் ..



    செவ்வாய், 12 செப்டம்பர், 2017

    இசையும் நானும்(230)-SONG ON LORD SRI RANGANAATHA -பாடல்-பச்சைமா மலைபோல் மேனி


    இசையும் நானும்(230)-SONG ON LORD SRI RANGANAATHA -பாடல்-பச்சைமா மலைபோல் மேனி






    MOUTHORGAN-SONG ON LORD SRI RANGANAATHA 

    பாடல் தொகுப்பு -திருமாலை
    இயற்றியவர்- தொண்டரடிப்பொடி ஆழ்வார் 



    பச்சைமா மலைபோல் மேனி
    பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா அமரர் ஏறே
    ஆயர்தம் கொழுந்தே என்னும்

    இச்சுவை தவிர யான்போய்
    இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்கமா நகர் உளானே

    ஊர் இலேன் காணி இல்லை
    உறவு மற்று ஒருவர் இல்லை
    பாரில் நின் பாத மூலம்
    பற்றிலேன் பரம மூர்த்தி!

    காரொளி வண்ணனே என்
    கண்ணனே கதறு கின்றேன்,
    ஆருளர் களைக் கணம்மா
    அரங்க மா நகர் உளானே



    ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

    இசையும் நானும் (229) திரைப்படம் -மன்னாதி மன்னன் பாடல்:அச்சம் என்பது மடமையடா

    இசையும் நானும் (229)  

    திரைப்படம் -மன்னாதி மன்னன்  

    பாடல்:அச்சம் என்பது மடமையடா



    MOUTHORGAN




    Movieமன்னாதி மன்னன் MusicViswanathan Ramamoorthy
    Year1960LyricsKannadasan
    SingersM. L. Vasanthakumari, T. M. Soundararajan
    பாடல்:

    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)



    கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மன்னன்
    இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
    இசை பட வாழ்ந்தான் பாண்டியனே  (அச்சம்)



    கருவினில் வளரும்  மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
    காத்திட எழுவான் அவள் பிள்ளை  (அச்சம்)



    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார் (அச்சம்)




    சனி, 9 செப்டம்பர், 2017

    புதன், 6 செப்டம்பர், 2017

    இசையும் நானும் (227) TAMIL DEVOTIONAL-SONG ON LORD MURUGA




    இசையும் நானும் (227)  

    TAMIL DEVOTIONAL-SONG ON LORD MURUGA

       

    பாடல்:உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

    பாடியவர்-T.M.SOUNDARRAJAN 


     


    MOUTHORGAN


    உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
    உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
    முருகா முருகா

    கற்பனையில் வருகின்ற சொற்பதமே
    அன்பு கருணையில் உருவான அற்புதமே
    கற்பனையில் வருகின்ற சொற்பதமே
    அன்பு கருணையில் உருவான அற்புதமே
    சிற்பச்சிலையாக நிற்பவனே
    சிற்பச்சிலையாக நிற்பவனே
    வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
    முருகா முருகா

    உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

    அமுதம் இருக்கின்ற பொற்குடமே
    இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
    அமுதம் இருக்கின்ற பொற்குடமே
    இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
    குமுத இதழ் விரிந்த பூச்சரமே
    குமுத இதழ் விரிந்த பூச்சரமே
    உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
    முருகா முருகா

    உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

    உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
    எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
    முருகா முருகா முருகா முருகா