சனி, 7 ஜனவரி, 2017

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்றால் என்ன ?

கடவுள் என்றால் என்ன?
அது அதுவா அல்லது
அவனா அல்லது
அவளா அல்லது
இரண்டுமா ?

எல்லாவற்றையும் கடந்து உள்ளே
சென்றால் அங்கிருப்பது கடவுள் என்கிறார்கள்.

அதற்கு  இந்த உயிர் இடம் கொண்டுள்ள
உடலே ஆலயம் என்கிறார்கள்.
புறத்தே திரியும் நம் மனதை
உள்ளே திருப்பினால் இந்த
உடலுக்குள் இருக்கும் "அதை"
காணலாம் என்கிறார்கள்.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்
புறத்தே ஆலயங்களை நிர்மாணித்தார்கள்.

அதன் கருவறையில் ஒரு வடிவத்தை அமைத்தார்கள்.
இருளில் ஒன்றும் தெரியாமையால் ஒரு தீபத்தை
ஏற்றி வைத்தார்கள்.

அப்படியும்  தெளிவாக தெரியாமையால்
சூடத்தை ஏற்றி தெளிவாக வடிவத்தை காணுமாறு
செய்தார்கள்.

அந்நேரம் கோயில் மணி ஒலிக்கச் செய்தார்கள்

அங்கு குழுமியிருந்த அனைவரும் அனைத்தையும் மறந்து.தன்னையும் மறந்து சுற்றுப்புறத்தையும் மறந்து அந்த வடிவத்தின் மீதும் ஒளியின் மீதும்
தங்கள் கவனத்தை சிதறாமல் நிலைக்க செய்தார்கள்.

அந்த குறிப்பிட்ட நொடியில் அடைந்த அமைதியும் ஆனந்தத்தை
தினமும் தங்கள் வாழ்வில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அனுதினமும்  ஆலய வழிபாடு செய்ய சொன்னார்கள்.

இவ்வாறு செய்த புற  வழிபாட்டை அக  வழிபாடாக  செய்து
பழகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

செய்தவர்கள் தனக்குள் அந்த கடவுளை கண்டுகொண்டார்கள்

செய்யாதவர்கள் இன்னும் ஆலயங்களுக்கு இயந்திரம் போல்
சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள்.

நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள்  மனதிற்கு தோன்றிய
கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறர்கள்.

இன்னும் தொடரும்

2 கருத்துகள்: